Tuesday 31 March 2015

1.2.28 Let us Praise the Lord

Verse 28

தேவர் பிரான்நம் பிரான் திசை பத்தையும்
மேவு பிரான்விரி நீருல கேழையும்
தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை
பாவு பிரான்அருள் பாடலு மாமே. 

Translation:
The lord of the Devas, our lord, the lord who pervades
The ten directions, the seven worlds of with water
The lord who goes them, there is no one who knows his nature
The grace of lord who establishes these, should be sung.

Commentary: This verse establishes the supremacy of Siva as the Lord of all sentient beings and non-sentient entities like the worlds and directions.  Tirumular talks about both, his supremacy or paratvam and his easy approachability, saulabhyam when he says Siva is the Lord of the seven worlds, ten directions and the celestials and yet he is our Lord, dear to us.  Even though everything that exists are his forms no one knows his real nature.  Tirumular says that the grace or “arul” of that Lord should be eulogized.


இப்பாடலில் திருமூலர் சிவனின் பரத்துவத்தைத் தெள்ளத் தெளிவாக வலியுறுத்துகிறார்.  இறைவன், தேவர்கள், திசைகள், ஏழுலகு என்று விளங்கும் இவ்வுலகுக்குத் தலைவன். அவன் நமக்கும் தலைவன் என்று கூறுவதன் மூலம் இறைவனின் பரத்துவத்தையும் சௌலப்பியத்தையும் சுட்டிக்காட்டுகிறார்.  இவ்வாறு அனைத்தாகவும் காட்சியளிக்கும் இறைவனின் தன்மையை அறிபவர் யாரும் இல்லை என்கிறார்.  கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்பதுபோல இதைப் பற்றிப் பேசக்கூடியவர் யாரும் இல்லை.  இந்தப் பெருமானின் அருளைப் பாடுவோமாக என்கிறார் அவர்.

Monday 30 March 2015

1.2.27 I remain at the eye and love him

Verse 27
மண்ணகத் தான்ஒக்கும் வானகத்தான் ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத் தின்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே. 

Translation:
Equivalent to the one of the earth, equivalent to the one of sky
Equivalent to the one of space, equivalent to the one of Veda,
The one who is praised by sweet music and meter
I remained at the locus of the eye and loved him.

Commentary: 
The terms mannagatthaan, vaanagatthaan and vinnagatthaan usually refer to humans, celestials and liberated souls.  It also refers to a woman who contributes the womb, the earth, the man who contributes the semen which has the sky element and the Divine who is all pervading space who makes these two come together.  In this verse, Tirumular refers to another concept.  Here mannagatthaan means one who is of earth.  This term refers to Brahma who remains in the muladhara cakra, the locus of the earth principle.  Vaanagatthan then refers to  Sadasiva the lord of space principle.  Vinnagatthan refers to Siva, the pure principle.  Tirumular says that the Supreme remains as the above three.  Thus, the Supreme performs the five functions- creation, sustenance, dissolution, concealment and bestowal of grace as the various deities responsible for the same.

 The one of Veda refers to the one who performs the transformation.  Veda refers to both, scriptures and alchemy.  It is the Supreme who transforms the souls that remain the above mentioned three states so that it becomes all pervasive.  Thus, Vedagatthaan is none other than Supreme consciousness.  This Supreme manifests as the above four through nadha whose gross form is music. Paadal also means red.  There is Narasimha temple near Chennai where the hill is called Paadalaadri which means red hill.  Interestingly the Narasimha image has three eyes, like Siva.  The next line fits with this when Tirumular says I remained in the locus of the eye and loved him.  The eye referred to here is the third eye, the eye of discrimination.  Some people opine that our two eyes are the gateway to the Divine.  This is not very convincing as they are material in nature and hence limited by maya.  The third eye, the eye of discrimination is attained when the soul reaches a specific spiritual state. It feels more convincing to call this eye as the gateway to the Divine.  Hence, Tirumular should be referring to this third eye and not the material eye we are all familiar with.

மண்ணகத்தான் என்பது பொதுவாக மானிடர்களையும் வானக்கத்தான் என்பது தேவர்களையும் விண்ணகத்தான் என்பது அமரர்களையும் குறிக்கும்.  இச்சொற்கள் மண் அல்லது கருப்பையைக் கொண்ட பெண்ணையும் ஆகாச தத்துவத்தைக் கொண்ட விந்துவையுடைய ஆணையும் இவர்கள் இருவரையும் இணைக்கும் இறைவனையும் கூட குறிக்கும்.  இப்பாடலில் திருமூலர் இந்தச் சொற்களை வேறொரு பொருளில் பயன்படுத்தியுள்ளார்.  மண்ணகத்தான் என்பது மண் தத்துவத்தின் இடமான மூலாதாரத்தின் அதிபதியான பிரம்மனையும் வானகத்தான் என்பது ஆகாய தத்துவத்தின் அதிபதியான சதாசிவனையும் விண்ணகத்தான் என்பது பர நிலையையும் குறிக்கும்.  பரம்பொருள் அல்லது பரசிவன் எனப்படும் பரவுணர்வு இவையனைத்தையும், பரநிளையைக்கூட கடந்தது.  சர்வ சிருஷ்டி என்று இரண்டாம் தந்திரத்தில் திருமூலர் இவற்றை விளக்கப்போகிறார்.  பரம்பொருள் இவர்களுக்கு ஒத்ததாக இருந்து ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் அருளால் என்பவற்றை நிகழ்த்துகிறது.   
வேதகத்தான் என்பது வேதத்தின் அதிபதி என்று பொருள்படுகிறது.  வேதம் என்ற சொல் பொதுவாக மறை என்று பொருள் தந்தாலும் சித்தர்கள் பரிபாஷையில் அது ரசவாதத்தைக் குறிக்கும்.  இங்கு குறிப்பிடப்படும் ரசவாதம் ஆத்மாக்களின் அளவுக்கு உட்பட்டமையை மாற்றி அவற்றை சர்வவியாபியாக்குவது.  இதைச் செய்வதும் பரம்பொருளே. 

