Thursday 1 October 2015

1.5.7 How does the Lord remove the mala?

1.5.7  How does the Lord remove the mala?
பாடல் எண் : 7
அறிவைம் புலனுட னேநான் றதாகி
நெறியறி யாதுற்ற நீராழம் போல
அறிவறி வுள்ளே அழிந்தது போலக்
குறியறி விப்பான் குருபரனாமே.

Translation:
Consciousness associating with the five senses
And losing itself within them like submerging oneself without knowing the depth of water level
Consciousness destroys itself within (worldly) consciousness-
The Guru paran will announce (show) this.

Commentary:
Tirumular said in the previous verse that the Lord removed the mala and made him fit for grace.  Now he tells us how this is brought about.  The Guruparan or the Supreme One who removes the darkness of ignorance will show how supreme consciousness loses itself within worldly awareness but closely associating itself with the five senses.  That is, it loses knowledge about its essential nature and thinks that it is what the senses supply, worldly knowledge.  Tirumular compares it to a person losing himself in water without knowing the depth.  The senses are as treacherous as deep waters.  They will submerge a person completely without giving him a chance to recover. This mistake will be pointed out the Lord.  This mistaken knowledge is the cause for the mala or the factors that make one think that he is limited in nature.  Lord grants the jnana or wisdom to realize this mistake and save oneself from their effects.

This is what Sankara refers to as "jnaanaan mokshaha"

முந்தைய பாடலில் திருமூலர் இறைவன் தனது மலங்களை மாற்றினான் என்று கூறினார்.  இப்பாடலில் அவர் இறைவன் எவ்வாறு அதை நிகழ்த்தினான் என்று குறிப்பிடுகிறார்.

இறைவன் அல்லது குருபரன், அஞ்ஞானம் என்னும் இருட்டைக் களையும் குரு, ஜீவனுக்கு அவன் எவ்வாறு மலத்தின் வசப்படுகிறான் என்று காட்டுகிறான்.  ஜீவன் தனது அறிவை ஐம்புலன்களுடன் முழுவதுமாக சேரவிட்டு அந்த புலன்கள் வழங்கும் அனுபவங்களினால் தான் பெறும் அறிவே உண்மையான அறிவு, தனது உண்மையான நிலை, என்று எண்ணுகிறான்.  அது நீரின் ஆழம் தெரியாமல் ஒருவர் காலைவிட்டு மூழ்கிப்போவதைப் போன்றது என்கிறார் திருமூலர்.
இந்த நிலையை மாற்ற, இறைவன், தனது அருளால், ஜீவன் செய்யும் இந்தத் தவறைச் சுட்டிக்காட்டுகிறான்.  உண்மையைக் காண ஞானத்தைத் தருகிறான்.  இந்த ஞானத்தால் சீவன் தனது உண்மை நிலையை அறிந்துகொண்டு புலன்களின் பிடியிலிருந்து தன்னைக் காத்துக்கொள்கிறான்.  இந்த புலன்களின் தாக்கமே மலங்கள், அவையே அவனை தான் அளவுக்குட்பட்டவன் என்று எண்ண வைக்கின்றன.

இதைத்தான் சங்கரர் "ஞானான் மோக்ஷ:" என்றார்.

1.5.6 Why does the Lord remove the mala

1.5.6  Why does the Lord remove the mala
பாடல் எண் : 6
மலங்களைந் தாமென மாற்றி அருளித்
தலங்களைந் தான்நற் சதாசிவ மான
புலங்களைந் தான்அப் பொதுவினுள் நந்தி
நலங்களைந் தான்உள் நயந்தான் அறிந்தே.

Translation:
Converting the innate impurities voluntarily
He removed the locus, Sadasiva
The one who removed the means, within the commons, the Nandhi.
He removed the good. He granted within, with knowledge.

Commentary:
The concept of innate impurities or mala plays a very central role in Indian philosophy.  The mala are five in number- aanava, karma, maya, mayeya and tirodana.  Tirumular says that the Lord removes these mala from the souls.  It is impossible for the soul to remove the mala by its own effort.  Only Lord’s grace can remove them,  Lord removes them by transforming them into grace or arul.
When the mala are removed there is no cause for distinction. There is no reason or a place where the Jiva exists as a separate entity, distinct from Siva.
Sadasiva represents the beginning of distinctions as Jiva and Siva.
Tirumular says that Nandi, or supreme consciousness also removed “nalam” or benefit.  Both, good and bad fortunes are considered to be impediments in one’s spiritual progress as one has to enjoy their effects.  If sins are iron handcuffs the good actions are golden shackles.  That is all the difference between then.
By removing the good and the bad, Nandi made Tirumular fit to receive grace.

மலங்கள் என்பவை சீவனை அளவுக்கு உட்பட்டவனாக வைத்திருக்கும் தவறுகள்.  அவை ஆணவம், கர்மம், மாயை, மாயேயம் மற்றும் திரோதயம் என்று ஐவகைப்படும்.  இந்த மலங்களை ஒரு சீவனால் தானாக விலக்க முடியாது.  இறையருளே இவற்றை விலக்குகின்றது.  இறைவன் அவற்றை அருளாக மாற்றி விலக்குகிறான்.  இவ்வாறு தீமையாக இருப்பது நன்மையாக மாறுகிறது.  இவ்வாறு மலங்கள் கழிந்த பிறகு சீவன் சிவன் என்று நிலைப்பட்டு இருப்பதற்கு அவசியம் இல்லாமல் போகிறது.

சதாசிவ நிலையில்தான் முதன்முதலாக சீவன் சிவன் என்ற வேறுபாடு தோன்றுகிறது.  நந்தி அல்லது பரவுணர்வு தனது நலத்தையும் கழித்தான் என்று திருமூலர் கூறுகிறார்.  இது தான் இதுவரை நலம் என்று எண்ணிய உண்மையில் தீமையானவற்றை விலக்கினான் என்று இதற்கு பொருள் கொண்டாலும் இது மற்றொரு முக்கியமான கருத்தைத் தருகிறது.  நன்மை தீமை ஆகிய இரண்டும் கழிக்கப்படவேண்டியவைதான். ஏனெனில் இரண்டின் பயனையும் ஒரு சீவன் அனுபவிக்க வேண்டியுள்ளது.  தீமை இரும்பு விலங்கு என்றால் நன்மை பொன் விலங்கு. அவ்வளவுதான் வித்தியாசம்.
இவ்வாறு நன்மை தீமை என்ற இரண்டையும் விலக்கி திருமூலரை அருளைப் பெறுவதற்குப் பாத்திரமானவராக இறைவன் மாற்றினான்.

