Saturday, 28 February 2015

1.2.4. He is the mother

Verse 4
தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை
சேயனு மல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. 

Translation:
He is more scorching than the fire, cooler than water
Still, there is no one who knows his grace
He is the smallest of small and biggest of big, for the good beloved
He is better than the mother, the one with cool dreadlocks.

Commentary: 
When we try to describe something that is hard to describe we usually say that is like “this” but more or less.  Here Tirumular is trying to describe the greatness of Siva which is beyond verbal description.  So he is talking about a familiar entities like the fire, water, mother and says that the Lord is more scorching than the fire and more pleasant than water.  Fire is mentioned here to describe his anger towards our digressions from the path that he has prescribed.  The five actions called the five greats sins- thievery, lying, cheating, desiring another’s wife and murder are the worst of the sins one may commit.  When one does any one of these actions Siva’s anger scorches him more severely than the sun.  Water is cooling in nature. It provides solaces to parched souls.  Siva provides a solace which is much more of a salve than water.  Hence, one cannot even comprehend his anger or mercy.  That is why Tirumular says that there is no one who can comprehend his grace. 
It is said that the Lord’s punishment is also a form of arul or grace as it quickly removes the soul from its sinful state and brings it to the right path.  Hence, the Lord is more merciful, caring and loving than one’s biological mother. 
In the previous verse Tirumular called Siva the father.  Here he calls him the mother.  While a father instills discipline in the offspring the mother showers unconditional love.

வார்த்தைகளால் விளக்குவதற்குக் கடினமான ஒன்றைப் பற்றிப் பேசும்போது அனைவரும் அறிந்த ஒன்றைக் கூறி இது அதைவிட அதிகமானது அல்லது குறைவானது என்று கூறுவது வழக்கம்.  இறைவனின் தன்மை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.  அதனால் அனைவரும் அறிந்த தீயையும், நீரையும் தாயையும் குறிப்பிட்டுவிட்டு இறைவனின் தன்மை அதினினும் அதிகமானது என்று கூறுகிறார் திருமூலர்.  நாம் செய்யும் பாவங்களைக் கண்டு கோபிக்கும் சிவனின் கோபம் தீயினும் வெப்பமானது.  தண்ணீர் மிகவும் குளுமையானது.  அனைவருக்கும் ஆசுவாசத்தை அளிப்பது.  சிவனின் அருள் நீரினும் குளுமையானது.  அதனால் அவனது அருளை முழுவதுமாக அறிந்தவர் இவ்வுலகில் ஒருவரும் இல்லை என்கிறார் திருமூலர்.
இறைவன் நமது தவறுகளுக்கு அளிக்கும் தண்டனையும் ஒருவித அருள்தான் என்று பெரியோர் கூறுகின்றனர்.  எவ்வாறு ஒரு மருத்துவர் ஒரு கட்டியை அறுத்து நமக்கு நமது நோயிலிருந்து விடுதலை அளிக்கிறாரோ அதே போல் தண்டனை என்ற பெயரில் இறைவன் நம்மை விரைவாக நமது தவறான வழியிலிருந்து திருத்தி சரியான பாதையில் நடக்கச் செய்கிறார்.  இதனால் அவரது அன்பு நமது பௌதிகத் தாயைவிட மேலானது என்கிறார் திருமூலர். 

முந்தைய பாடலில் திருமூலர் இறைவனை தந்தை என்று அழைத்தார்.  இப்பாடலில் அவர் இறைவனைத் தாய் என்கிறார்.  ஒரு தந்தை தனயனுக்கு ஒழுக்கத்தைப் போதிக்கிறார்.  தாயோ அளவற்ற அன்பைப் பொழிகிறார்.  

Friday, 27 February 2015

1.2.3 Swami, Saulabhyan, bodhagan

Verse 3
முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்
தன்னையப் பாஎனில் அப்பனு மாய்உளன்
பொன்னையொப் பாகின்ற போதகத் தானே.

Translation:
He precedes the three who are equivalent
The chief who has none equal to him
He remains as father if addressed so
The wise one who like the gold.

Commentary:  Thirumular says that Sivan is more ancient than the holy triad of Brahma, Vishnu and Rudra.  Brahma, Vishnu and Rudra are states that occur based on the number of innate faults or mala operating.  For example Brahma has the five mala- aanava, karma, maya, mayeya and tirodhaya operating while Sadasiva is under the influence of only aanava.  Siva, on the other hand, is beyond these limitations.  He is the root cause of these limitations.  Hence, he precedes the holy triad.  He is the incomparable supreme. His position as the greatest of the great does not make him lose his loving and caring nature or his simplicity.
If anyone calls him as “Father” he remains as their loving father.
Scriptures say that the Lord has the two qualities svamithvam and saulabhyam.  Svamithvam is being the lord of everything, being omnipotent.  Saulabhyam is simplicity, easy approachability.  Through svamithvam Lord gives us everything required for our liberation.  Through saulabhyam he understands our miseries, comes to us voluntarily and relieves us.  Thus, mere svamithvam will make him harsh as he will only see our faults and with saulabhyam only he cannot do anything but only commiserate with us.  The two qualities together make him the supreme lord.  Another quality that helps him in this respect is bodham or omniscience.  He is the repository of all knowledge and hence knows why we are suffering, what we need to get rid of it, and grants us what we need.
 He is the bodhakan- the wise one, the embodiment of jnana or wisdom.