இத்தகைய பரம்பொருள் “பண்ணாகத்தில் நின்று பாடலுற்றான்” என்கிறார் திருமூலர்.  இறைவனின் செயல்கள் அனைத்தும் நாதத்தின் மூலமே நடைபெறுகின்றன.  நாதத்தின் வெளிப்பாடு பாடல்.  இந்த இடத்தில் நாம் பாடல் என்ற சொல்லைக் கவனிக்கவேண்டும்.  சென்னைக்கருகே பாடலாத்ரி என்றொரு குன்றில் ஒரு நரசிம்மர் கோயில் உள்ளது.  இங்கு பாடலத்ரி என்பது சிவந்த குன்று என்ற பொருளில் தோன்றுகிறது.  பாடலுற்றான் என்ற சொல்லை இப்பொருளில் பார்த்தால் குண்டலினி யோகத்தில் ஒரு யோகியின் உடல் சிவந்த நிறத்தைப் பெறுவதைக் குறிக்கிறது.  இந்த கோயிலில் உள்ள நரசிம்மர் உருவம் சிவனைப் போல மூன்று கண்களைப் பெற்றுள்ளது.  இந்த வரியை அடுத்து திருமூலர் அத்தகைய மேன்மையான இறைவனைத் தான் கண்ணகத்தில் நின்று காதலிக்கிறேன் என்கிறார்.  இங்கு அவர் குறிப்பிடும் கண் மூன்றாம் கண்ணான விழிப்புணர்வு.  சிலர் நமது பருப்பொருளான கண்ணே இறைவனை அடைவதற்கு வழி அதுவே இறைவனின் பாதம் என்று குறிப்பிடுகின்றனர்.  நமது ஊனக்கண் பிரக்கிருதியால் ஆனது, அழிவுக்கு உட்பட்டது.  மனதின் காட்டுப்பாட்டில் இருப்பது.  அதனால் அது இறைவனின் பாதமாக இருக்க முடியாது.  நமது மூன்றாவது கண் ஆக்ஞையில் இருப்பதாகக் காட்டப்படுகிறது.  அதுவே நமது ஞானக் கண்.  அக்கண்ணே இறைவனின் பாதம் அவனை அடையும் வழி.  இதைத்தான் திருமூலர் இந்த ஞானக்கண்ணால் அனைத்தையும் சரியாக உணர்ந்து அன்பெனும் நெறியில் தான் நிற்பதாகக் கூறுகிறார். 

Friday 27 March 2015

1.2.26 I am calling out to the lord like a calf..

Verse 26
வானின் றழைக்கும் மழைபோல் இறைவனும்
தானின் றழைக்குங்கொல் என்று தயங்குவார்
ஆனின் றழைக்கு மதுபோல்என் நந்தியை
நானின் றழைப்பது ஞானங் கருதியே. 

Translation:
Like the rain that descends with loud noise from the skies
The lord will also descend with a huge noise-
People hesitate thinking so.  Like the calf that calls out its mother cow
I am calling Nandi for the sake of wisdom.

Commentary:  This verse can be interpreted in two ways.  Some people say that there is no need for them to attempt any means for liberation.  Divine grace will descend on its own without requiring any effort from the soul.   Some others say that the Divine grace will descend as per its will but the soul has to ready itself through various means, to receive it. This is the major difference of opinion between the vadakalai and thenkalai Srivaishnavas.  While those who belong to the thenkalai are of the first opinion, those who belong to the vadakalai say the second argument.  In any case, sakthi nipadam or descent of grace is according to Divine will.  In Kashmir Saivism this is called anupaya or no means.  This is the supreme upaya or effort.  The soul does all that which should be done and at the last point surrenders to the Divine will and waits for its grace.  Nayanmars call this as digging the lake and waiting for the rain to descend.  One has to dig the lake to collect the rain water but when the rain would descend is entirely up to the weather.  The experience, the descent of grace is as overwhelming and as spectacular as a heavy rain accompanied by lightning and thunder. 

One is reminded of Andal’s thiruppavai verse, “aazhi mazhaikkannaa onru nee kai karavel”.  It translates as “the eyed one who pours torrential rain! do not hold back anything”.  When divine grace descends, it is a completely drenching experience which does not hold back anything.  Tirumular describes this experience in tantiram 9. 

After describing the experience Tirumular says that he is calling out to the Divine like a calf’s plea to the mother cow.  The cow does not wait for the calf to call out for nourishment or nurturing.  It does so, on its own.  The calf’s calling is only an acknowledgement.  Similarly the soul’s calling out to the Divine is only an acknowledgement, a show of its appreciating for the great experience.  Tirumular’s call is not for any minor benefit but for the supreme knowledge which transforms into supreme experience. 

இப்பாடலின் முதல் இரண்டு வரிகளுக்கு இரு விதமாகப் பொருள் கூறலாம்.  சிலர், இறையருள் வானிலிருந்து கீழே இறங்கும் மழையைப் போல தானாக ஏற்படுவது.  அதற்கு உயிர்கள் ஒரு முயற்சியையும் மேற்கொள்ளத் தேவையில்லை என்பர்.  வேறு சிலர், இறையருள் தானாக இறங்குவதுதான் ஆனால் அதைப் பெற உயிர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பர்.  ஸ்ரீ வைஷ்ணவர்களின் இரு பிரிவுகளான தென்கலை வடகலை என்பவர்களிடையே உள்ள முக்கிய வேறுபாடு இதுதான்.  முன்னவர் முதல் கருத்தையும் பின்னவர் இரண்டாம் கருத்தையும் கொண்டு செயல்படுகின்றனர்.
இது எவ்வாறு இருக்கினும் இறையருள் தானாக இறங்குவது என்பதில் ஒருவருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.

இவ்வாறு இறையருள் இறங்குவது சக்தி நிபாதம் எனப்படுகிறது. காஷ்மீர சைவம் இதை அனுபாயம் என்கிறது.  உபாயங்களிலேயே மிக உயர்ந்த இந்த உபாயத்தில் ஆத்மா தன்னை முழுமையாக இறையருளிடம் ஒப்படைத்துவிட்டு அதன் சங்கல்பத்துக்குக் காத்திருக்கிறது.  இதை நாயன்மார்கள் குளத்தை வெட்டி வைத்துக்கொண்டு மழை வருவதற்குக் காத்திருப்பது என்கின்றனர்.  இதனால் நாம் செய்யவேண்டியவையனைத்தையும் செய்துவிட்டு இறையருளுக்குக் காத்திருக்க வேண்டும் என்று புரிகிறது.  இவ்வாறு தோன்றும் இறையனுபவம் இடியும் மின்னலும் கூடிய மழையைப் போல இருக்கும் என்கிறார் திருமூலர்.  எவ்வாறு பெருமழை ஒருவரை முழுவதுமாக நனைத்துவிடுகிறதோ அதேபோல் இறையருள் ஒருவரை முழுவதுமாக ஆட்கொண்டுவிடுகிறது.

  இதைத்தான் ஆண்டாள் தனது திருப்பாவையில் “ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைக்கரவேல்” என்றாள். இறையருள் எதையும் நிறுத்திக் கொள்வது இல்லை, தன்னிடம் முழுவதும் சரணடைந்த ஆத்மாவுக்குத் தன்னை முழுவதுமாகத் தருகிறது.  இந்த அனுபவத்தை திருமூலர் தந்திரம் 9ல் விளக்கியுள்ளார்.


