Thursday 9 July 2015

1.5 Upadesam

பாடல் எண் : 1
விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் றுருக்கியொ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே. 

Translation:
Coming down from the sky, taking a body that fits with karma/taking a body to suit the action
Placing the cool sacred feet/lock as primary protection
Remaining within and melting, revealing through the incomparable
Eye of bliss, he cut away the verdigris

Commentary:
In this verse Tirumular summarizes the process of realization.  The original locus of the Divine is the sky. Tirumular says that he descended from there into the human body according to one’s karma.  If souls have good karma Divine grace will descend quickly.  Otherwise they will have to exhaust their bad karma and wait for the grace to come down to them.  This expression also means, “the lord took a form to suit his action- to cut away their faults”.  The term “thaal” refers to sacred feet as well as lock.  The lock is the closed state of the sahasrara cakra. The lord remains within and melts the soul and reveals the incomparable aanandham or supreme bliss.  Kalimbu or verdigris refers to innate impurities or mala that cover the soul.
It is interesting to call them verdigris.  The mala is only a coating.  It does not change the nature of the soul.  Once the covering is removed the brilliance of the soul will be exposed just as the

உபதேசம் என்ற இப்பகுதியை திருமூலர் இறைவனின் செயலை விளக்கித் தொடங்குகிறார்.  விண் அல்லது ஆகாயத்தில் இருப்பவரான இறைவன் உயிர்களின் வினைக்கு ஈடாக உயிர்களினுள் நுழைகிறான்.  வினை என்பது கர்மம் என்றும் செயல் என்றும் பொருள்படும்.  இந்தத் தொடருக்கு “தான் செய்ய வேண்டிய செயலுக்கு ஏற்ற உருவைக் ஏற்றுக்கொண்டு தனது இடமான விண்ணிலிருந்து கீழே இறங்கி வந்தான்” என்றும் பொருள் கூறலாம்.  அவ்வாறு வந்தவன் தாளைக் காவல் வைத்தான் என்கிறார் திருமூலர்.  தாள் என்பதற்குத் திருவடி என்றும் தாழ்ப்பாள் என்றும் பொருள் கூறலாம்.  தாழ்ப்பாள் என்பது சகஸ்ராரம் மூடியிருக்கும் நிலை.  இதைத் திறந்து உயிர் பரநிலையை அடைகிறது.  அவ்வாறு உடலில் தாளைக் காவல் வைத்து, தான் உள்ளிருந்து உயிரை உருக்கி ஆனந்தத்தைக் கண்ணில் காட்டி களிம்பறுத்தான் என்கிறார் திருமூலர்.

கண்ணில் பார்வையாக இருப்பவன் இறைவன்.  இவ்வாறு ஆனந்தத்தை உணரும் உணர்தலாக இருப்பது இறைவன்.  அவன் களிம்பை அறுப்பது என்பது உள்ளிருக்கும் மலத்தை விலக்குவது என்று பொருள். மலத்தைக் களிம்பு என்று கூறுவது சுவையான ஒன்று.  களிம்பு உலோகத்தை மூடியிருக்கும்.  அதனால் உலோகம் எவ்வித மாற்றத்தையும் அடைவதில்லை.  இந்தக் களிம்பை விலக்கியபிறகு உலோகம் தனது உண்மையான ஒளியுடன் வெளிப்படும்.  அதேபோல் மலமறுந்த ஆன்மா தனது உண்மையான தன்மையுடன் ஒளிவிடுகிறது. 

No comments:

Post a Comment