Verse 34
மன்னிய வாய்மொழி யாலும்
மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலும் ஆமே.
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலும் ஆமே.
Translation:
They respect it, through their
words
The Isa who occurs inside as
sweet music/the Lord who arises within the sweet music.
The Brahma who created the
world later
Also seeks him. He can be
realized.
Commentary: This verse talks about nadha Brahman. The first two lines may mean “the lord who is
the essence of sweet music is praised by people through sweet words”. It may also mean the lord who arises within,
as sweet music, is praised by people through words.” The Supreme is the origin of nadha, the
primordial sound from which all the sounds, words and sentences originate. The four states of sound, the paraa which is
pure energy, pashyanthi, the first state of manifestation, the madhyama-the
state of thoughts and vaikaree- the state of audible sound all these originate
from the nadhaa aspect of the Divine. Thus
the Lord is the essence of the sweet music.
For the second interpretation:
When a yogin engages in
kundalini yoga he hears various sounds within.
These sounds, ten in number, arise because when the prana flows through
the important ten energy channels or dasa naadi, these channels get activated
and produce a sound. Over time, when the prana flows through them continually,
these sounds stop. Tirumular calls the sound that arises so within as Isa. This sound precedes the words stage.
Tirumular continues this
thought and says that even Brahma, the creator, seeks the lord. Brahma is a member of the jiva varga.
இப்பாடல் நாதப்பிரம்மத்தைப் பற்றிப் பேசுகிறது. நாம் வாயால் பேசும் மொழி நான்கு நிலைகளைக்
கொண்டது. அவை பரா என்னும் சக்தி நிலை,
பஷ்யந்தி என்னும் வெளிப்பாட்டின் முதல் நிலை, மத்யமா என்னும் எண்ண நிலை மற்றும்
வைகரீ என்னும் ஓசை நிலை. வாய்மொழியாலும்
என்று திருமூலர் கூறுவது வைகரீ நிலையைக் குறிக்கும். இதனால் இந்த நான்கு நிலைகளாலும் இறைவனைப் போற்ற
வேண்டும் என்று அவர் கூறுவதாகிறது.
உள்ளே எழும் ஓசை என்பது ஒரு யோகி குண்டலினி யோகத்தின்போது
எழும் பத்துவித ஓசைகளைக் குறிக்கும். பிராணன்
முக்கியமான பத்து நாடிகளில் ஓடும்போது அந்த நாடிகள் பூரித்து எழுப்பும் ஓசையே
பத்துவித ஓசைகளாகக் கேட்கப்படுகின்றன.
இந்த தசனாடிகளில் பிராணன் தொடர்ந்து
ஓடும்போது இந்த ஓசைகள் நாளடைவில் நின்றுவிடுகின்றன. இவ்வாறு உள்ளே எழும் ஓசையை ஈசன் என்கிறார் திருமூலர். இந்த ஈசனை படைப்புத் தொழிலைச் செய்யும்
பிரம்மனும் உள்ளே உன்னுகிறான் என்கிறார் அவர்.
பிரம்மா, விஷ்ணு ருத்திரன் ஆகியோர் ஜீவவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.
No comments:
Post a Comment