இவ்வாறஇறையருளை விளக்கிய திருமூலர் தான் இறைவனை ஒரு பசுவை அழைக்கும் கன்றைப் போல அழைக்கிறேன் என்கிறார். தாய்ப் பசுவுக்குத் தான் கன்றுக்கு எதைக் கொடுக்க வேண்டும் என்று நன்றாகத் தெரியும்.  அது கன்று கேட்கும் வரை காத்திருப்பதில்லை.  கன்று குரல் கொடுப்பது தாய்க்குத் தனது நன்றியைக் காட்டுவதற்குத்தான், தனது அன்பைத் தெரிவிப்பதற்குத்தான்.  அதேபோல் திருமூலரும் இறைவனை ஞானத்தை வேண்டி அழைக்கிறேன் என்று கூறுகிறார்.

Tuesday 24 March 2015

1,2,25 The one who tore apart the elephant

Verse 25
வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
கானக் களிறு கதறப் பிளந்தஎங்
கோனைப் புகழுமின் கூடலு மாமே. 

Translation:
The ocean and sky hued Vishnu, Brahma and celestials
The one who destroys their material birth
My lord who tore apart the elephant
Of the forest, praise him, merge with him.

Commentary: Brahma, Vishnu and the celestials are evolved souls but they are still under the influence of asuddha maya.  It is Siva who cuts their birth in their current form.  The elephant represents the influence of asuddha maya.  Siva tearing the elephant indicates that he is the one who rids souls of the effects of maya. He not only kills maya’s influence but also removes any traces of it, represented by the elephant skin, so that it will not come up in future. The forest represents this world full of twists and turns and the unknown.


பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என்ற அனைவரும் உலகமக்களைவிட மேலான நிலையில் இருந்தாலும் அவர்களும் மாயையின் வசப்பட்டவர்களே.  இவையனைத்தும் ஆத்மாவின் உணர்வு நிலைகளே.  இறைவன் அல்லது பரவுணர்வே மாயையினால் ஏற்படும் இந்த அளவுக்கு உட்பட்ட நிலைகளை விலக்கி பிறவியை ஒழிக்கிறது.  கானக்களிறு என்பது மாயையைக் குறிக்கும்.  யானையைப் போல சக்திவாய்ந்தது மாயையின் தாக்கம்.  அந்த யானை காட்டைப் போல பயமுறுத்தும் உலக வாழ்க்கையில் நம்மை அலைக்கழிக்கிறது. அதனை நமது முயற்சியால் மட்டும் அழிக்க இயலாது.  இறைவனின் உதவி தேவை.   சிவபெருமான் கஜாசுரனைக் கொன்று அவனது தோலை ஆடையாக அணிவது என்பது மாயையை ஒழித்து அதன் சாயைகூட இல்லாமல் செய்வதைக் குறிக்கிறது. 

Monday 23 March 2015

1.2.24 He is the guide


Verse 24
இணங்கிநின் றான்எங்கு மாகிநின் றானும்
பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்
உணங்கிநின் றான்அம ராபதி நாதன்
வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே.
Translation:
The one who is all pervading remained in harmony
The one who remains before and after remained conflicting
The lord of Amarapathi remained dejected
He is the guide for those who stand saluting him.
Commentary:
This verse feels like a puranic episode but it is not.
The one who remains pervading is Vishnu, as the name implies. (Vishnu= vyapaka, pervading). He remained in harmony with Siva. The one who remains before and after is Brahma. He remained before and created the worlds. He remains after it is destroyed so that he can create the next world. Puranas describe the life span of these deities in terms of kalpas that see several worlds being created and destroyed to be recreated again. The lord of Amarapathi is Indra who remains dejected as he could not see Siva.
Indra, Brahma and Vishnu represent different states of consciousness in the ascending order. That is the reason for Indra remaining dejected as he does not have the capacity to perceive supreme consciousness, Siva. Brahma gets a glimpse of Siva but loses it and remains unaware for most part of the time. Hence, Tirumular says that he is remaining with conflict. Vishnu is in a better state than the other two. Hence, he is in harmony with Siva. A soul goes from the state of Indra to Brahma to Vishnu and Siva is the guide who accompanies the soul in this journey.
இப்பாடல் ஒரு புராணக் கதையைக் குறிப்பதைப் போல இருந்தாலும் இது வேறொரு தத்துவத்தைக் குறிக்கிறது. எங்குமாகி நிற்பவன் விஷ்ணு. விஷ்ணு என்றால் வியாபகத்தை உடையவன் என்று பொருள். அவன் சிவனுடன் இணங்கி நின்றான். பிணங்கி நிற்பவன் பிரம்மா. அவன் உலகம் தோன்றுவதற்கு முன்னும் பின்னும் இருப்பவன். தேவர்களின் ஆயுளை விளக்கும் நூல்கள் அவர்கள் எவ்வளவு கல்பங்கள் இருப்பார்கள் என்று கூறுகின்றன. இந்த கல்பங்களில் உலகம் பல முறை தோன்றி அழிகின்றது. உணங்கி நிற்பவன் இந்திரன். அவனால் சிவனைப் பார்க்க புரிந்துகொள்ள முடியாததால் வெறுப்புற்று நிற்கிறான்.
இந்திரன் பிரம்மா விஷ்ணு என்பவர்கள் உணர்வு நிலைகளின் குறியீடுகள். ஒரு ஆத்மா இந்திரன் நிலையிலிருந்து பிரம்மா நிலைக்கும் அதனை அடுத்து விஷ்ணு நிலைக்கும் பயணிக்கிறது. இந்திர நிலையில் அதனால் பரவுணர்வைப் புரிந்துகொள்ள இயலாததால் வெறுப்புற்று இருக்கிறது. பிரம்ம நிலையில் சில சமயம் பரவுணர்வைப் புரிந்துகொள்கிறது பல சமயம் அதை மறந்து மாயையின் தாக்கத்துக்கு உட்பட்டு இருக்கிறது. விஷ்ணு நிலையில் அது பரவுணர்வு நிலையில் பிரம்மா இருப்பதைவிட கூடுதல் காலம் இருக்கிறது. இவ்வாறு ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்குப் பயணிக்கும் ஆத்மாவுக்குத் துணையாக வழிகாட்டியாக சிவன் இருக்கிறான்.