சிவனின் பெருமையைக் கூறிவரும் திருமூலர் இப்பாடலில் சிவன் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்றவர்களுக்கும் மூத்தவன் என்கிறார்.  பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் என்பவை மூன்று நிலைகள்.  அவை ஐந்து மலங்களான ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி என்பவற்றில் எத்தனை மலங்கள் செயல்படுகின்றன என்பதைப் பொறுத்த நிலைகள்.  பிரம்மா என்னும் நிலையில் ஐம்மலங்களும் செயல்படுகின்றன, சதாசிவ நிலையில் ஆணவம் மட்டுமே உள்ளது.  அனால் சிவன் மலங்களால் தீண்டப்படாதவர்.  இந்த நிலைகள் தோன்றுவதற்குக் காரணமாக இருப்பவர்.  அதனால் அவர் மும்மூர்த்திகளுக்கு மூத்தவர்.

அவர் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்.  அவர் அத்தனை பெருமை மிக்கவராயினும் அடியார்கள் அணுகுவதற்குச் சுலபமாக இருப்பவர்.

இறைவனுக்கு உள்ள இரு முக்கிய குணங்கள் சுவாமித்வம் சௌலப்யம் என்று நூல்கள் கூறுகின்றன.  சுவாமித்வம் என்பது அனைத்துக்கும் அதிபதியாக இருப்பது.  இந்தக் குணத்தால் எதையும் செய்யக்கூடிய திறமை, அளிக்கக் கூடிய திறமை அவரிடம் இருக்கிறது.  சௌலப்யம் என்பது எளிமை.  இந்தத் தன்மையினால் அவர் உயிர்கள் படும் துன்பம் கண்டு இரங்குகிறார், அவர்களைத் தான் அடைந்து அவர்களுக்கு விடுதலை அளிக்கிறார்.  இந்த இருகுணங்களில் சுவாமித்வம் மட்டும் இருந்தால் கருணை இருக்காது, சௌலப்யம் மட்டும் இருந்தால் கருணை கொள்ள முடியும் ஆனால் வேறு எதையும் செய்ய முடியாது.  இது நாம் பிறரது துன்பத்தைக் கண்டு வருந்துவதைப் போன்றது.  இறைவனிடம் இவ்விருகுணங்களும் இருப்பதால் அவரால் கருணை கொண்டு நாம் நம் துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு உதவ முடியும்.  இதில் அவருக்கு உதவுவது போதம், அனைத்தைப் பற்றிய அறிவு, பரிபூரண ஞானம்.  நமக்கு எது நல்லது, எது தேவையில்லை என்று அறிந்து அவர் நமக்கு உதவுகிறார்.   திருமூலர் இப்பாட்டில் இறைவனின் இந்தக் குணங்களைப் போற்றுகிறார். 

Thursday, 26 February 2015

1.2.1 Siva Paratvam

1.2.1 Siva paratvam
Verse 1.
சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே.
Translation:
There is no god comparable to Sivan even if searched,
There is no one comparable to him here,
Going beyond the worlds, that day, the lotus one
With shinning golden fragrant hair.
Commentary: Thirumular is describing the glory of Siva, his supremacy, in this section. He begins the section praising Sivan as an incomparable one with golden shimmering fragrant hair.
He says that there is no one equal or superior to Sivan.
சிவனின் பெருமையை இப்பாடலிலிருந்து கூறத் தொடங்குகிறார் திருமூலர். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாமாயனான சிவன் நறுமணம் வீசும் ஜடா முடியை உடைய தாமரையான் என்கிறார் அவர். சிவனின் சடைமுடி பறந்து விரிந்துள்ள இவ்வுலகைக் குறிக்கிறது. உலகம் அல்லது பூமியின் தன்மாத்திரை அல்லது விசேஷ குணம் கந்தம் அல்லது நறுமணம். அதனால் அவர் சிவனை நறுமணம் கொண்ட சடை முடியோன் என்கிறார். தாமரை என்று அவர் குறிப்பிடுவது சக்கரங்களை. சிவன் என்பது உயருணர்வு நிலை. இந்த நிலை குண்டலினி சக்தி, விழிப்புணர்வு சக்கரங்களில் மேலே ஏறும்போது ஏற்படுகிறது. இதனால் தாமரையில் தோன்றும் சிவன் தாமரையானாகிறான்.