1.5.5 When are innate impurities removed?

1.5.5 The process of burning away of innate impurities

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தமும் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.
Translation:
Like the sunstone (lens) and cotton around it
The sunstone will not burn the cotton
Only in the presence of sun it burns it
Similarly, the innate impurities cease to exist in the presence of Aryan (Primal one)

Commentary:
Tirumular explains the process of burning away of innate impurities.  He says that even when the equipment, the lens, and cotton are present together the cotton is not burnt unless both remain in the presence of the sun.  Similarly even when the austerities and innate impurities are present together the impurities are not burnt away, removed.  They are burnt away only in the presence of the Lord.

மலங்கள் எவ்வாறு அழிகின்றன என்று திருமூலர் இப்பாடலில் கூறுகிறார்.  சூரிய காந்தக்கல்லும் பஞ்சும் அருகருகே இருந்தாலும் பஞ்சு எரிவதில்லை.  ஆனால் சூரியனின் முன்னிலையில் பஞ்சு எரிகிறது.  அதேபோல் தவமும் மலமும் ஒருவரிடத்தில் ஒருந்தாலும் தவம் மலத்தை அழிப்பதில்லை.  அதற்கு ஆரியனின் இருப்பு அவசியமாக இருக்கிறது என்கிறார் திருமூலர்.

Monday 20 July 2015

1.5.4 The Sun transformed my impurities

பாடல் எண் : 4
வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனுங்
கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயம தாய்எழுஞ் சூரிய னாமே. 

Translation:
Like the hot fire that rises up,
The king Nandhi, who lives in this temple, the body
Transforms the triple impurities with mercy, more than a mother
Is the sun that rises as the waters.

Commentary:
Tirumular is equating the Lord, Nandhi, the supreme consciousness, to Sun.  In tantiram 7 section 22, anda aathitthan, he describes this sun.   Besides the physical entity that we see in the sky it is also consciousness.  In tantiram 7 he mentions that the sun rises between water and fire thus indicating that the locus of the power that rises during kundalini yoga.  It is region between the svadishtana cakra and manipuraka cakra in the body.   By referring to fire in the first line and water in the last line he is indicating this same idea.

Tirumular calls the body as the temple where Nandi, the one who is more merciful than one’s own birth mother, lives. 
In the first verse of this section Tirumular said that Nandi cut the mala, the verdigris away.  Here he says that the mala were transformed.  This is an interesting concept.  As the soul progresses in its spiritual pursuit, the impurities, mala, that were impediments so far are transformed into beneficial qualities.  For example the aanava or ego becomes arul or grace.  Hence, Tirumular is saying that consciousness transforms the mala with his daya. 

இப்பாடலில் திருமூலர், நந்தி அல்லது இறைவனை சூரியன் என்கிறார்.  தந்திரம் ஒன்பதில் அவர் அண்ட ஆதித்தன் என்ற ஒரு தத்துவத்தை விளக்கும்போது சூரியன் என்பது நாம் வானின் காணும் நட்சத்திரத்தைத் தவிர உயருணர்வு என்றும்  இந்த சூரியன் உடலில் தீக்கும் நீருக்கும் இடையே தோன்றுகிறது என்றும் கூறுகிறார்.  இதனால் குண்டலினி யோகத்தின்போது எழும் உணர்வு நிலையை அவர் குறிப்பிடுவதாகத் தோன்றுகிறது ஏனெனில் நீரும் தீயும் முறையே சுவாதிஷ்டான சக்கரத்தையும் மணிபூரக சக்கரத்தையும் குறிக்கின்றன.  இப்பாடலின் முதல் வரியில் தீயையும் கடைசி வரியில் சூரியனை நீர் என்றும் குறிப்பிடுவதால் அவர் இந்தக் கருத்தைக் கோடிகாட்டுவதாகத் தோன்றுகிறது. 

இவ்வுடலை நந்தி வாழும் கோயில் என்று குறிப்பிடும் திருமூலர் நந்தி தாயினும் தயை உடையவர் என்கிறார்.  அத்தகைய நந்தி தனது மலத்தை மாற்றுவதாகவும் இப்பாடலில் திருமூலர் கூறுகிறார்.  இப்பகுதியின் முதல் பாடலில் அவர் இறைவன் தனது களிம்பருத்தான் என்று கூறிவிட்டு இங்கே மலத்தை மாற்றினான் என்று கூறுவது ஒரு முக்கியமான விஷயத்தைக் காட்டுகிறது.  ஆன்மா தனது ஆன்மீகத் தேடலில் முன்னேறும்போது தடைகளாக இருந்த அதே மலங்கள் உதவும் உபகரணங்களாக மாற்றப்படுகின்றன.  உதாரணமாக ஆணவம் அருள்சக்தியாக மாறுகிறது என்று திருமூலர் பின்வரும் பகுதிகளில் குறிப்பிடுகிறார்.  இவ்வாறு உயருணர்வு கீழ்க்குணங்களை உயர்குணங்களாக மாற்றுகிறது என்பதை இப்பாடலிலிருந்து புரிந்துகொள்கிறோம்.

1.5.3 Pati, Pasu and Pasa

பாடல் எண் : 3
பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணு காபசு பாசம்
பதியணு கிற்பசு பாசம்நில் லாவே. 
Translation:
Among the three mentioned- pati, pasu and pasam
Pasu and pasa are beginning-less, like Pati,
Pasu and pasa do not approach pati
When pati approaches pasu and pasa will not remain.

Commentary:
Pati, pasu and pasa are the three entities that form the core of Saiva siddhantha.  Pati is the Lord, pasu is the limited soul and pasa is the attachment.  Tirumular explains these three succinctly in this verse.  He says that like pati, the pasu and pasa are also eternal.  This is against the maya vada that nothing exists other than the lord or pati.  However, the pasu and pasa exist only as long as they stay away from pati.  Once the pati approaches these two cease to exist.
Pati is a state.  It is not a separate entity.  It is the absolutely pure state, free of any limiting factors or mala.  As long as the soul remains away from this state it continues to remain as the limited soul or pasu buffeted by pasa or worldly attachments that maintain its limited state.  When the pati state approaches, that is, when the pasu loses its limiting factors, then the pasu state or the pasa do not exist.  The soul remains exclusively in the pati state.