1.2.23 Roadmap to reach Siva


Verse 23
சந்தி எனத்தக்க தாமரை வாள்முகத்
தந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று
நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்
புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே
Translation:
In the effulgent face of the lotus that could be considered as the meeting point, junction,
The grace of the endless Isa is verily for us- saying so,
If Nandi is worshiped,
He entered the buddhi of such souls and stood there.
Commentary: Thirumular is leading us towards Siva, as if he is holding our hands and taking us there. In verse 20 he told us that we should beseech him to reveal himself to us and reaffirm that he is our only relative. Such a Lord who is everything for us is one who is deathless, who does is free from forgetfulness and will never forsake us. So we need not worry whether our effors will go waste. Then one may wonder whether such a great Lord who remains as everything and beyond them will accessible at all. The one is remains as the farthest universe also remains within us in the cakras, associated with Sakthi. Hence, we should not worry whether we can reach him at all.
Now, armed with the knowledge that he is within us we should seek him with the firm conviction that his grace is definitely for us. If we do so the Lord will, on his own, enter our discriminating mind, the buddhi and remain there.
Thus, through the above four verses Tirumular gives us a road map for how to reach Siva.
முந்தைய நான்கு பாடல்களில் திருமூலர் இறைவனை அடைய நம்மைக் கையைப் பிடித்து அழைத்துப்போவதைப் போல அழைத்துச் செல்கிறார். பாடல் 20ல் சிவனின் பாதத்தை அடைய விரும்புபவர் அவனது துதியைப் பாடவேண்டும் “இறைவா! கண்ணுக்குத் தென்படாமல் இருக்கும் நீ நான் பார்க்கும்படி நிற்பாயா? எனக்கு உன்னைவிட்டால் யார் உறவு?” என்று வேண்டிக்கொள்ள வேண்டும் என்றார்.
அவ்வாறு வழிபடப்படும் இறைவன் இறப்பிலி, மறப்பிலி, நம்மைத் துறப்பிலி அதனால் நமது முயற்சிகள் வீணாகிவிடுமோ என்று அஞ்ச வேண்டாம் என்றார்.
உலகம் அனைத்துமாகவும் அவற்றைக் கடந்தும் நிற்கும் சிவனின் பெருமையைக் கண்டு அவனை நாம் அடைய முடியுமா என்று தயங்க வேண்டாம் ஏனெனில் அவ்வாறு பெரியதற்கும் பெரியவன் நம்முள்ளும் தாமரை எனப்படும் சக்கரங்களில் இருக்கிறான். அங்கே அவன் ஜீவனுடனும் சக்தியுடனும் சேர்ந்திருக்கிறான். அதனால் அவன் நம்மைவிட்டு வெகு தூரத்தில் இருக்கிறான் என்று எண்ணவேண்டாம் என்று நம்மை ஆசுவாசப்படுத்தினார். இப்பாடலில் அவர் நாம் ஈசனின் அருள் நமக்கு நிச்சயமாகக் கிடைக்கும் என்ற உறுதியுடன் நந்தி எனப்படும் பரவுணர்வைப் போற்றினால் அவன் நமது புத்தியினுள் தானாகவே வந்து புகுவான் என்று உறுதியளிக்கிறார்.

1.2.22 Praise the Lord


Verse 22
தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்
கடந்துநின் றான்கம லம்மலர் மேலே
புணர்ந்திருந் தானடிப் புண்ணிய மாமே.
Translation:
Pray to the one who remains persistently, If prayed
The one who stood pervading the entire world
The one who stood beyond them, the one who remains
Over the lotus merging together, his feet (praising them) is good action.
Commentary: So far Thirumular has been talking about Siva’s transcendent and all pervasive nature. Here he says that he not only pervades the world and remains beyond it, he is als present in the lotuses, the cakra within our body. There he remains associated with sakthi and the soul. Siva, the supreme consciousness, is in close contact with the soul whose consciousness, the kundalini sakthi, ascends through the cakra. Hence, praising his feet is an action that would bring good effects.
உலகம் அனைத்துமாகவும் அவற்றைக் கடந்தும் நிற்கும் சிவன் நம்முள்ளும் தாமரை எனப்படும் சக்கரங்களில் இருக்கிறான். அங்கே அவன் ஜீவனுடனும் சக்தியுடனும் சேர்ந்திருக்கிறான். சிவன் என்னும் பரவுணர்வு ஜீவன் என்ற அளவுக்குட்பட்ட உணர்வுடனும் குண்டலினி சக்தியுடனும் சக்கரங்களில் கூடியிருக்கிறது. அதனால் அவனது பாதங்களைப் போற்றுவது நற்பயனைத் தரும் என்கிறார் திருமூலர்.

1.2.21 Will he die, will he forget me, will he forsake me?

1.2.21 Will he die, will he forget me, will he forsake me?
Verse 21
பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே.
Translation:
The who is birth-less, the destroyer, the one with supreme grace,
The one who is deathless, the one who grants bliss to everyone
The one who does not forsake, worship him
If you do so he will not forget, maya will also terminate.
Commentary: This verse states the benefits of singing Siva’s praise. One need not worry that Siva will cease to exist and one’s efforts will go waste. Siva is eternal. He is also one who never forgets the prayer. He will grant the devotees bliss and an end the influence of maya.
முந்தைய பாடல்களில் சிவனை அடைய விரும்பினால் அவனைப் போற்றவேண்டும் என்று கூறி எவ்வாறு அவனைப் போற்றுவது என்றும் கூறிய திருமூலர் இப்பாடலில் அவ்வாறு போற்றினால் பெறும் நன்மைகளைக் கூறுகிறார். தான் இறைவனைப் போற்றியிருக்கும்போது அவன் இறந்துவிட்டால் என்ன செய்வது? தனது முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடுமா என்று ஒருவர் பயப்படவேண்டியதில்லை. இறைவன் இறப்பிலி. தனது முயற்சிகளை அவன் மறந்துவிடுவானா என்றும் ஒருவர் அஞ்சவேண்டியதில்லை ஏனெனில் அவன் மறப்பிலி. தான் அவ்வாறு முயன்றாலும் தன்னை அவன் கைவிட்டுவிடுவானோ என்றும் கவலைப்படவேண்டியதில்லை ஏனெனில் அவன் துறப்பிலி. இத்தகைய இறைவன் பேரருளாளன் மாயையை விலக்கி இன்பம் அருளுபவன் என்கிறார் திருமூலர்.

1.2.20 He will remain as the axis in their minds


Verse 20
காணநில் லாயடி யேற்குற வாருளர்
நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்
கோணநில் லாத குணத்தடி யார்மனத்
தாணிய னாகி அமர்ந்து நின் றானே.
Translation:
Won’t you stand in such a way that I can see you, who do I have as a relative other than you?
I will not shy away from embracing you.
In the minds of those who have excellent character
He sits as the axis, the nail (firmly), he remains so.
Commentary: After suggesting that if one wants to reach Siva’s sacred feet one should sing his praise, Tirumular describes in the first two lines how one should sing his praise. A devotee should plead, “Please let me see you, I do not have anyone other than you as my relative”. For such supreme souls with excellent character the Lord will remain in their mind as a nail and prevent it from wavering due to worldly distractions. He will remain as the axis around which their entire life will revolve. Their thoughts, their actions and their words will all revolve around him.
முந்தைய பாடலில் சிவனின் பாதத்தை அடைய விரும்புபவர் அவனது துதியைப் பாடவேண்டும் என்று கூறிய திருமூலர் இப்பாடலில் எவ்வாறு ஒருவர் அவனைத் துதிக்கவேண்டும் என்று கூறுகிறார். “இறைவா! கண்ணுக்குத் தென்படாமல் இருக்கும் நீ நான் பார்க்கும்படி நிற்பாயா? எனக்கு உன்னைவிட்டால் யார் உறவு?” என்று ஒருவர் வேண்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு வேண்டிக்கொள்ளும் உயர் ஆத்மாக்களுக்கு இறைவன் மனத்துள் ஆணியாக இருப்பான் என்கிறார் திருமூலர். அவர்களது மனம் உலக வாழ்க்கையால் அல்லாடாமல் இருக்க ஆணியைப் போல அதைப் பிடித்து வைத்திருப்பார். அவர்களது எண்ணம், வாக்கு, மனம் ஆகியவை ஆணியைப் போல அசையாமல் இருக்கும் அவனைச் சுற்றியே சுழலும் என்கிறார் திருமூலர்