1.2.2 He is the means and the goal

Verse 2
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறறி யேனே. 

Translation:
There are no celestials other than him
There are no austerities other than him
There is nothing that the triad could do without him
I do not know the way to enter the town, other than him.

Commentary:  Thirumular says that everything is Sivan.  The celestials, the austerities, the holy triad of Brahma, Vishnu and Rudra who perform their functions of creation, sustenance and dissolution following his bidding and the way to reach liberation are all him.  He is the means and the goal.


அனைத்தும் சிவனே என்று இப்பாடலில் திருமூலர் கூறுகிறார்.  அமரர்கள், தவம், மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மற்றும் மோட்சத்துக்கான வழியும் சிவனே என்கிறார் அவர்.  சிவனே அடையப்படும் பொருளாகவும் அதை அடையும் வழியாகவும் இருக்கிறான்.

Tuesday, 24 February 2015

39. List of evolved souls

Verse 39
கலந்தருள் காலாங்கர் தம்பால் அகோரர்
நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்
புலங்கொள் பரமானந் தர்போக தேவர்
நிலந்திகழ் மூலர் நிராமயத் தோரே.

Translation:
The gracious Kalaangar, the Aghorar
The good Maaligai Devar, Nathaanthar
The Paramanandhar, Bogha Devar
The glorious Mular, are the niramaya.

Commentary:  This verse lists highly evolved souls.  This verse sticks out from the rest of the verses in this section.  It may be a later addition. 

இப்பாடல் ஞானம் பெற்றோரின் பெயர்களைப் பட்டியலிடுகிறது.  இங்கு பொதுவாகக் காணப்பட்ட மூலன் என்ற பெயர் இல்லாமல் மூலர் என்று இருப்பதால் இதுவும் பின்னால் சேர்க்கப்பட்டதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.  

Monday, 23 February 2015

38. Seven mata

Verse 38
வந்த மடம்ஏழு மன்னும்சன் மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடவரைத்
தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.

Translation:
The seven mata/centers, of the sanmarga,
The mata/the peak Mulan arises first,
The three thousand within the nine tantiram
He uttered the words of the beautiful agama.

Commentary: This is an interesting verse that has warranted several interpretations.  Some commentators opine that it refers to different matas or spiritual organization either established in Tirumular’s line while some others think that this refers to different spiritual paths and that Tirumular’s way is one of them.  Looking at this verse purely with the eyes of yoga, the seven mata or centers may mean the cakra.  Siddhas traditionally refer to the cakras as mata or loci and as varai or peaks as they represent the pinnacle of various principles.   Thus, the seven mata in the right/good path, the path of kundalini, are the seven cakra.  The first among them is muladhara.  Tantra means procedure, methodology.  Tirumular described the methodology in nine tantra of three thousand songs.  They are beautiful words of agama. 
Some commentators opine based on this verse that Tirumular’s name was Sundara.  There is no basis for this.  Other siddhas refer to him as Tirumulan. 

இப்பாடலுக்குப் பலவிதமாக உரையாசிரியர்கள் பொருள் கூறியுள்ளனர்.  ஏழு மடம் என்பதை திருமூலருக்குப் பின் அவரது வழியில் வந்தவர்கள் ஏழு மடங்களை நிறுவினர் என்றும் அவற்றில் முதலாவது அவரது மடம் என்று பொருள் கூறுகின்றனர்.  சிலர் ஏழு சன்மார்க்க மடங்களில் முதலாவது திருமூலரின் மடம் என்று கூறுகின்றனர்.  இதை குண்டலினி யோகக் கண்ணோட்டத்தில் பார்த்தால் ஏழு மடங்கள் என்பது ஏழு சக்கரங்களைக் குறிக்கும்.  சித்தர் பாடல்களில் சக்கரங்கள் மடம் என்று குறிப்பிடுவதைப் பல இடங்களில் காணலாம்.  அவை வரை அல்லது மலை முகடுகள் என்றும் குறிப்பிடப்படுகின்றன ஏனெனில் இவை குறிப்பட்ட தத்துவங்களின் உச்சத்தைக் குறிக்கின்றன.  அதேபோல் சன்மார்க்கம் என்பது நல்ல வழி என்று பொருள்படும்.  நல்ல வழி என்பது குண்டலினியின் பாதையை, சக்கரங்களின் ஊடே அது பயணிக்கும் வழியைக் குறிக்கும்.  இந்த சக்கரங்களில் முதலாவதாக இருப்பது மூலாதாரம்.  தந்திரம் என்பதற்கு செயல்முறை என்று ஒரு பொருள் உண்டு.  இவ்வாறு குண்டலினியை ஏழு மடங்களில் பயணிக்குமாறு செய்வதற்கான முறையைத் திருமூலர் தனது ஒன்பது தந்திரங்கள், மூவாயிரம் பாடல்கள் கொண்ட நூலில் கூறியுள்ளார். 