பதி, பசு, பாசம் என்று மூன்று வஸ்துக்களே சைவ சித்தாந்தத்தின் முக்கிய வஸ்துக்கள்.  இவற்றுள் பதி என்பது இறைவனையும் பசு என்பது ஜீவனையும் பாசம் என்பது பற்றுக்களையும் குறிக்கும்.  இந்த மூன்றின் தன்மையையும் இப்பாடலில் திருமூலர் விளக்குகிறார்.  மாயா வாதத்தைப்போல பசு பாசம் என்ற வஸ்துக்கள் இல்லை, பத்தி ஒன்றே உள்ளது என்று திருமூலர் கூறவில்லை.  பதியைப் போல பசுவும் பாசமும் காலகாலமாக இருக்கின்றன.  பதியை அணுகும்வரை இருக்கும் அவை பதி அணுகும்போது நில்லாமல் ஓடிவிடுகின்றன என்கிறார்.

பதி என்பது ஒரு நிலை.  அது மலமற்ற தூய நிலை.  பசு என்பதும் ஒரு நிலை அது அளவுக்குட்பட்ட நிலை.  இந்த அளவுக்குட்பட்டமையை ஏற்படுத்துவது பாசமே.  இந்த பாசத்தை பசு வைத்திருக்கும்வரை பதி நிலை கிட்டாது.  ஆனால் பத்தி நிலையை அடைந்தபோது பசு நிலையும் பாசமும் இருக்காது என்கிறார் திருமூலர். 

1.5.2 Eye of grace

பாடல் எண் : 2
களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத் தான்அருட் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே. 
Translation:
He cut away the verdigris, our Nandhi with eye in the forehead
He cut away the verdigris but opening the eye of grace
By showing the light of the rays that verdigris does not approach
He embedded coral in crystal, our Lord/locus

Commentary:
Tirumular is continuing the previous thought where he said that Nandi removed his mala. Here he says that Nandi removed by opening the eye of grace.  This is similar to the “divya sakshu” or the divine eye mentioned in Bhagavad Gita.  The eye on the forehead is the third eye, that of unified vision.  Embedding coral in crystal is usually mentioned to say how qualities occur in Jiva.  Crystal has no color.  It takes up the color of the object that is placed near it.  When the Jiva is placed in the world it takes the quality of the attachments and acts accordingly.  If it is placed near Siva it becomes one with qualities like Siva.  Thus we understand that Siva removes the dirt in the Jiva and confers on it his own qualities.


முந்தைய பாடலில் இறைவன் தனது களிம்பை அறுத்தான் என்று கூறிய திருமூலர் இப்பாடலில் அவன் எவ்வாறு அதைச் செய்தான் என்று விளக்குகிறார்.  நெற்றிக்கண்ணைப் பெற்ற இறைவன், நந்தி, திருமூலரின் அருட்கண்ணை விழியை விழிப்பித்து அவரது களிம்பை அறுத்தான் என்கிறார் அவர்.  அருட்கண் என்பது பகவத் கீதையில் குறிப்பிடப்பட்ட “திவ்ய சட்சு” ஆகும்.  

Thursday 9 July 2015

1.5 Upadesam

பாடல் எண் : 1
விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் றுருக்கியொ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே. 

Translation:
Coming down from the sky, taking a body that fits with karma/taking a body to suit the action
Placing the cool sacred feet/lock as primary protection
Remaining within and melting, revealing through the incomparable
Eye of bliss, he cut away the verdigris

Commentary:
In this verse Tirumular summarizes the process of realization.  The original locus of the Divine is the sky. Tirumular says that he descended from there into the human body according to one’s karma.  If souls have good karma Divine grace will descend quickly.  Otherwise they will have to exhaust their bad karma and wait for the grace to come down to them.  This expression also means, “the lord took a form to suit his action- to cut away their faults”.  The term “thaal” refers to sacred feet as well as lock.  The lock is the closed state of the sahasrara cakra. The lord remains within and melts the soul and reveals the incomparable aanandham or supreme bliss.  Kalimbu or verdigris refers to innate impurities or mala that cover the soul.
It is interesting to call them verdigris.  The mala is only a coating.  It does not change the nature of the soul.  Once the covering is removed the brilliance of the soul will be exposed just as the

உபதேசம் என்ற இப்பகுதியை திருமூலர் இறைவனின் செயலை விளக்கித் தொடங்குகிறார்.  விண் அல்லது ஆகாயத்தில் இருப்பவரான இறைவன் உயிர்களின் வினைக்கு ஈடாக உயிர்களினுள் நுழைகிறான்.  வினை என்பது கர்மம் என்றும் செயல் என்றும் பொருள்படும்.  இந்தத் தொடருக்கு “தான் செய்ய வேண்டிய செயலுக்கு ஏற்ற உருவைக் ஏற்றுக்கொண்டு தனது இடமான விண்ணிலிருந்து கீழே இறங்கி வந்தான்” என்றும் பொருள் கூறலாம்.  அவ்வாறு வந்தவன் தாளைக் காவல் வைத்தான் என்கிறார் திருமூலர்.  தாள் என்பதற்குத் திருவடி என்றும் தாழ்ப்பாள் என்றும் பொருள் கூறலாம்.  தாழ்ப்பாள் என்பது சகஸ்ராரம் மூடியிருக்கும் நிலை.  இதைத் திறந்து உயிர் பரநிலையை அடைகிறது.  அவ்வாறு உடலில் தாளைக் காவல் வைத்து, தான் உள்ளிருந்து உயிரை உருக்கி ஆனந்தத்தைக் கண்ணில் காட்டி களிம்பறுத்தான் என்கிறார் திருமூலர்.

கண்ணில் பார்வையாக இருப்பவன் இறைவன்.  இவ்வாறு ஆனந்தத்தை உணரும் உணர்தலாக இருப்பது இறைவன்.  அவன் களிம்பை அறுப்பது என்பது உள்ளிருக்கும் மலத்தை விலக்குவது என்று பொருள். மலத்தைக் களிம்பு என்று கூறுவது சுவையான ஒன்று.  களிம்பு உலோகத்தை மூடியிருக்கும்.  அதனால் உலோகம் எவ்வித மாற்றத்தையும் அடைவதில்லை.  இந்தக் களிம்பை விலக்கியபிறகு உலோகம் தனது உண்மையான ஒளியுடன் வெளிப்படும்.  அதேபோல் மலமறுந்த ஆன்மா தனது உண்மையான தன்மையுடன் ஒளிவிடுகிறது. 

