Verse 29
நந்தி அருளாலே மூலனை
நாடிப்பின்
நந்தி அருளாலே சதாசிவ னாயினேன்
நந்தி அருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளாலே நான்இருந் தேனே.
நந்தி அருளாலே சதாசிவ னாயினேன்
நந்தி அருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளாலே நான்இருந் தேனே.
Translation:
By Nandi’s grace, seeking
Moolan
By Nandi’s grace I became
Sadasivan
By Nandi’s grace I approached
it within meijnana
By Nandi’s grace, I remained.
Commentary: Moolan represents muladhara, the starting
point of kundalini’s journey. This line may also be referring to the historical
episode of Tirumular seeking the cowherd Moolan and entering his body.
The Sadasivan is a state which
is the junction of the asuddha maya emanations and suddha maya emanations. This
state is represented by Siva’s blue throat which indicates that the principles that
turn poison if consciousness descends to lower states become amrit when it ascends.
Sadasivan is the starting
point of the manifested universe. Thus,
Tirumular is the lord of the manifested universe. He directs it from his higher state of
consciousness.
Meijnana is supreme
wisdom. One attains this at the state of
Paraaparai, when one experiences para avatthai which will be described later in
tantiram 8. This meijnana is attained when consciousness goes beyond the
Sadasiva state. The state next to meijnana
or bodham is becoming the jnana itself, becoming the embodiment of jnana or
grace. Tirumular calls this as arul
uruvam in tantiram 9.
Thus, this verse describes the
steps in raising the consciousness from its lowest nascent state to the ultimate
state. One begins from its state in mooladhara,
through yogam one attains the Sadasiva state, goes beyond this state also to
ultimately remain as the Supreme “irundhEn” refers to this state. All these are possible only because of Nandhi
or supreme consciousness.
மூலன் என்பது மூலாதாரத்தில் இருக்கும் ஆத்ம நிலை. அது அறிவுநிலையாதலால் மூலம் என்னாது மூலன்
என்கிறார். மூலனை நாடினேன் என்பதற்கு
விரிவுரையாளர்கள் மூலன் என்னும் மாடுமேய்ப்பனை நாடி அவனது உடலினுள் திருமூலர் புகுந்து
இந்த நூலை இயற்றினார் என்றும் கூறுகின்றனர்.
சதாசிவனானேன் என்று திருமூலர் அடுத்துக் கூறுவதும் உணர்வு
நிலையே. சதாசிவ நிலை அசுத்த மாயையின்
வெளிப்பாடுகளுக்கும் சுத்த மாயையின் வெளிப்பாடுகளுக்கும் இடைப்பட்ட நிலை. இதைத்தான் சிவபெருமானின் நீலகண்ட உருவம்
காட்டுகிறது. விழிப்புணர்வு கீழ்நோக்கி
இறங்கும்போது நஞ்சாக இருக்கும் அதே தத்துவங்கள் அது மேலே ஏறும்போது அமிர்தமாக
மாறுகின்றன என்பதை நீலகண்டம் காட்டுகிறது.
சதாசிவ தத்துவமே வெளிப்பாடுடைய உலகிற்கு அதிபதி. இதனால் திருமூலர் இந்த நிலையில் உலகை வழிநடத்துகிறார்
என்பது புலனாகிறது. இந்த நிலையை அடுத்து
அவர் மெய்ஞ்ஞான நிலையை அடைந்தேன் என்கிறார்.
மெய்ஞ்ஞான நிலை என்பது போத நிலை, பராபரையின் நிலை. இந்த நிலைக்கு அடுத்தது
ஞானமாகவே மாறுவது. அதைத் திருமூலர்
அருளுருவம் என்கிறார். இந்த நிலையை அவர் “இருந்தேன்”
என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.
இவ்வாறு இந்தப் பாடல் குண்டலினி யோகத்தின் படிகளைக்
குறிக்கிறது. மூலாதாரத்தில் தொடக்கி சதாசிவ
நிலையை அடைந்து, மெய்ஞ்ஞானம் பெற்று பின் அதுவாகவே ஆவதுதான் யோகத்தின்
குறிக்கோள். இவையனைத்தும் நந்தியின்
அருளால், விழிப்புணர்வின் அருளால்தான் சாத்தியமாகின்றன என்று கூறி அவர் இப்பாடலை
முடிக்கிறார்.
அம்மா சிவராத்திரியின் உண்மை விளக்கம் பற்றி அறியத்தருமாறு வேண்டுகிறேன்.
ReplyDeleteசிவ ராத்திரியைப் பற்றித் தெரிந்ததைக் கூறுகிறேன். லிங்கத்தில் யோனி சக்தியின் உருவம். அதுவே நமது உடலில் சக்கரங்களாக இருக்கின்றன. அவற்றின் ஊடே சக்தி எழுவதே லிங்கோத்பவம். இந்த சக்தி எழுச்சி உச்ச நிலையில் ஏற்படுவதே சிவராத்திரியின் மகத்துவம். திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் சிவ தரிசனம் என்ற பகுதியைப் பாருங்கள்.
ReplyDeleteமிக்க நன்றி அம்மா
ReplyDelete