Verse 27
ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு
வத்தினை
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை அச்சிவன் றன்னை அகோசர
வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை அச்சிவன் றன்னை அகோசர
வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.
Translation:
The object of knowledge, the
knowledge, the knower
The maya, parai and others,
who come from mahamaya
That assemblage, the sivan,
the one that is beyond
The bheeja/bindu, I explained
it completely.
Commentary: Tirumular is listing the concepts that he has
explained in Tirumandiram. They are the
object of knowledge, knowledge, the knower, the asuddha maya, the suddha maya,
the parai, the origin, the siva and the inexplainable bheejam, the bindu from
which everything emerges.
திருமந்திரத்தில் தான் விளக்கியுள்ள விஷயங்களை திருமூலர்
இப்பாடலில் குறிப்பிடுகிறார். அவை ஞானம்-
ஒரு விஷயத்தைப் பற்றிய அறிவு , ஞாதுரு- அவ்வாறு அறிபவன், ஞேயம்- அறியப்படும்
பொருள், மாயை, மாமாயம் எனப்படும் சுத்த மாயையிலிருந்து தோன்றும் பரை என்னும் சக்தி
மற்றும் பலர், சிவன், அவரைக் கடந்துள்ள ஒன்று, இவையனைத்துக்கும் காரணமாக இருக்கும்
பீஜம் அல்லது விதையான பரம்பொருள் ஆகியவற்றைப் பற்றி முழுவதுமாக இந்நூலில்
விளக்கியுள்ளேன் என்கிறார் திருமூலர்.
No comments:
Post a Comment