இப்பாடலை அடிப்படையாகக் கொண்டு சிலர் திருமூலரின் உண்மையான பெயர் சுந்தரன் என்று கூறுகின்றனர்.  ஆனால் பல சித்தர்கள் இவரைத் திருமூலர் அல்லது மூலர் என்றே குறிப்பிட்டுள்ளனர். இதனால் சுந்தர ஆகமச் சொல் என்பது அழகான மொழியில் அவர் ஆகமத்தைக் கூறியுள்ளார் என்ற பொருளே சரியானதாகத் தோன்றுகிறது.

37. What is Tirumandiram

Verse 37
வைத்த பரிசே வகைவகை நன்னூலின்
முத்தி முடிவிது மூவா யிரத்திலே
புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது
வைத்த சிறப்புத் தரும்இவை தானே.

Translation:
The gifts placed are many many in the good book (Tirumandiram)
Mukhti, this is the terminus, in the three thousand
Commit them to the buddhi, the three thousand
Will grant the glory.

Commentary: This verse says that one would get several benefits by reading the Tirumandiram.  Besides the worldly benefits it will grant the supreme benefit, the mukhti.  One should commit it to buddhi and recite it.  Buddhi is one of the modifications of the mind that controls discrimination, helps one distinguish between good and bad.  Tirumandiram is not an exclusively emotional work, a bhakti text.  It is one that needs mental cogitation and realization.


பல நூல்களில் கொடுக்கப்பட்டுள்ள ஞானத்தின் உச்சமே திருமந்திரம். இதுவே முடிவான முக்தியை அளிப்பது.  இது முக்தியை மட்டுமல்ல உலக வாழ்வில் நற்பயனையும் அளிக்கவல்லது.  இதை புத்தி பூர்வமாக ஓதினால் அனைத்துச் சிறப்பையும் தரும்.  புத்தி என்பது நல்லது கெட்டதுகளைப் பிரித்தறியும் அறிவு.  திருமந்திரத்தைப் பொருள் புரியாமல் வெறும் வார்த்தைகளாக ஓதகூடாது.  இது அர்த்தம் புரியாமல் ஓதும் பக்தி ஸ்லோகம் அல்ல.  பொருள் புரிந்து அந்தப் பொருளை மனதுள் வாங்கி ஒவ்வொரு நிமிடமும் கருத்தில் கொண்டு படிக்கவேண்டிய நூல்.

36. Benefit of reciting Tirumandiram

Verse 36
மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே.

Translation:
The three thousand verses composed by Mulan
Is the grace of nandi so that the world will know.
If recited waking up in the morning
It will be possible to approach the chief of the world.

Commentary: There is a conjecture that some of the verses of Tirumandiram may be later additions.  This verse seems to one such verse.  So far Tirumular has referred to himself in the first person.  In this verse he suddenly switches to third person.  However, the essence of the verse is that if one gets up in the morning and recites the 3000 verses one would get close to the lord of the universe.


திருமந்திரத்தில் உள்ள பாடல்களில் சில இடைச்செருகலாக இருக்குமோ என்று சில உரையாளர்கள் கருதுகின்றனர்.  இப்பாடல் அத்தகைய இடைச்செருகல் போலத் தோன்றுகிறது.  இப்பாடல் வரை திருமூலர் தன்னைப் பற்றித் தன்மையில் கூறியுள்ளார்.  இப்பாடலில் திடீரென படர்க்கையில் தன்னைக் குறிக்கிறார்.  அது எவ்வாறு இருக்கினும் இப்பாடல் ஒரு முக்கியமான கருத்தை நமக்குக் கூறுகிறது.  தினமும் காலையில் எழுந்து திருமந்திரத்தின் பாடல்களைக் கருத்தூன்றிப் படித்தால் உலகத்தலைவனான இறைவனை அணுகலாம் என்று இப்பாடல் நமக்கு அறிவுறுத்துகிறது.

Sunday, 22 February 2015

35. Tattva jnana

Verse 35
தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக் கிருந்த முனிவருந் தேவரும்
ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும்
பத்திமை யால்இப் பயன்அறி யாரே. 

Translation:
The tattva jnana was revealed in the mountain shelves
The munivar and deva who waited for mukhti
Remained as different yet equivalent, praising
With devotion. They do not know this benefit.