Tuesday 30 June 2015

1.4.10 Panditha will explain the eighteen transformations as Siva did

பாடல் எண் : 10
பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறுங் கருத்தறி வார்என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடருளி
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே. 

Translation:
Those who saw the eighteen transactions
Will become wise (panditha).  They will know the essence mentioned there
The wise will offer the eighteen steps
In the same way that the Primary one of the universes mentioned the dharma.

Commentary:
The eighteen transactions that Tirumular describes in verse may mean several concepts one of them being the steps in transformation from a material state of existence to that of all pervasive state.  These are described in the agama and the knowledgeable ones, panditha, describe these in accordance with how Siva has described them in the agama.


இப்பாடலில் திருமூலர் பதினெட்டு பாடு என்று குறிப்பிடுவது பல தத்துவங்களைக் குறிக்கும்.  அவற்றில் ஒன்று பருவுடலிலிருந்து திவ்ய தேகமாக மாறுவது, அளவுக்குட்பட்ட நிலையிலிருந்து எங்கும் விரவியிருக்கும் நிலையை அடைவது.  இந்த தத்துவங்களை சிவன் ஆகமத்தில் கூறியுள்ளார் என்றும் பண்டிதர்கள் எனப்படும் சான்றோர் இவற்றை சிவன் விளக்கியுள்ளபடியே விளக்குவர் என்றும் கூறுகிறார் திருமூலர்.

Monday 29 June 2015

1.4.9 Realize "HIM"

Verse 9
அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறுஞ்
சிமிழ்த்தலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே. 

Translation:
The method of loosening, the method of tying
The way in which the life leaves within a blink
Tamil and Sanskrit words, these two
Reveal him, realize him.

Commentary:

This verse may be interpreted from the soul’s point as well as the Divine’s point.
Tirumular says that the agamas explain how souls are tied- in a body, in a life with specific experiences, how they are loosed from these ties and how they leave this life within the blink of the eye.  This is from the soul’s point.  They explain how the Divine ties the souls with their life, body, experiences, how it loosens them and how they are removed from the world.  Realize “him” is applicable to both, the soul as well the Divine.


இப்பாடலை ஜீவனைக் குறித்ததாகவும் ஈஸ்வரனைக் குறித்ததாகவும் விளக்கலாம்.  ஆகமங்கள் எவ்வாறு ஜீவன்கள் ஒரு உடலில், ஒரு வாழ்வில், பல்வேறு அனுபவங்களில் கட்டப்படுகின்றன, எவ்வாறு அவை அந்தக் கட்டிலிருந்து தளர்த்தப்படுகின்றன (ஆன்மீகப் பாதையில் செலுத்தப்படுகின்றன), கண் சிமிட்டும் நேரத்தில் இவ்வுலகை விட்டு வெளியேற்றப்படுகின்றன என்று கூறுகின்றன என்று திருமூலர் கூறுவதாக இப்பாடலுக்குப் பொருள் கூறலாம். ஈஸ்வரனை குறித்ததாகக் கொண்டால் இறைவன் எவ்வாறு உயிர்களை ஒரு வாழ்வில் கட்டி வைக்கிறான், அவற்றைக் கட்டிலிருந்து தளர்த்துகிறான் ஒரு கண்சிமிட்டும் நேரத்தில் அவற்றை உலகிலிருந்து வெளியேற்றுகிறான் என்று ஆகமங்கள் கூறுவதாகப் பொருள் கொள்ளலாம். இவ்வாறு “அவனை” உணருங்கள் என்பது ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் பொருந்தும்.

1.4.8 He blessed the lady with Sanskrit and Tamil

பாடல் எண் : 8
மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்
றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து
ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே. 

Translation:
Rain, sun and frost- with them sleeping
And burning, in those times
Uttering Sanskrit (Aryam) and Tamil immediately
For the lady, he blessed so.

Commentary:
Siva agamas are Siva’s teachings to Uma.  Tirumular says that Siva imparted the knowledge of agama in both Tamil and Sanskrit, at all seasons.  With rain, sun and frost sleeping and burning means during rainy season, winter and summer, that is, without any consideration for a particular season.  Siva agama are Siva’s blessing to those who gain knowledge from them.


சிவ ஆகமம் என்பவை சிவன் சக்திக்கு செய்த உபதேசங்கள்.  இவற்றை சிவன் தமிழிலும் ஆரியம் எனப்படும் சமஸ்கிருதத்திலும் அருளினார் என்கிறார் திருமூலர்.  இந்த உபதேசங்கள் காலத்தைக் கருத்தில் கொள்ளாமல், மழைக்காலம், வேனிற்காலம் அல்லது குளிர்காலம் ஏதுவாக இருந்தாலும் சரி, செய்யப்பட்டன என்று அவர் மேலும் கூறுகிறார்.  இந்த ஆகமங்கள் சிவனின் அருள் என்று கூறி இப்பாடலை அவர் முடிக்கிறார்.

1.4.7 Know the essence of Agama

பாடல் எண் : 7
அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடு மாயினும்
அண்ணல் அறைந்த அறிவறி யாவிடில்
எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே. 

Translation:
The Siva agama blessed by the Lord
Are countless, if compiled
If the knowledge that the Lord imparted through them is not known
All the crores are like letter on water.

Commentary:
Some people opine that mere recitation of Vedas and Agamas are sufficient to grant liberation and that one need not know their meaning.  In this verse Tirumular tells us that this opinion is not correct.  One has to acquire the knowledge that is presented in these works.  Otherwise it is as useless as a letter written on water.


வேதங்களையும் ஆகமங்களையும் ஒருவர் ஓதினான் போதும் அவற்றின் பொருள் தெரியவேண்டும் என்பதில்லை, இதுவே முக்தியை அளிக்கும் என்று சிலர் கூறுகின்றனர்.  இப்பாடலின் மூலம் அக்கருத்து தவறு என்று காட்டுகிறார் திருமூலர்.  இறைவன் அருளிய ஆகமங்களில் உள்ள அறிவை ஒருவர் அறியாவிட்டால் அவையனைத்தும் நீரின்மேல் எழுதிய எழுத்தைப்போல் பயனற்றுப் போய்விடும் என்கிறார் அவர். 

