Verse 18
சேர்ந்திருந் தேன்சிவ
மங்கைதன் பங்கனைச்
சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்
சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே.
சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்
சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே.
Translation:
I remained associated with the
consort of lady of siva (with Siva)
I remained associated with
sivan aavadu thanturai/the way sivan associates with the beast
I remained in the shades of
Siva Bodhi
I remained reciting the names
of Siva
Commentary: Tirumular
describes the state. He remained associated
with Siva, the consort of Sakthi. He remained in the Sivan aavadu than thurai,
remained in the shade of Siva Bodhi, remained uttering Siva’s names.
Aavadu thanthurai and Bodhi are
both considered to be a place and tree.
These words have other means too.
We already saw sivan aavadu
thanthurai is the way siva is reached by the pasus-jiva. Bodhi is a derivative of the word
bodham. Thus, Siva Bodhi is the one who
teaches the wisdom of Siva, the wisdom Siva granted. This name is applicable to
Sakthi also as it is Sakthi who is the bodham, the awareness that leads to
Siva.
திருமூலர் தான் இருந்த நிலையை இப்பாடலில் விளக்குகிறார். தான் மங்கைப்பங்கன், சிவனுடன் சிவன்
ஆவடுதுறையில் சிவபோதி நிழலில் சிவநாமங்களைச் சொல்லியபடி இருந்தேன் என்கிறார்
அவர். பொதுவாக ஆவடுதுறை போதி ஆகியவை ஒரு
இடம் ஒரு மரம் என்று கருதப்பட்டாலும் அவற்றிற்கு மற்றொரு பொருளும் உள்ளது.
சிவன் ஆவடுதண்துறை என்பது சிவன் ஜீவனான ஆவை, பசுவை, அடையும்
வழி என்று முன்பே பார்த்தோம். சிவ போதி
என்பதும் அதேபோல் வேறொரு பொருளைத் தருகிறது.
போதி என்பது போதம் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகக் கொண்டால் சிவ போதி
என்பது சிவத்தைப் போதிப்பவன் என்ற பொருள் கிட்டுகிறது. இதனால் சிவ போதி என்பது குரு என்று
பொருள்படுகிறது. சிவன், அறிவை போதிப்பவனான
இறைவன் என்றும் இதற்குப் பொருள் கிட்டுகிறது.
சிவத்தைப் போதிப்பவர் என்ற பெயர் சக்திக்கும் பொருந்தும். ஏனெனில் ஒன்றான பராபரம் போதமதாகப் புணரும்போது
சக்தியாக பராபரையாக விளங்குகிறது என்று திருமூலர் பின் தந்திரத்தில் கூறுகிறார்.
No comments:
Post a Comment