Commentary:  Tirumular says that the tattva jnana or wisdom about the principles was imparted in the mountain shelf or its foothills.  The mountain mentioned here is Himalayas.  However, the muni and devas who were waiting to attain mukthi worshipped him with devotion by remaining equivalent yet different from him.  They are equivalent as they are also nothing but consciousness.  They are different from him as they perceive themselves as different and distinct from him.  Hence, they did not know the benefit the great state that it can confer.

The Supreme is unlimited consciousness.  So is the Jiva.  However, the jiva perceives itself to be limited and different from the Supreme.  As long as this sense of distinction remains the supreme state, the ultimate benefit, cannot be attained.


சிவபெருமான் மிக உயர்ந்த ஞானமான தத்துவ ஞானத்தை மலையின் தாழ்வரையில் உபதேசித்தார் என்கிறார் திருமூலர்.  இங்கே மலை என்று குறிப்பிடப்படுவது இமயமலையாகும். அவர் உபதேசித்த மிக உயர்ந்த ஞானம் எதுவென்றால் இவ்வுலகும் அதில் இருக்கும் உயிர்களும் உணர்வு அன்றி வேறில்லை.  இறைவன் பரவுணர்வு, ஜீவன் அளவுக்குட்பட்ட உணர்வுநிலை.  இந்த அளவுக்குட்பட்ட நிலை ஜீவன் தன்னை அளவுக்குட்பட்டவன் என்று எண்ணுவதால் ஏற்படுவது.  இவ்வாறு இறைவனும் ஜீவனும் ஒத்தநிலையை, உணர்வாக இருக்கும் நிலையை உடையவர்கள் ஆனால் தான் வேறுபட்டவர்கள் என்று ஜீவன் எண்ணுகிறது. முனிவர்களும் தேவர்களும் இறைவனைத் தன்னைவிட வேறானவன் என்று எண்ணி துதிசெய்தனர்.  அதனால் அவர்கள்  இந்த உயர் ஞானத்தின் பயனை அறியார் என்கிறார் திருமூலர்.

Friday, 20 February 2015

34. Nadhabrahmam

Verse 34
மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலும் ஆமே.

Translation:
They respect it, through their words
The Isa who occurs inside as sweet music/the Lord who arises within the sweet music.
The Brahma who created the world later
Also seeks him. He can be realized.

Commentary:  This verse talks about nadha Brahman.  The first two lines may mean “the lord who is the essence of sweet music is praised by people through sweet words”.  It may also mean the lord who arises within, as sweet music, is praised by people through words.”  The Supreme is the origin of nadha, the primordial sound from which all the sounds, words and sentences originate.  The four states of sound, the paraa which is pure energy, pashyanthi, the first state of manifestation, the madhyama-the state of thoughts and vaikaree- the state of audible sound all these originate from the nadhaa aspect of the Divine.  Thus the Lord is the essence of the sweet music.

For the second interpretation:
When a yogin engages in kundalini yoga he hears various sounds within.  These sounds, ten in number, arise because when the prana flows through the important ten energy channels or dasa naadi, these channels get activated and produce a sound. Over time, when the prana flows through them continually, these sounds stop. Tirumular calls the sound that arises so within as Isa.  This sound precedes the words stage.
Tirumular continues this thought and says that even Brahma, the creator, seeks the lord.  Brahma is a member of the jiva varga. 

இப்பாடல் நாதப்பிரம்மத்தைப் பற்றிப் பேசுகிறது.  நாம் வாயால் பேசும் மொழி நான்கு நிலைகளைக் கொண்டது.  அவை பரா என்னும் சக்தி நிலை, பஷ்யந்தி என்னும் வெளிப்பாட்டின் முதல் நிலை, மத்யமா என்னும் எண்ண நிலை மற்றும் வைகரீ என்னும் ஓசை நிலை.  வாய்மொழியாலும் என்று திருமூலர் கூறுவது வைகரீ நிலையைக் குறிக்கும்.  இதனால் இந்த நான்கு நிலைகளாலும் இறைவனைப் போற்ற வேண்டும் என்று அவர் கூறுவதாகிறது.


உள்ளே எழும் ஓசை என்பது ஒரு யோகி குண்டலினி யோகத்தின்போது எழும் பத்துவித ஓசைகளைக் குறிக்கும்.  பிராணன் முக்கியமான பத்து நாடிகளில் ஓடும்போது அந்த நாடிகள் பூரித்து எழுப்பும் ஓசையே பத்துவித ஓசைகளாகக் கேட்கப்படுகின்றன.  இந்த தசனாடிகளில் பிராணன் தொடர்ந்து  ஓடும்போது இந்த ஓசைகள் நாளடைவில் நின்றுவிடுகின்றன.  இவ்வாறு உள்ளே எழும் ஓசையை ஈசன் என்கிறார் திருமூலர்.  இந்த ஈசனை படைப்புத் தொழிலைச் செய்யும் பிரம்மனும் உள்ளே உன்னுகிறான் என்கிறார் அவர்.  பிரம்மா, விஷ்ணு ருத்திரன் ஆகியோர் ஜீவவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.