1.4.6 The nine agama

பாடல் எண் : 6
பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே. 

Translation:
The good agama attained-kaaranam, kaamikam
The good veeram, the superior chintham, vaathulam
And the viyaamalam, kaalottharam
The good supiram and the makutam.

Commentary:
Tirumular lists the nine agama that he mentioned in the previous verse.  They are kaaranam, kaamikam, veeram, chintham, vaathulam, viyaamalam, kaalottharam, suppiram and makutam.
Some commentators mention that each of the nine tantiram of Tirumandiram corresponds to these nine agama.  However, there is no proof that supports this conjecture.  Some authors also feel that viyamala is yamalam and it is a vaama tantiram and not a saiva agama and that this verse must be an insert.  When we check the twenty eight agama that form the basis of Saiva siddhantha there is an agama vimalam.  One wonders whether this agama is referred to here as vyamalam or yaamalam is not part of the twenty-eight agama mentioned at the beginning of this section.  Kaalottharam is a saktha agama.  S.Panchatchara sarma has written a book on Tirumular where he points out similarities between Tirumandiram verses and Sanskrit agama and yantra.  He mentions that several concepts such as Srichakra worship rituals etc that are commonly found in Sanskrit literature are also found in Tirumandiram.


முந்தைய பாடலில் கூறிய ஒன்பது ஆகமங்கள் யாவை என்று இப்பாடலில் திருமூலர் பட்டியலிடுகிறார்.  அவை காரணம், காமிகம், வீரம், சிந்தம், வாதுளம், வியாமளம், காலோத்தரம், சுப்பிரம் மற்றும் மகுடம்.   சில உரையாசிரியர்கள் திருமந்திரத்தின் ஒன்பது தந்திரங்களும் ஒன்பது ஆகமங்களைக் குறிக்கின்றன என்று கூறுகின்றனர்.  ஆனால் அதற்கான் எவ்வித குறிப்பும் திருமந்திரப்பாடல்களில் காணப்படவில்லை.  சில ஆசிரியர்கள் வியாமளம் என்பது யாமளம் என்றும் அது வாம தந்திரம் அதனால் இப்பாடல் இடைச் செருகலாக இருக்கக் கூடும் என்று கருதுகின்றனர்.  இருபத்தெட்டு சைவ ஆகமத்தில் யாமளம் என்ற பெயர் காணப்படவில்லை.  விமலம் என்று உள்ளது.  யாமளம் என்பது சிவனும் சக்தியும் நிகழ்த்தும் உரையாடல் வடிவில் இருக்கும் ஆகமம்.  அதேபோல் காலோத்தரம் என்ற ஆகமமும் இருபத்தெட்டு ஆகமங்களில் ஒன்றல்ல.  அது சாக்த ஆகமம்.  இலங்கை எழுத்தாளர் ச.பஞ்சாட்சர சர்மா அவர்கள் தனது திருமூலர் என்ற நூலில் பல சாக்த யந்திரங்களும் வழிபாட்டு முறைகளும் திருமந்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன என்று கூறுகிறார். 

1.4.5 Nandi attained the nine agama that the deities attained

பாடல் எண் : 5
சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே. 

Translation:
From the Param which is Sivam, sakthi and Sadasivam
The Mahesa, Rudra deva
The austere Vishnu, Brahma and Isa.
Our Nandi also got the nine agama they obtained.

Commentary:
The Sivaya Subramuniya Swami of Kauai Hindu monastery opines that there were two lineages initially, the Adinatha and Nandinatha lineages and that Tirumular belongs to the Nandinatha lineage.  In this verse Tirumular says that Nandi got the nine agama that Sakthi, Sadasiva, Maheswara, Rudra, Vishnu and Brahma obtained from Sivam, the Param, the Supreme.  If we look at this verse in the context of the body all these deities represent different chakras and Nandi represents the consciousness that moves through these cakras.  Hence, we can interpret this verse as “all the knowledge that the cakras contain, my consciousness also attained them.” Chakras and their deities represent different states of the Divine.  If the agama are also Divine then there is no wonder that the deities contain the agama.  Consciousness is that which experiences these different states, that of Sakthi, Sadasiva, Maheswara, Rudra etc.  By moving through these states the consciousness attains this knowledge, the agama.

கௌவாயில் உள்ள ஹந்து ஆசிரமத்தின் அதிபதி, சிவாய சுப்பிரமுனிய சுவாமி சித்தர்கள் இரண்டு பரம்பரைகளில் ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்த பரம்பரைகள் ஆதிநாதர் பரம்பரை மற்றும் நந்திநாதர் பரம்பரை என்றும் கூறுகிறார்.  இதனால் திருமூலர் தெய்வங்களான சக்தி, சதாசிவம், மகேசன், ருத்திரன் ஆகியோர் பெற்ற ஒன்பது ஆகமங்களைத் தமது குருவான நந்திநாதரும் பெற்றார் என்று கூறுகிறார் என்று இப்பாடலுக்குப் பொருள் கூறலாம்.


இந்த தெய்வங்களை நமது உடலுடன் தொடர்புபடுத்திப்பார்த்தால் அவை மூலாதாரம் முதலிய சக்கரங்களின் அதிபதிகள் அவை, பல்வேறு உணர்வு நிலைகளைக் குறிப்பவை, இறைமையான சிவத்தின் பல்வேறு நிலைகள் என்று அவற்றை விளக்கலாம்.  பரனே, சிவனே ஆகமம் என்றால் இந்த தெய்வங்கள் அந்த ஆகமங்களைக் கொண்டவர்கள் ஏனெனில் அவர்கள் சிவனின் பல நிலைகள் என்பது புரிகிறது.  இந்த நிலைகளையும் அவை குறிக்கும் உணர்வுகளையும் அனுபவிப்பது நமது உணர்வு.  அதுவே நந்தி.  அதனால் நந்தி இந்த நிலைகளை அடைவதனால், அடையும்போது, இந்த ஆகமங்களை, சிவநிலைகளைப் பெறுகிறது என்றும் இந்தப் பாடலுக்குப் பொருள் கூறலாம்.

