Verse 22
செல்கின்ற வாறறி சிவமுனி
சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர் நரர்தம்பால்
ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே.
வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர் நரர்தம்பால்
ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே.
Translation:
Learn the path of my travel,
Sivamuni, Siddhasan
Those with victorious jnana in
excess, as muni,
The countless Deva, Asura,
humans, to them
I came through the
sky.
Commentary: Tirumular addresses
Sivamuni and Siddhasa. He tells them that
he travelled through the path of the sky.
In the Siddha folklore traveling in the sky is called gagana
margam. There are some reports on
Tirumular’s knowledge about magical potions that would help one travel through
the sky. This verse may be referring to
it. Or, it may mean that he came into
the manifested world of five elements the first one in the order of emergence
is the sky. The other elements occur
following the sky. Thus the path of sky
is the path of emergence of the elements, the basis for this world. The order of souls he is mentioning, the muni,
the deva, the asura and the humans also refers to the hierarchy of souls, the
superior one being the muni or ascetics.
The Devas, asuras and humans refer to the different types of souls that
he will talk about later.
சிவமுனிக்கும் சித்தசனுக்கும் கூறுவதாக அமைந்துள்ள
இப்பாடலில் திருமூலர் தான் வான்வழியாக வந்தேன் என்கிறார். சித்தர் பரிபாஷையில் இது ககனமார்க்கம்
எனப்படும். இவ்விதம் பயணிக்கத் தேவையான
குளிகைகளைப் பற்றி திருமூலர் அறிந்திருந்தார் என்று நூல்கள் கூறுகின்றன. வான் என்பது ஐம்பூதங்களில் முதலில் தோன்றும்
தத்துவம். வான் வழி வந்தேன் என்று திருமூலர் கூறுவது வெளிப்பாடற்ற நிலையிலிருந்து
ஐம்பூதங்களால் ஆன இவ்வுலகுக்கு வந்தேன் என்று அவர் கூறுவதாகவும் கொள்ளலாம். அவர் முனிவர், தேவர், அசுரர் நரர் என்று
கூறுவது ஜீவன்களின் பரிணாம நிலைகளைக் குறிக்கும்.
ஜீவர்களின் வகைகளை அவர் எட்டாம் தந்திரத்தில் விளக்குகிறார்.
நன்றி அம்மா
ReplyDeleteசித்தர் பாதங்களே சரணம்.
ReplyDelete