Thursday, 19 February 2015

33. Tirumular's humility

Verse 33
பாடவல் லார்நெறி பாடஅறிகி லேன்
ஆடவல் லார்நெறி ஆடஅறிகி லேன்
நாடவல் லார்நெறி நாடஅறிகி லேன்
தேடவல் லார்நெறி தேடகில் லேனே.

Translation:
I do not know how to sing in the manner that expert musicians sing
I do not know how to dance in the manner that expert dancers dance
I do not know how to seek in the manner the expert seekers seek
I am not searching in the way expert searchers search.

Commentary:  Tirumular is expressing his humility in this verse.  He says that he is neither an expert musician, nor a dancer, nor an expert seeker or one who knows how to search for things.

இப்பாடலில் திருமூலர் தனது அடக்கத்தைக் காட்டுகிறார். தான் பாடவல்லவன் அல்ல, ஆட வல்லவன் அல்ல, தேட வல்லவன் அல்ல, நாடவல்லவன் அல்ல என்று அவர் கூறுகிறார்.

Wednesday, 18 February 2015

32. No one comprehends the glory of the great flame

Verse 32
ஆர்அறி வார்எங்கள் அண்ணல் பெருமையை
ஆர்அறி வார்அவ் வகலமும் நீளமும்
பேர்அறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேர்அறி யாமை விளம்புகின் றேனே.

Translation:
Who knows the fame of our lord
Who knows that length and breadth
The singular great flame whose name is not known
I am saying that not even its root is known.

Commentary:  Thirumular is explaining the greatness of the Lord in this verse.  He exclaims that no one can comprehend the enormity, the magnificence and the supremacy of the lord, the great flame.  Not even a name can be assigned to it lest it limits its glory.  Tirumular says that not even its root or origin could be known.
Saying that one does not know its dimensions represents its enormity, fitting for its name Brahman which means bruhat, that which is big and that which makes anything associating with it big.

இப்பாடலில் திருமூலர் இறைவனின் பெருமையைப் பற்றிப் பேசுகிறார்.  இறைவனின் பெருமையை அனைத்துமாக பிரம்மமாக இருக்கும் தன்மையை ஒருவராலும் அறிந்துகொள்ள இயலாது.  அத்தகைய இறைவனுக்கு ஒரு பெயரை அளிப்பதுகூட சாத்தியமில்லை ஏனெனில் அப்பெயரும் அதன் பெருமைக்குத் தக்கதாக இருக்காது.  அது பெருஞ்சுடர் என்று மட்டுமே கூற இயலும்.  அத்தகைய இறைவனின் வேரைக் கூட அறியமுடியாது என்பதைத் தான் இங்கே கூறுகிறேன் என்கிறார் அவர்.

இறைவனின் நீள அகலங்களை அறியமுடியாது என்று கூறுவது அதன் பெயரான பிரம்மம் என்பதைக் குறிக்கும்.  பிரம்மம் என்பது ப்ருஹத் அல்லது மிகப்பெரியது, தன்னை அடைபவற்றையும் மிகப்பெரியதாக ஆக்குவது என்று பொருள்படும்.

Tuesday, 17 February 2015

31. Praise for Nandhi

Verse 31
பிதற்றுகின் றேன்என்றும் பேர்நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத் திரவும் பகலும்
உயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை
இயற்றிகழ் சோதி இறைவனும் ஆமே.

Translation:
I am blabbering on all days, the name, Nandi
I will compose in the heart, night and day,
I will praise, the one with the hue of supreme light, my lord
The effulgence, the lord. 

Commentary: Having described the supreme state and that it is granted by Nandhi, Tirumular is eulogizing Nandhi.  He says that he will utter Nandhi’s name incessantly, contemplate on him and raise the light of consciousness within.


உயருணர்வு நிலை எவ்வாறு இருக்கும் என்று கூறி அதை அளிப்பது நந்தி அல்லது பரவுணர்வு என்று காட்டிய பிறகு இப்பாடலில் நந்தியைப் போற்றி வணங்குகிறார்.   நந்தியை இரவும் பகலும் போற்றுவேன் மனத்துள்ள ஞான ஒளியை உயர்த்துவேன் என்று திருமூலர் கூறுகிறார்.  

30. பொன்னார் மேனியனே- The one with the golden body

Verse 30
இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி
அருக்கிய மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரழல் வீச
உருக்கி யுரோமம் ஒளிவிடுந் தானே.

Translation:
If it has to stay it will remain for countless eons,
It will remains within the mulam
The sun and the moon spreading the fire
Melting, the hair will glow.