1.2.19 Method that should be followed to reach Siva


Verse 19
போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்னடி
தேற்றுமின் என்றுஞ் சிவனடிக் கேசெல்ல
மாற்றிய தென்று மயலுற்ற சிந்தையை
மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே.
Translation:
Sing the praise, eulogize, the sacred one’s feet
Try consistently to go to Siva’s sacred feet
Acknowledging that he changed the
Mind that was delusional, I remained in his way.
Commentary: 

Thirumular gives a prescription for how to reach Siva’s sacred feet. If one sings the praise of Siva he will change the mind that is delusional due to maya. This also means that one should follow the path of realized souls who remain transforming their minds in such a way that they will reach Siva. Thirumular thus tells us that we should avoid self prescribed methods or the new and untested methods that fly by night gurus recommend but follow the time tested methods that realized souls have followed and attained the supreme state. Thirumular says that he is following this prescription himself.

சிவனின் திருவடியை எவ்வாறு அடைவது என்று திருமூலர் இப்பாடலில் கூறுகிறார். அவரைப் போற்றவேண்டும் புகழவேண்டும் அவரது திருவடியை ஏத்தவேண்டும். அவரே மாயை ஏற்படுத்தும் மன மயக்கத்தை மாற்றுகிறார் என்று உணர்ந்து நிற்பவர்களின் வழியில் நிற்க வேண்டும் என்கிறார் திருமூலர். இதன் மூலம் நாம் நமது மனது போனவழியில் நின்று அதுதான் இறைவனை அடையும் வழி என்று பேசக்கூடாது எண்ணக்கூடாது. இறைவனை அடைந்தோர் நின்ற வழியில்தான் நாம் நிற்கவேண்டும் அதுவே சரியான வழி என்கிறார் திருமூலர். நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் பிறக்கும் புதுப்புது வழிகளையும் குருக்களையும் தவிர்க்கவேண்டும். உண்மையாக இறைவனை உணர்ந்தோரின் வழியைத் தேடி அடையவேண்டும் என்கிறார் அவர்.

Monday 16 March 2015

1.2.18 The Lord of fire, do not say that he does not exist

Verse 18
வல்லவன் வன்னிக் கிறையிடை வாரணம்
நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை
இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின் றானே. 

Translation;
The capable, the lord of the fire with the elephant (skin) on his waist
The Isa who established the rules to stay,
Do not say that he does not exist. He, the first of the gods
Is blessing night and day.

Commentary:  The lord is omnipotent.  All the fires in the world, the kundalini agni, digestive fire-jataragni, the fire that keeps the waters of the ocean in check- padabaagni, the three types of house fires- aahavaneeyam gaarhapatyam and daakshinaagni, the fire under the earth the effect of which is seen as the temperature of world, the fire of volcanos, are all under his control.  While no one can see him it is not correct to say that he does not exist because he, being the first of the gods, is constantly blessing the world. 


இறைவன் சர்வ வல்லமை படைத்தவர்.  அவர் எல்லா நெருப்புக்களுக்கும் அதிபதியாவார்.  அந்த நெருப்புக்கள் யாதெனில், குண்டலினி அக்னி, உணவை செரிக்கச் செய்யும் ஜாடராக்னி,  கடல் நீரை கரைதாண்டிவிடாமல் வைக்கும் படபாக்னி, மனையில் வணங்கப்படும் ஆஹவநீயம், கார்ஹபத்யம், தாக்ஷிணாக்னி, உலகின் தட்பவெப்பத்தைக் கட்டுப்படுத்தும் பூமியினுள் இருக்கும் அக்னி, எரிமலை வெடிக்கும்போது வெளிப்படும் அக்னி என்பவை.  இவையனைத்திலும் திருமூலர் இங்கு குறிப்பாகச் சொல்வது குண்டலினி அக்னியையே. அந்த அக்னி இருக்கும் மூலாதாரத்தில்தான் நமது பழவினைகள் உள்ளன.  அவை யானையைப் போல் எளிதில் அசைக்க முடியாதவை.  அந்த யானையைத்தான் சிவபெருமான் கொன்று இடையில் தரிக்கிறார், நம்மை நமது கர்மங்களிலிருந்து விடுவிக்கிறார்.  அந்த கர்மங்கள் நம்மைக் கட்டுப்படுத்துவதிலிருந்து நாம் அவற்றைக் கட்டுப்படுத்துவதாக மாற்றுகிறார். இதற்கு அவர் பல விதிகளை ஏற்படுத்தியுள்ளார்.  அத்தகைய இறைவனை இல்லை என்று கூறக்கூடாது ஏனெனில் அவர் பகலும் இரவும் நமக்குத் தமது அருளைத் தந்த வண்ணம் இருக்கிறார் என்கிறார் திருமூலர்.

Sunday 15 March 2015

1.2.17 The person from the land of maya..

Verse 17
மனத்தில் எழுகின்ற மாயநன் னாடன்
நினைத்த தறிவ னெனில்தாம் நினைக்கிலர்
எனக்கிறை அன்பிலன் என்பர் இறைவன்
பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே. 

Translation:
The person from the land of maya who emerges in the mind
Knows all the thoughts. Still they do not think (about him)
They say, “My Lord has no love”
He remains on the side of those who try to get saved.

Commentary: In the previous verse Tirumular described the state of supreme consciousness.  He begins this verse by stating that the Lord, the one who possesses the land of maya or the one from the land of maya emerges in the manas or mind.  Thus, this refers to consciousness or arivu.  The arivu is aware of all our thoughts as it is the one who thinks through the manas and buddhi.  Thirumular laments that no one thinks about Lord, the arivu, the witness of all our thoughts.  Without thinking about him they complain that the Lord has no love towards them.  Siva, the supreme consciousness remains with those who seek to relieve themselves from the miseries of birth and death cycle.


