Verse
3
முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்
தன்னையப் பாஎனில் அப்பனு மாய்உளன்
பொன்னையொப் பாகின்ற போதகத் தானே.
தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்
தன்னையப் பாஎனில் அப்பனு மாய்உளன்
பொன்னையொப் பாகின்ற போதகத் தானே.
Translation:
He
precedes the three who are equivalent
The
chief who has none equal to him
He
remains as father if addressed so
The
wise one who like the gold.
Commentary: Thirumular says that Sivan is more ancient
than the holy triad of Brahma, Vishnu and Rudra. Brahma, Vishnu and Rudra are states that
occur based on the number of innate faults or mala operating. For example Brahma has the five mala- aanava,
karma, maya, mayeya and tirodhaya operating while Sadasiva is under the influence
of only aanava. Siva, on the other hand,
is beyond these limitations. He is the
root cause of these limitations. Hence,
he precedes the holy triad. He is the
incomparable supreme. His position as the greatest of the great does not make
him lose his loving and caring nature or his simplicity.
If
anyone calls him as “Father” he remains as their loving father.
Scriptures
say that the Lord has the two qualities svamithvam and saulabhyam. Svamithvam is being the lord of everything,
being omnipotent. Saulabhyam is
simplicity, easy approachability.
Through svamithvam Lord gives us everything required for our
liberation. Through saulabhyam he
understands our miseries, comes to us voluntarily and relieves us. Thus, mere svamithvam will make him harsh as
he will only see our faults and with saulabhyam only he cannot do anything but
only commiserate with us. The two qualities
together make him the supreme lord.
Another quality that helps him in this respect is bodham or
omniscience. He is the repository of all
knowledge and hence knows why we are suffering, what we need to get rid of it,
and grants us what we need.
He is the bodhakan- the wise one, the
embodiment of jnana or wisdom.
சிவனின் பெருமையைக் கூறிவரும் திருமூலர் இப்பாடலில் சிவன்
மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்றவர்களுக்கும் மூத்தவன்
என்கிறார். பிரம்மா, விஷ்ணு, உருத்திரன்
என்பவை மூன்று நிலைகள். அவை ஐந்து
மலங்களான ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி என்பவற்றில் எத்தனை மலங்கள்
செயல்படுகின்றன என்பதைப் பொறுத்த நிலைகள்.
பிரம்மா என்னும் நிலையில் ஐம்மலங்களும் செயல்படுகின்றன, சதாசிவ நிலையில்
ஆணவம் மட்டுமே உள்ளது. அனால் சிவன்
மலங்களால் தீண்டப்படாதவர். இந்த நிலைகள்
தோன்றுவதற்குக் காரணமாக இருப்பவர். அதனால்
அவர் மும்மூர்த்திகளுக்கு மூத்தவர்.
அவர் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர். அவர் அத்தனை பெருமை மிக்கவராயினும் அடியார்கள்
அணுகுவதற்குச் சுலபமாக இருப்பவர்.
இறைவனுக்கு உள்ள இரு முக்கிய குணங்கள் சுவாமித்வம் சௌலப்யம்
என்று நூல்கள் கூறுகின்றன. சுவாமித்வம்
என்பது அனைத்துக்கும் அதிபதியாக இருப்பது.
இந்தக் குணத்தால் எதையும் செய்யக்கூடிய திறமை, அளிக்கக் கூடிய திறமை
அவரிடம் இருக்கிறது. சௌலப்யம் என்பது
எளிமை. இந்தத் தன்மையினால் அவர் உயிர்கள்
படும் துன்பம் கண்டு இரங்குகிறார், அவர்களைத் தான் அடைந்து அவர்களுக்கு விடுதலை
அளிக்கிறார். இந்த இருகுணங்களில்
சுவாமித்வம் மட்டும் இருந்தால் கருணை இருக்காது, சௌலப்யம் மட்டும் இருந்தால் கருணை
கொள்ள முடியும் ஆனால் வேறு எதையும் செய்ய முடியாது. இது நாம் பிறரது துன்பத்தைக் கண்டு
வருந்துவதைப் போன்றது. இறைவனிடம்
இவ்விருகுணங்களும் இருப்பதால் அவரால் கருணை கொண்டு நாம் நம் துன்பத்திலிருந்து
விடுதலை பெறுவதற்கு உதவ முடியும். இதில் அவருக்கு
உதவுவது போதம், அனைத்தைப் பற்றிய அறிவு, பரிபூரண ஞானம். நமக்கு எது நல்லது, எது தேவையில்லை என்று
அறிந்து அவர் நமக்கு உதவுகிறார். திருமூலர் இப்பாட்டில் இறைவனின் இந்தக்
குணங்களைப் போற்றுகிறார்.
No comments:
Post a Comment