Commentary:  Tirumular is describing the signs of a supreme yogi.  The moon and the sun have different means in the Siddha parlance.  They are the breath flowing through the ida and pingala nadi.  They are the surya and Chandra mandala.  They are the prana and apana.  
When the breath flows through the ida and pingala nadi in a measured manner, during pranayama, it kindles the fire of the kundalini and turns it into a huge flame.  When this happens the body melts in the fire and every hair follicle will glow with a golden hue.


உச்ச நிலையில் இருக்கும் ஒரு யோகியின் நிலையை இப்பாடலில் திருமூலர் விளக்குகிறார். சித்தர்கள் பரிபாஷையில் சூரியன் சந்திரன் என்பதற்குப் பல பொருட்கள் உள்ளன.  இடை பிங்களை நாடிகளில் ஓடும் பிராணன் அபானன் என்ற இரு வாயுக்களும் சூரியன் சந்திரன் எனப்படுகின்றன.  அவை சூரிய சந்திர மண்டலங்களையும் குறிக்கும்.  இவாறு நாடிகளில் ஓடும் பிராணன் உச்ச நிலையை அடைந்து குண்டலினி அக்னியை எழுப்பும்.  இதனால் ரோமக்கால்கள் அனைத்தும் ஒளிவிட்டு உடலே ஒளியுடலாக விளங்கும்.  இந்த நிலையையே திருமூலர் இப்பாடலில் குறிப்பிடுகிறார்.  

Sunday, 15 February 2015

29. By Nandi's grace....

Verse 29
நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி அருளாலே சதாசிவ னாயினேன்
நந்தி அருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளாலே நான்இருந் தேனே.

Translation:
By Nandi’s grace, seeking Moolan
By Nandi’s grace I became Sadasivan
By Nandi’s grace I approached it within meijnana
By Nandi’s grace, I remained.

Commentary:  Moolan represents muladhara, the starting point of kundalini’s journey. This line may also be referring to the historical episode of Tirumular seeking the cowherd Moolan and entering his body.
  
The Sadasivan is a state which is the junction of the asuddha maya emanations and suddha maya emanations. This state is represented by Siva’s blue throat which indicates that the principles that turn poison if consciousness descends to lower states become amrit when it ascends. 
Sadasivan is the starting point of the manifested universe.  Thus, Tirumular is the lord of the manifested universe.  He directs it from his higher state of consciousness.
Meijnana is supreme wisdom.  One attains this at the state of Paraaparai, when one experiences para avatthai which will be described later in tantiram 8. This meijnana is attained when consciousness goes beyond the Sadasiva state.  The state next to meijnana or bodham is becoming the jnana itself, becoming the embodiment of jnana or grace.  Tirumular calls this as arul uruvam in tantiram 9.

Thus, this verse describes the steps in raising the consciousness from its lowest nascent state to the ultimate state.  One begins from its state in mooladhara, through yogam one attains the Sadasiva state, goes beyond this state also to ultimately remain as the Supreme “irundhEn” refers to this state.  All these are possible only because of Nandhi or supreme consciousness.

மூலன் என்பது மூலாதாரத்தில் இருக்கும் ஆத்ம நிலை.  அது அறிவுநிலையாதலால் மூலம் என்னாது மூலன் என்கிறார்.  மூலனை நாடினேன் என்பதற்கு விரிவுரையாளர்கள் மூலன் என்னும் மாடுமேய்ப்பனை நாடி அவனது உடலினுள் திருமூலர் புகுந்து இந்த நூலை இயற்றினார் என்றும் கூறுகின்றனர்.
சதாசிவனானேன் என்று திருமூலர் அடுத்துக் கூறுவதும் உணர்வு நிலையே.  சதாசிவ நிலை அசுத்த மாயையின் வெளிப்பாடுகளுக்கும் சுத்த மாயையின் வெளிப்பாடுகளுக்கும் இடைப்பட்ட நிலை.  இதைத்தான் சிவபெருமானின் நீலகண்ட உருவம் காட்டுகிறது.  விழிப்புணர்வு கீழ்நோக்கி இறங்கும்போது நஞ்சாக இருக்கும் அதே தத்துவங்கள் அது மேலே ஏறும்போது அமிர்தமாக மாறுகின்றன என்பதை நீலகண்டம் காட்டுகிறது.
சதாசிவ தத்துவமே வெளிப்பாடுடைய உலகிற்கு அதிபதி.  இதனால் திருமூலர் இந்த நிலையில் உலகை வழிநடத்துகிறார் என்பது புலனாகிறது.  இந்த நிலையை அடுத்து அவர் மெய்ஞ்ஞான நிலையை அடைந்தேன் என்கிறார்.  மெய்ஞ்ஞான நிலை என்பது போத நிலை, பராபரையின் நிலை. இந்த நிலைக்கு அடுத்தது ஞானமாகவே மாறுவது.  அதைத் திருமூலர் அருளுருவம் என்கிறார்.  இந்த நிலையை அவர் “இருந்தேன்” என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு இந்தப் பாடல் குண்டலினி யோகத்தின் படிகளைக் குறிக்கிறது.  மூலாதாரத்தில் தொடக்கி சதாசிவ நிலையை அடைந்து, மெய்ஞ்ஞானம் பெற்று பின் அதுவாகவே ஆவதுதான் யோகத்தின் குறிக்கோள்.  இவையனைத்தும் நந்தியின் அருளால், விழிப்புணர்வின் அருளால்தான் சாத்தியமாகின்றன என்று கூறி அவர் இப்பாடலை முடிக்கிறார்.