Sunday 28 June 2015

1.4.4 He is Agama

பாடல் எண் : 4
பரனாய்ப் பராபரங் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்
தரனாய் அமரர்கள் அற்சிக்கும் நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே. 

Translation:
Showing Paraparam from the state of Param
During the times when he revealed the nature of sivam from the state of lord of the world
Nandi who is worshipped by liberated souls as Hara
As the support, He remained boosted as Agama.

Commentary:
Tirumular is setting the stage for the various states of consciousness in this verse.  Paraparam is the state of the Divine that is experienced as a flame.  Paran is the state when all the limitations including the pure manifestations of Siva, sakti, sadhakhya, maheswara and suddha vidhya are transcended.  A yogin gets glimpse of the formless-form of the Divine, as flame, only when he reaches the state of Paran.  Tirumular explains this as para avatthai in later sections.  In the state of Paran, the distinction of the Divine and the world exists.  Hence, he reveals to the world the nature of Siva as there is a teacher and a taught.  This state of Paran is reached by Nandhi, the soul, the consciousness who is praised by liberated souls as Hara or the destroyer of delusions, limitations.  Such a Lord remained as the knowledge imparted by the Agama.  Thus, Agama teach us about the Parapara state and Siva granted us this knowledge from his Paran state.


இப்பாடலில் திருமூலர் உணர்வு நிலைகளை ஒரு துளியளவு காட்டுகிறார்.  பராபர நிலை என்பது இறைவனின் அருவ உருவ நிலை, தீபமாக இருக்கும் நிலை.  இந்த நிலையை உணர ஒரு யோகி பர நிலையை அடைய வேண்டும்.  இந்த பரன் நிலை சுத்த மாயையையும் கடந்தது.  இதைப் பற்றி விளக்கமாக திருமூலர் பின் தந்திரங்களில் கூறுகிறார்.  இந்த பர நிலையில் கேட்பவர் கூறுபவர் என்ற இருமை நிலை இருக்கிறது.  அதனால் சிவன் சக்திக்கு இந்த நிலையிலிருந்து ஆகமங்களைக் கூறினார்.  இந்த நிலையை அடைவது நந்தி என்னும் உயருணர்வு.  இந்த உணர்வை முக்தி பெற்ற ஆத்மாக்கள் ஹரன் என்று போற்றுகின்றனர் ஏனெனில் இந்த நிலையில் எல்லா மலங்களும் அறுக்கப்பட்டுள்ளன.  இவ்வாறு பரநிலையிலும் நந்தி நிலையிலும் உள்ள இறைஉணர்வே நமக்கு ஆகமங்களைத் தந்தது.  ஆகமங்கள் பராபர நிலையை விளக்கவே  வெளியிடப்பட்டன என்று இப்பாடல் நமக்குக் கூறுகிறது. 

1.4.3 They are like letters on water surface

பாடல் எண் : 3
அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி
தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே. 
Translation:
The sacred agama graced by the Lord
Are incomprehensible even to the liberated souls
When counted they are seven crore, hundred thousand
Even when counted they become letters on water surface.

Commentary:
Tirumular says that one cannot count the number of agamas that Siva granted to souls and that they are very esoteric.  They are like letters on water surface. They are as difficult to comprehend as letters on the surface of water that disappear quickly.


இறைவன் அருளிய ஆகமங்கள் எண்ணற்றவை என்றும் அவற்றைப் புரிந்துகொள்ள விண்ணவர் எனப்படும் முக்தாத்மாக்களாலும் இயலாது என்றும் கூறும் திருமூலர் அவர் நீரின் மேல் எழுதிய எழுத்தைப் போன்றவை என்கிறார்.  எவ்வாறு நீரின்மேல் எழுதிய எழுத்தைப் படிப்பது கடினமோ அதேபோல் ஆகமத்தைப் புரிந்துகொள்வதும் கடினம்.

Thursday 25 June 2015

1.4.2 Essence of Agama

பாடல் எண் : 2
அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே.
Translation:
The Sivagamam that the Lord granted
Are twenty eight crore hundred thousand
The liberated souls described the glory of Isa
I will praise the entity that was contemplated upon.
Commentary:
Even though the previous verse mentioned that there are twenty eight agama, they are countless in number. All these describe the glory of the Lord which was elaborated upon by liberated souls. Tirumular says that he is also praising the Lord who is the object of this adoration and contemplation.
முந்தைய பாடல் ஆகமங்கள் இருபத்தெட்டு என்று கூறினாலும் அவை எண்ணற்றவை என்கிறார் திருமூலர். இவையனைத்தும் இறைவனின் பெருமையை விளக்குகின்றன. அதை விண்ணவர் எனப்படும் முக்தியாத்மாக்கள் கூறினர் என்கிறார் அவர். அந்த இறைவனையே தானும் ஏத்துவதாகத் திருமூலர் கூறுகிறார்.