முந்தைய பாடலில் பரவுணர்வு நிலையைப் பாடிய திருமூலர் இப்பாடலில் அந்த பரவுணர்வை மாயை என்ற நாட்டினன் என்கிறார்.  அவன் மனதில் எழுபவன் என்று கூறுவதால் அவன் திருமூலர் கூறும் அறிவு என்று புரிகிறது.  இந்த அறிவுக்கு நமது எண்ணங்கள் அனைத்தும் தெரியும் ஏனெனில் மனம், அறிவு, மற்றும் புத்தியின் மூலம்தான் நாம் சிந்திக்கிறோம்.  இந்த சிந்தனைக்கு சாட்சியாக இருப்பது அறிவு அல்லது விழிப்புணர்வு.  இவ்வாறு நமது எண்ணங்களை அறியும் அறிவை ஒருவரும் எண்ணுவதில்லை என்று புலம்புகிறார் திருமூலர்.  அவ்வாறு செய்யாமல் என்னிடம் இறைவனுக்கு அன்பு இல்லை என்று மக்கள் புலம்புகின்றனர்.  உண்மையாகவே பிழைக்கவேண்டும், பிறவிச் சுழலிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று எண்ணுபவர்களின் பக்கலில் இறைவன் இருக்கிறான், அறிவு அவர்களுக்கு உதவுகிறது என்கிறார் திருமூலர். 

Friday 13 March 2015

1.2.16 His form is like the thunder and loud noise

Verse 16
முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்றம் அலையது தானே. 

Translation:
The sacred feet that created the beginning and end previously
(they)Will freeze if the path of Hara/dharma is sought
The form of Isa is thunder and its loud noise.
The fragrant flower hill.  It is the waves.

Commentary:  
Tirumular says that Maheswara is the cause for the world’s emergence and its termination. “mudivu and pirappu” also mean birth and death of a living being. When one seeks the Lord, whose sacred feet created the above one will experience the form of Lord, Isa, which is spectacular like the thunder and its loud noise. It is an overwhelming feeling that enamours the observer. It is also fragrant as a flower hill , it is a wave.
When a yogi attains the state of supreme consciousness the experience will be as spectacular as thunder and lightning. His body gets a special fragrance. The waves of bliss will engulf him. May Thirumular is referring to these experiences in the last two lines.
ஈசனே அனைத்தும் தோன்றுவதற்கும் மறைவதற்கும் காரணம். உலகத்தின் தோற்றமும் முடிவும் அவனால் ஏற்படுபவை. உயிரின் பிறப்பும் இறப்பும் அவனால் நியமிக்கப்படுபவை. இத்தகைய செயல்களைத் தோற்றுவிக்கும் ஈசனின் அடி இருக்கும் நன்னெறியை, அறநெறியை ஒருவர் நாடினால் அவர் ஈசனின் உருவைக் காண்பார். அந்த உருவம் இடியும் அதன் பெரும் ஓசையும் போல இருக்கும் என்றும் மணம் வீசும் மலர்க்குன்றத்தைப் போல இருக்கும் என்றும் அலையடிப்பதைப் போல இருக்கும் என்றும் திருமூலர் கூறுகிறார்.
குண்டலினி யோகத்தில் பரவுணர்வு ஏற்படும்போது அது அனுபவிப்பவரைத் தன்வயமிழக்கச் செய்யும். அந்த யோகியின் உடல் ஒரு விசேஷ மணம் பெறும். அதையே அவர் மலர்க்குன்றம் என்கிறார் போலும். ஆனந்த அலைகள் தோன்றி அவரை மூழ்கடிக்கும்.

Thursday 12 March 2015

1.2.15 He is supreme consciousness

Verse 15
இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூதறி வாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி யாக அமருகின் றானே.

Translation:
These fragrant seven worlds,
He is the one who created them long ago.  He is supreme consciousness
Seeing the austerities performed by the one who made the Chandra mandala as his locus,
He sits there as his locus.

Commentary:
Siva created the seven worlds.  The subtle quality or tanmatra of earth principle is fragrance or gandham.  Hence, Tirumular says that the seven worlds are fragrant. 
Siva is supreme consciousness.  Siddhas use the term “arivu” to indicate consciousness.  Hence, the term “moodharivaalan” means the ancient consciousness one.  This consciousness is not a static entity but a dynamic one that possesses Self awareness.
Such a supreme Lord, seeing the austerities performed by a yogi who raises his consciousness up to the chadramandala (in the ajna region) remains within him, as supreme consciousness.

The seven worlds correspond to seven states of consciousness.

சிவனே ஏழு உலகங்களையும் படைத்தவன் என்று கூறும் திருமூலர் அந்த உலகங்களை ஏலம் கமழ் பொழில் என்கிறார்.  பூமி தத்துவத்தின் தன்மாத்திரை அல்லது சூட்சும குணம் கந்தம் அல்லது மணம்.  இந்தக் கருத்தில்தான் அவர் உலகங்களை மணம் வீசுபவை என்று கூறுகிறார் போலும்.
அவர் மேலும் சிவனை மூதறிவாளன் என்கிறார்.  சித்தர்கள் சாக்கிரதம், சுவப்னம் என்பது போன்ற நிலைகளை உணர்வு நிலைகள் அல்லது அறிவு என்று குறிப்பிடுகின்றனர்.  திருமூலரும் ஜீவனின் உருவு அறிவாக இருப்பது என்று பின்வரும் தந்திரத்தில் கூறுகிறார்.  அதனால் அவர் சிவனை மூதறிவாளன் என்று குறிப்பிடுவது அவர் பரவுணர்வு நிலை என்ற பொருளில் என்று தோன்றுகிறது.  இறைவன் அறிவுக்கு அறிவாக இருப்பவன் என்று அவர் பல இடங்களில் குறிப்பிடுகிறார். 

இத்தகைய இறைவன் தனது உணர்வை சந்திர மண்டலம் எனப்படும் ஆக்ஞைக்கு உயர்த்தும் யோகியின் தவத்தை மெச்சி அவருள் அறிவுக்கு அறிவாக இருக்கினான் என்று திருமூலர் இப்பாடலை முடிக்கிறார்.

1.2.14 Tirumular reiterates with an example

Verse 14
அதிபதி செய்து அளகையர் வேந்தனை
நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி
அதுபதி யாதரித் தாக்கம தாக்கின்
இதுபதி கொள்ளென்றான் எம்பெரு மானே. 

Translation:
Making him the king of the town of wealth
Seeing the tapas that the lord of wealth (Kubera) performed
Told him to take over the town of wealth
And make it his residence, our lord.

Commentary:  Having explained that all the deities appear as supreme souls only because Siva remains within them and lets them to be so Thirumular points out an example in this verse. It was Siva who gave Kubera, the lord of wealth his position and made him the ruler of Alakapuri.  Similarly he gave superior positions to other deities and made them perform extraordinary actions.


முந்தைய பாடலில் சிவபெருமான் எல்லா தெய்வங்களுக்குள்ளும் நின்று அவர்களைப் பல செயல்களைச் செய்விக்கின்றான் என்று கூறியபிறகு இப்பாடலில் திருமூலர் ஒரு உதாரணத்தைக் காட்டுகிறார்.  குபேரன் செல்வத்துக்கு அதிபதி.  சிவபெருமானே அவனை அளகாபுரி என்னும் நகரத்துக்கு அதிபதியாக்கி அதனை ஆண்டுவா என்று கூறினார் என்கிறார் திருமூலர்.