28. I came in the path of Kailaya

Verse 28
விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து
வளப்பிற் கயிலை வழியில்வந் தேனே.

Translation:
The meijnana jyothi that makes it clear and becomes param
The immeasurably glorious, blissful Nandhi
Following his words, that of the blissful dancer
I came in the path of the kayilai.

Commentary:  Tirumular says that he came in the path of Kailaya, following the command of Nandi, the Supreme. He calls the Nandi as the one who makes it clear.  Nandhi is consciousness which reveals everything, the supreme light of knowledge that confers bliss up on realization. Kailaya has several meanings.  Geographically it refers to the Himalayas.  This verse has led to several commentators claiming that he was from North India who came to the South and composed this work.  However, Kailaya also refers to the sahasrara.  This then indicates that Tirumular descended from the supreme state of consciousness experienced at Sahasrara to the lower state in which he composed Tirumandiram. 
Tirumular is said to belong to the Kailaya parampara.  Some call the lineage that follows from him as moola varga.

நந்தி, ஆனந்த கூத்தனின் கட்டளையை மேற்கொண்டு தான் கயிலாய வழியில் வந்தேன் என்று திருமூலர் கூறுகிறார்.  நந்தியை “விளக்கும் நந்தி” என்கிறார் திருமூலர்.  நந்தி என்பது உயருணர்வு நிலை.  அனைத்தையும் உணரவைக்கும் நிலை.  இந்த அறிவு ஆனந்தத்தை அளிக்கிறது. 

கைலாயம் என்பதற்குப் பல பொருள்கள் உள்ளன.  உலக வழக்கில் இமயமலை கைலாயம் எனப்படுகிறது.  கைலாய வழியின் வந்தேன் என்று திருமூலர் கூறுவது அவர் வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியா வந்தார் என்பதைக் காட்ட என்று சில விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.  சஹாஸ்ராரத்தின் பல பெயர்களில் கைலாயம் என்பது ஒன்று.  இதனால் கைலாயத்திலிருந்து வந்தேன் என்பது சஹாஸ்ராரத்தில் உணரப்படும் உயருணர்வு நிலையிலிருந்து உலக உணர்வு நிலைக்கு வந்தேன் என்று திருமூலர் கூறுவதாகவும் பொருள் கொள்ளலாம்.  தான் உயருணர்வு நிலையில் பெற்ற ஞானத்தை உலகமக்களுக்காக அவர் திருமந்திரமாக வடித்தார் என்பதை இது காட்டுகிறது. 

Friday, 13 February 2015

27. All the topics described in Tirumandiram

Verse 27
ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை அச்சிவன் றன்னை அகோசர
வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.

Translation:
The object of knowledge, the knowledge, the knower
The maya, parai and others, who come from mahamaya
That assemblage, the sivan, the one that is beyond
The bheeja/bindu, I explained it completely.

Commentary:  Tirumular is listing the concepts that he has explained in Tirumandiram.  They are the object of knowledge, knowledge, the knower, the asuddha maya, the suddha maya, the parai, the origin, the siva and the inexplainable bheejam, the bindu from which everything emerges.

திருமந்திரத்தில் தான் விளக்கியுள்ள விஷயங்களை திருமூலர் இப்பாடலில் குறிப்பிடுகிறார்.  அவை ஞானம்- ஒரு விஷயத்தைப் பற்றிய அறிவு , ஞாதுரு- அவ்வாறு அறிபவன், ஞேயம்- அறியப்படும் பொருள், மாயை, மாமாயம் எனப்படும் சுத்த மாயையிலிருந்து தோன்றும் பரை என்னும் சக்தி மற்றும் பலர், சிவன், அவரைக் கடந்துள்ள ஒன்று, இவையனைத்துக்கும் காரணமாக இருக்கும் பீஜம் அல்லது விதையான பரம்பொருள் ஆகியவற்றைப் பற்றி முழுவதுமாக இந்நூலில் விளக்கியுள்ளேன் என்கிறார் திருமூலர்.