1.4.1 Greatness of Agama

Greatness of Agama
1.4.1 Number of Agama
Verse 1
அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்
அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே.
Translation:
The one who shares his body with the lady with dark hue
Agama are five and twenty three
Sixty six with their palms folded in supplication
Heard the great meaning in the fifth face/ in the five faces.
Commentary:
The Siva Agama represent knowledge that Siva imparted to Sakthi. Tirumular says that they are twenty eight in number. These agamas were heard by sixty six great souls. The last line can be interpreted as “they heard the great meaning from the fifth face” or they heard the great meaning from the five faces.
The twenty eight Agama are kaamikam, yogajam, chinthyam, kaaranam, achitham, theettham. Sookshmam. Sagatthiram, anchumaan, suprabedham, vijayam, nishvaasam, svaayambhuvam, aagneyam, veeram, rauravam, sarvotham, paaramesvaram, kiranam and vaathulam.
The five faces of Siva are Satyojatham (west), vaamadevam (north), agoram (south), thatpurusham (east) and Isanam (top). Some say that Siva revealed the four Vedas from the four faces and the fifth face revealed the Agama. Some others say that the four faces revealed two agama (five each) and the remaining eight were revealed by the fifth face.
The sixty six souls that heard the Agama from Siva include Kausika, Kashyapa, Bharatvaja, Gaudhama and Agastya.
The moorthy who has five faces is Sadasiva. Hence, some interpret this as the great souls heard these great meanings from Sadasiva.
சிவன் உமைக்கு அருளிய ஞானமே சிவ ஆகமம் எனப்படுகின்றன. திருமூலர் இந்த ஆகமங்கள் இருபத்தெட்டு என்கிறார். இவற்றை அறுபத்தாறு உயராத்மாக்கள் கேட்டனர் என்றும் அவர் கூறுகிறார். இப்பாடலின் கடைசிவரிக்குப் பல பொருள்கள் கூறலாம். அரும்பொருளை இவர்கள் ஐந்தாம் முகத்திலிருந்து கேட்டனர் என்றும் ஐந்து முகங்களிலிருந்து கேட்டனர் என்றும் இதற்குப் பொருள் கூறலாம்.
இருபத்தெட்டு ஆகமங்கள்:காமிகம், யோகசம், சிந்தியம், காரணம்,அசிதம், தீத்தம், சூக்குமம், சகத்திரம், அஞ்சுமான், சுப்பிர பேதம், விசயம், நிசுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம், இரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிம்பம், புரோற் கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சர்வோத்தம், பாரமேசுவரம், கிரணம், வாதுளம்` என்பன.
சிவ பெருமானின் ஐந்து முகங்கள் சத்யோஜாதம் (மேற்கு), வாமதேவம் (வடக்கு), அகோரம் (தெற்கு), தத்புருஷம் (கிழக்கு) ஈசானம் (உச்சி) என்பவை.
ஐந்து முகங்களைக் கொண்ட மூர்த்தி சதாசிவம். இதனால் ஞானிகள் இந்த ஆகமத்தை சதாசிவனிடமிருந்து கேட்டனர் என்றும் இதற்குப் பொருள் கூறலாம்.

Saturday 20 June 2015

1.3.6 Recitation of Vedas has become like singing and dancing of prostitutes!

Verse 6
பாட்டும் ஒலியும் பரகுங் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியின் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதமில் லாதவர்
ஈட்டும் இடஞ்சென் றிகலுற் றாரே. 

Translation:
Song and sound, the women who propagate them
In the world where there dance never ends
Those who remain with interest are those not performing austerities
They go to places to earn and remain separated from the goal.

Commentary:
Public women earn their living singing and dancing for the worldly.  Their display of artforms is not enjoy it, appreciate it or propagate it but to earn a living.  Tirumular says that those who recite and perform Vedic rituals are like these women as their action is to earn a living and not to gain the benefit that the Vedas are meant for.  They seek a benefit different from the actual goal.


கணிகையர் எனப்படும் பொதுப்பெண்டிர் பாடி, ஆடி வாத்தியங்களை இசைத்து மக்களிடமிருந்து பொருள்பெற்று வாழ்கின்றனர்.  அவர்கள் பாடல் ஆடல் ஆகியவற்றில் விருப்பம் கொண்ட அவற்றை வெளிப்படுத்துவதில்லை.  அவற்றின் இலக்கான ஆனந்தத்தைத்தேடுவதில்லை.  திருமூலர் வேதம் ஓதும் வேதியர்களின் செயலும் அவ்வாறே என்று கூறுகிறார்.  அவர்கள் வேதத்தின் பலனான இறையுணர்வைப் பெற அவற்றை ஓதுவதில்லை.  பொருள் ஈட்டி அதனால் வாழ்க்கையை நடத்தவே அதை ஓதுகின்றனர்.  அவற்றை ஓதவைப்பவரும் அவ்வாறே.  அவர்களும் பகைவரை வெல்வது மக்கள் செல்வம் பெறுவது என்பது போன்ற அல்பப் பலன்களுக்காக வேதியருக்குப் பணம் கொடுத்து வேதத்தை ஓதச் செய்கின்றனர்.  இதற்கு சோதிடமே நல்ல உதாரணம். இவ்வாறு வேதம் ஓதுவது என்பது கணிகையர் செயலைப் போல ஆகிவிட்டது.

1.3.5 Controversy about the goal of Veda

Verse 5
ஆறங்க மாய்வரு மம்மறை ஓதியைக்
கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை
வேறங்க மாக விளைவுசெய் தப்புறம்
பேறங்க மாகப் பெருக்குகின் றாரே. 
Translation:
The Vedas occur as six parts
It will describe the one recited about, there is no one who practices the qualities
After making it as for a different benefit
They are increasing it/spreading it for those benefits.

Commentary:
The six parts of the Veda are Shiksha, kalpa, vyakarana, niruktha, chandas and jyothisa. “odi” means the one who recites as well as the one about whom they talk.  Tirumular says that the Veda anga talk about the different aspects of the Divine. Shiksha talks about phonetics, kalpa the rituals, vyakarana the grammar, nirukhta the etymology, chandas the meter and jyothisa the movements of the planets, sun and the moon. Let us see how they describe different aspects of the Divine.  Phonetics and morphology refers to how words sound and how they join together.  Sound emerged from nadha whose origin is the Divine.  Similarly chandas, the meter is also based on nadha.  The goal of the rituals, kalpa, is to reach the Divine.  Siva’s dance and the sound that emerged from his drum formed the basis of ashta dhyayi, the foundation of Panini’s grammar.  Niruktha describes the origin or basis of words and thus their meaning.  The purpose of jyothisha is to determine favorable times to perform different austerities to become Brahman.  Thus all the parts of Veda represent different qualities of the Divine as the Divine is both the means and goal of every action.  However, people do not realize this.  They ascribe different benefits for the Vedic rituals and propagate the Vedas for those minor benefits.  Tirumular is lamenting about this in this verse.