1.2.13 When asfoetida and musk are boiled together...

Verse 13
காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும்
மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழி
தேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும்
ஈசன் உறவுக் கெதிரில்லை தானே. 

Translation:
If the musk and asafetida are mixed and boiled
The fragrance of the musk will overtake
Even if they are thought of as equal
There is no relationship comparable to that with Isa.

Commentary:  Deities such as Brahma and Vishnu appear to be equivalent to Siva because it is Siva who resides within them and gives them the power to act.  But they are not equal to Siva.  This is like the situation where the musk overpowers in its fragrance when it is boiled together with and asafetida.  Even though Siva dwells with the other deities it is he who supersedes them in all fronts. 


பெருங்காயத்தையும் கஸ்தூரியையும் கலந்து கொதிக்க வைத்தால் கஸ்தூரியின் மணமே அதிகமாக வீசும். அதேபோல் பிற கடவுள்களுக்குள் சிவன் உறைந்தாலும் அவனே முன்னிலையில் தோன்றுவான்.  அதேபோல்  அனைத்துப் பொருட்களின் உள்ளேயும் கண்ணுக்குப் புலப்படாமல் இறைவன் மறைந்திருந்தாலும் அவையனைதின் செயல்களும் இருப்பும் அவனது வெளிப்பாடுகளே ஆகும் என்கிறார் திருமூலர்.  

1.2.11 He remains as everything

Verse 11
ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந் தார்ந்திருந் தான்அருட்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே. 

Translation:
As the origin, as hara, as the fire that stood
Within the body, he remained peacefully spreading,
As the flame of grace, as the unshrinking
Dharma, he stood eternally.

Commentary:
The Lord remains as everything, as the Origin, the cause of everything, as Hara the one who dissolves everything, as the fire within the body-the fire of kundalini, as the flame- the lamp of consciousness, as the dharma that does not contract- that which is true always, and as the eternal entity. 
The contraction refers to contraction or limitation in knowledge and capacity. The Lord is omniscient and omnipotent.

அனைத்துக்கும் ஆதியாக, காரணப் பொருளாக, அனைத்தையும் லயிக்கச் செய்யும் அரனாக, உடலுள் உள்ள குண்டலினி அக்னியாக, அருள் சோதியாக- நல்லுணர்வாக, சுருக்கம் அல்லது எல்லைக்குட்பட்டமை இல்லாத நீதியாக, உண்மையான பொருளாக, என்றும் அழிவற்றவனாக இறைவன் இருக்கிறான். சுருக்கம் இல்லாமை என்பது இறைவனின் இரு முக்கிய குணங்களான சுவாதந்திரியம் அல்லது எல்லைக்குட்படாமை மற்றும் அளவற்ற சக்தி என்ற இரண்டையும் குறிக்கும்.

Monday 9 March 2015

1.2.12 He is the only faultless one

Verse 12
கோது குலாவிய கொன்றைக் குழற்சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரருந் தேவரும்
கோது குலாவிக் குணம்பயில் வாரே

Translation: 
The one whose dreadlocks are decorated with konrai flowers
The forehead that was fondled by the lady, her consort,
The celestials and devas, what would they nurture
By associating with faults they try to be like him.

Commentary: Thirumular says that the celestials and deities try to display the qualities of Siva but they are associated with faults that would prevent them from being equal to Siva.  The faults or “kodhu” are the innate impurities, aanava, karma, maya, mayeya and tirodhaya. All the known deities, Indra, Brahma, Vishnu, Rudra, Maheswara and even Sadasiva are under the influence of one more of these faults.  Through the term “maadhu kulaaviya vaaL nudhal pagan” he refers to the state of consciousness at the ajna cakra.  When consciousness ascends to the ajna the soul becomes free of all the tattva created by asuddha maya and suddha maya.  It remains at the state of Param.  The only states left for it are paraparam, paraparai and parajnana.  The ninth tantiram describes this elaborately.  The form of the soul at the ajna is that of light. As only this state of free of impurities Tirumular says that everyone else who tries to be Siva are not so because they are still under the influence of mala.


அமரர்களும் பிற தேவர்களும் சிவனை ஒக்க இருக்க முயன்றாலும் அது சாத்தியமில்லை ஏனெனில் அவர்கள் மலத்தின் வசப்பட்டு உள்ளார்கள் என்கிறார் திருமூலர்.  கோது எனப்படும் மலம் ஆணவம், கர்மம், மாயை, மாயேயம், திரோதாயி என்ற ஐந்துமாகும்.  இந்திரன், பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகியோரும் இவற்றின் ஒன்றோ அல்லது அதற்கு  மேற்பட்ட எண்ணிக்கையை உடைய மலத்தாலோ பீடிக்கப்பட்டுள்ளனர்.  “மாது குலாவிய வாள் நுதல் பாகன்” என்பது விழிப்புணர்வு ஆக்ஞை சக்கரத்தை அடைந்த நிலையைக் குறிக்கிறது.  இந்த நிலையில் ஆத்மா தூயதாக மலங்களின் பிடியிலிருந்து, அசுத்த மாயை மற்றும் சுத்த மாயையின் தாக்கத்திலிருந்து விடுப்பட்டதாக இருக்கிறது.  அதன் நிலை பர நிலை.  பரநிலைக்கு மேற்பட்டிருப்பது பராபரை, பராபரம், பரஞானம் மற்றும் அனைத்தும் தாமாகி இருக்கும் அருவ நிலைகள் மட்டுமே.  ஆக்னையில் ஆத்மாவின் உருவம் ஒளியுருவம்.  இந்த நிலைக்குக் கீழ்ப்பட்டவை அனைத்தும் மலத்தின் தாக்கத்தில் இருப்பதால் அவற்றைக் கோது கொண்ட நிலை என்கிறார் திருமூலர். 

Saturday 7 March 2015

1.2.10 He stands beyond the lotus flower, the ocean hued one, seeing everything

Verse 10
கடந்துநின் றான்கம லம்மல ராதி
கடந்துநின் றான்கடல் வண்ணன்அம் மாயன்
கடந்துநின் றான்அவர்க் கப்புறம் ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே. 

Translation:
He stood beyond the lotus flower etc
He stood beyond the ocean-hued one, that lord of maya
He stood beyond them, the Isa
He stood beyond, seeing everything.

Commentary:  Thirumular refers to Brahma when he says the Lord stood beyond the lotus flower.  “aadi” means both “and so on” as well as “origin”.  Vishnu is referred to as the one who has a hue like the ocean.  Thus, Isa, the Lord remains beyond everything.  He is the witness to everything. Just because he stands beyond them it does not mean that he is not aware of them-creation and sustenance.  He stands beyond them and yet they are under his watch.


கமலமலர் ஆதி என்ற தொடரினால் பிரம்மாவையும் படைப்புத்தொழிலையும் கடந்து இறைவன் நிற்கின்றான் என்கிறார் திருமூலர்.  கடல் வண்ணன் விஷ்ணு.  அவரைக் கடந்து நிற்பது என்பது காத்தல் என்ற தொழிலையும் கடந்து இறைவன் இருக்கின்றான் என்று பொருள்.  அவன் ஈசன்.  அந்த ஈசன் படைத்தலையும் காத்தலையும் கடந்து நிற்பதால் அவை அவனது கட்டுப்பாட்டில் இல்லை என்று பொருளல்ல என்பதைக் குறிக்க கடந்து நின்றான் அவற்றைக் கண்டு நின்றான் என்கிறார் திருமூலர்.

1.2.9 Brahma and Vishnu did not see his head or foot

Verse 9
அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேனென் றச்சுதன் சொல்ல
முடிகண்டே னென்றயன் பொய்மொழிந் தானே.

Translation:
Brahma and Vishnu, the two sought to see the head and foot
They did not see.  Assembling later in the world
Achuthan said I did not see the feet
Brahma lied that he saw the head.

Commentary:  Thirumular is talking about the famous story where Vishnu and Brahma decided to see the feet and head of Siva who stood as a column of fire.  While Vishnu accepted defeat Brahma lied.  Brahma is under the influence of the five types of maya- aanava, karma, maya, mayeya and tirodaya while Vishnu is under the influence of only four. 
Tirumular has a complete tantiram where he explains the inner meaning of all these famous episodes.

அனைவரும் அறிந்த, பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனின் அடிமுடியைக் காணாத கதையை இப்பாடலில் திருமூலர் குறிப்பிடுகிறார்.  சிவபெருமான் தீத்தூணாக நிற்க விஷ்ணு தான் அவரது பாதத்தைக் காணவில்லை என்று ஒத்துக்கொண்டார். பிரம்மாவோ தான் அவரது முடியைக் கண்டதாகப் பொய் சொன்னார்.  பிரம்மா ஆணவம், கர்மம், மாயை, மாயேயம், திரோதயம் என்ற ஐந்து மலங்களில் கட்டுப்பாட்டில் இருக்க விஷ்ணுவிடம் நான்கு மலங்கள் தான் செயல்படுகின்றன.

பின்னொரு தந்திரத்தில் திருமூலர் இதுபோன்ற புராணக் கதைகளின் தாத்பரியத்தை விளக்குகிறார்.

1.2.8 No one things about Isa

Verse 8
மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னம் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தான்தன்னை மேல்அளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.

Translation:
From the one who measured the earth, the one on the flower to the devas
They have not thought about Isa
There is no one who measured over the One who measured the skies
He remained transcending everything visible.

Commentary: Thirumular says that not even great souls such as Vishnu, Brahma or Devas have thought about Siva.  The order of emergence of various souls is- Sadasiva, Isa, Rudra, Vishnu, Brahma and Devas.  Thus, Isa is superior to Vishnu, Brahma and other Devas.  The other deities are still under the clutches of the mana or innate impurities.

Isa represents manas principle. Manas is the internal sense or anthakarana, superior to the external senses of eye, nose etc.   Hence, Tirumular says the above deities did not even think, perform an action with their mind.  Saying that the Lord cannot be seen by senses does not mean that he does not exist.  Tirumular clarifies this by saying that  he remains beyond the sensual perception one of them being the eye.


பிரம்மா, விஷ்ணு முதல் அனைத்து தேவர்களும்கூட ஈசனை நினைக்கவில்லை என்கிறார் திருமூலர்.  இவர்கள் அனைவரும் உலக மக்களைவிட உயர்ந்திருந்த நிலையில் இருந்தாலும் மலங்களின் பிடியிலிருந்து விடுபடாதவர்கள்.  அவர்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பவர் ஈசன் ஏனெனில் வெளிப்பாட்டுக் கிரமம்- சதாசிவன், ஈசன், ருத்திரன், விஷ்ணு, பிரம்மா, பிற தேவர்கள் என்பது. 

ஈசன் என்னும் தத்துவம் மனத்தத்துவம்.  வெளிப்புலங்களுக்கு அப்பாற்பட்டது.  அதனால்தான் ஈசனை இவர்கள் மானத்தால் நினைக்கவில்லை என்கிறார் திருமூலர்.  மனம் அந்தக்கரணம் அல்லது உட்புலன்.  கண், காத்து போன்ற வெளியுலகைக் காணும் புலன்களைவிட மேம்பட்டது.  இவ்வாறு இறைவன் புலன்களுக்கு அப்பாற்பட்டவன் என்று திருமூலர் கூறுகிறார். அவன் புலன்களுக்குத் தென்படவில்லை என்பதால் அவன் இல்லை என்று பொருளல்ல அவன் அவற்றைக் கடந்து உள்ளான் என்று பொருள்.

1.2.7 No one knows he is the Lord

Verse 7
கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன்என் றறியகி லார்களே.

Translation: 
While the one with the eye in the forehead stands
Innumerable Devas died.
Those who perish in the soil and in the sky
Do not know that he is the lord.

Commentary:  Contrary to the theory that everything that exists must perish Siva remains imperishable.  The expression “one with the eye in the forehead” generally refers to Siva.  It also refers to the yogi who has raised his consciousness to the ajna, crossed his dependence on senses for knowledge, has the eye of discrimination, the one with the eye of wisdom.  The deva, celestials and the people on earth refer to the three types of souls- vijnanakala, pralayakala and sakala.  They are souls in various stages of evolution to reach the ultimate Siva state.  Hence, Tirumular says that with them dying, losing their limited state, they are reaching the ultimate state, that of the Lord, the one who is all pervasive.


இருப்பவைப் பெற்றிருப்பவை அனைத்தும் அழிந்துவிடும் என்ற கருத்துக்குப் புறம்பாக எண்ணற்ற உயிர்கள்- தேவர்கள், மனிதர்கள்,வானவர், இறந்தாலும் சிவன் இறப்பதில்லை.  நெற்றியில் கண்ணுள்ளவன் என்பது புறக்கண்ணைக் கடந்து அகக்கண் கொண்டு நோக்குபவன், ஞானக்கண்ணைக் கொண்டவன் சிவன் என்று பொருள்படும்.  இது பொதுவாக சிவபெருமானைக் குறித்தாலும் குண்டலினி யோகத்தின் மூலம் சிவநிலையை அடைந்த யோகியையும் குறிக்கும்.  வானவர், தேவர், மனிதர் என்பவர்கள் விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என்று பல்வேறு நிலைகளில் இருக்கும் ஆத்மாக்கள்.  இந்த ஆத்மாக்கள் உச்சநிலையை அடையாதவர்கள்.  அதைக் குறித்துப் பயணிப்பவர்கள்.  அதனால்தான் அவர்கள் இறக்கின்றனர், தமது அளவுக்குட்பட்ட நிலை இறக்க அனைத்துமாக இருக்கும் நிலையை அடைகின்றனர் என்கிறார் திருமூலர்.