வேதத்தின் அங்கங்கள் ஆறு.  அவை சிக்ஷா, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ் மற்றும் ஜோதிஷம்.  இந்தப் பாகங்கள் அனைத்தும் இறைவனின் பல்வேறு குணங்களைக் குறிக்கின்றன.  ஓதி என்பது ஓதுபவன் என்றும் ஓதப்படுபவன் என்றும் பொருள்படும்.  இது எவ்வாறு என்று பார்ப்போம்.  சிக்ஷை என்பது எவ்வாறு ஒலியும் சந்தி எனப்படும் சேர்த்தியும் ஏற்படுகின்றன என்று விளக்குகிறது.  ஒலிக்கு ஆதாரம் நாதம்.  இது இறைவனின் ஒரு அம்சம்.  அதேபோல் சந்தஸ் என்பதும் நாதத்தை அடிப்படையாகக் கொண்டது.  வியாகரணம் என்பது இலக்கணம்.  சிவ பெருமான் நடனமாடியபோது அவரது கையில் இருந்த உடுக்கையின் ஒலியே அஷ்ட த்யாயி என்ற பாணினியின் இலக்கணத்துக்கு அடிப்படையானது என்று நூல்கள் கூறுகின்றன.  இதேபோல் நிருக்தம் என்பது சொற்களும் அவற்றின் பொருளும் எவ்வாறு தோன்றின என்பதை விளக்குவது. சொல்லும் பொருளும் இறைவனிடமிருந்தே தோன்றின.  சோதிடம் என்பது சூரியனும் பிற கோள்களும் எவ்வாறு நகருகின்றன என்றும் யோகம் மற்றும் சடங்குகளை எப்போது செய்தால் பரவுணர்வு பெறலாம் என்றும் கூறுகிறது.  இவ்வாறு வேதத்தின் ஆறு அங்கங்களும் இறைவனைப் பற்றியும் அவனை எவ்வாறு அடைவது என்பதைப் பற்றியும்தான் கூறுகின்றன.  இதுவே அவற்றின் இலக்கு.  இதைவிடுத்து மக்கள் வேத சடங்குகளுக்கு வேறு பயன்களைக் கூறி அவற்றைப் பெறுவதற்கே வேதம் ஓதவேண்டும் என்று கூறுகின்றனர்.  அத்தோடல்லாமல் அவற்றையும் விரிவாகப் பெருக்குகின்றனர்.  இதைத்தான் திருமூலர் சாடுகிறார்.

Friday 19 June 2015

1.3.4 Essence of Vedanta

Verse 4
திருநெறி யாவது சித்தசித் தன்றிப்
பெருநெறி யாய பிரானை நினைந்து
குருநெறி யாஞ்சிவ மாநெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே. 
Translation:
The sacred path is, thinking about the Lord
Who is different from chith and achith
Joining the great path of Sivam, the path of guru
Vedantham recites this as the only path.

Commentary:
The three entities in this universe are the Lord, the chith or sentient beings and achith or nonsentient entities.  One has to know the difference between these three.  In the human body the chith is the Jiva, achith is the body and Lord is the one who remains as soul of soul and directs everything.  The ultimate goal of spiritual quest is to join the Lord, the Sivam or supreme consciousness.  This is the guru neri or the path that destroys the darkness of ignorance (gu-darkness, ru- removes/destroys).  Tirumular says that this is the essence of Vedanta.


சித் அசித் ஈச்வரன் என்ற மூன்று வஸ்துக்கள்தான் உலகமாகப் பரிமளிக்கின்றன.  இவற்றினிடையே உள்ள வித்தியாசத்தை முதலில் உணரவேண்டும்.  உணர்ந்த பின் சித் அசித்தை விட்டு சிவமாம் ஈஸ்வரனுடன் கூட வேண்டும்.  இதுவே சிவ நெறி, இந்த நெறி ஒன்றுதான் குரு நெறி அல்லது அஞ்ஞானமாம் இருளை விரட்டும் நெறி.  இதைத்தான் வேதாந்தம் கூறுகிறது என்கிறார் திருமூலர்.   

Thursday 18 June 2015

1.3.3. The Vedas praise the "kannan"

Verse 3
இருக்குரு வாம்எழில் வேதத்தி னுள்ளே
உருக்குணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி
வெருக்குரு வாகிய வேதியர் சொல்லுங்
கருக்குரு வாய்நின்ற கண்ணனு மாமே. 
Translation:
Within the Veda that has the form of rik
Rising as consciousness within the Vedas which melts the inside
The Vedas that the Brahmins, the worldly gurus recite
The guru of essence is the one with the eye.

Commentary:
As it is common with any of the Tirumandiram verses this verse also has several interpretations.  Among the four Vedas the Rig Veda is the most ancient.  All the Vedas are derived from the Rig Veda.  Rik also means the stanzas or short sections of the Veda that are recited as one unit.  “urukku unarvu” in the second line refers to consciousness.  “urukku” means pure as well as melting within.  The melting within results in the downpour of the nectar or secretion from the lalata.  The sound of the Vedas achieve this as there is transition from the nadha state to the nadhantha during recitation.  The essence of the Vedas is consciousness.  “karukkuru” refers to the Divine.  He is the guru from the state of “karu” or inception.  He is the guru of essence.  He is the guru in the muladhara.  He is the “Kannan” the one with the third eye, the eye of unified vision. 

திருமூலரின் எல்லாப் பாடல்களையும்போல இப்பாடலுக்கும் உரையாசிரியர் பல விளக்கங்களை அளித்துள்ளனர்.  மற்றொரு விளக்கத்தை இங்கே பார்க்கலாம். 

வேதங்களில் தலையாய வேதம் ரிக் வேதம்.  அதன் விரிவாகத்தான் பிற வேதங்கள் தோன்றின.  வேதத்தின் சிறிய பகுதிகள் சூத்திரங்களைப் போல ரிக் எனப்படுகின்றன.   இந்த வேதம் கூறும் முக்கியப் பொருள் உள்ளே உருக்கும் உணர்வு.  இதுவே விழிப்புணர்வு, பரவுணர்வு நிலையில் முடிவது.  இதைத் தான் வேதங்கள் போற்றுகின்றன.  இந்த உள்ளே உருக்குவதனால் லலாடத்திலிருந்து அமிர்த்தம் ஊறுகிறது.  வேதத்தை ஓதும்போது அது சுவரங்களும் இடைப்பட்ட மௌனங்களும் நாத நிலையையும் நாதாந்த நிலையையும் அடைவிக்கின்றன.  இதனால் “கண்ணன்” விழிப்புணர்வு என்ற மூன்றாவது கண்ணைப் பெற்றவன் போற்றப்படுகிறான்.  மூன்றாவது கண் என்பது ஒருமை நிலை.  இதை அடைவதையே வேதங்கள் பரிந்துரைக்கின்றன, அதற்கே வழிகாட்டுகின்றன.  “கருக்குரு” என்பது கருவிலிருந்து குருவாக இருப்பவன், விழிப்புணர்வு.