Saturday 20 June 2015

1.3.5 Controversy about the goal of Veda

Verse 5
ஆறங்க மாய்வரு மம்மறை ஓதியைக்
கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை
வேறங்க மாக விளைவுசெய் தப்புறம்
பேறங்க மாகப் பெருக்குகின் றாரே. 
Translation:
The Vedas occur as six parts
It will describe the one recited about, there is no one who practices the qualities
After making it as for a different benefit
They are increasing it/spreading it for those benefits.

Commentary:
The six parts of the Veda are Shiksha, kalpa, vyakarana, niruktha, chandas and jyothisa. “odi” means the one who recites as well as the one about whom they talk.  Tirumular says that the Veda anga talk about the different aspects of the Divine. Shiksha talks about phonetics, kalpa the rituals, vyakarana the grammar, nirukhta the etymology, chandas the meter and jyothisa the movements of the planets, sun and the moon. Let us see how they describe different aspects of the Divine.  Phonetics and morphology refers to how words sound and how they join together.  Sound emerged from nadha whose origin is the Divine.  Similarly chandas, the meter is also based on nadha.  The goal of the rituals, kalpa, is to reach the Divine.  Siva’s dance and the sound that emerged from his drum formed the basis of ashta dhyayi, the foundation of Panini’s grammar.  Niruktha describes the origin or basis of words and thus their meaning.  The purpose of jyothisha is to determine favorable times to perform different austerities to become Brahman.  Thus all the parts of Veda represent different qualities of the Divine as the Divine is both the means and goal of every action.  However, people do not realize this.  They ascribe different benefits for the Vedic rituals and propagate the Vedas for those minor benefits.  Tirumular is lamenting about this in this verse.


வேதத்தின் அங்கங்கள் ஆறு.  அவை சிக்ஷா, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ் மற்றும் ஜோதிஷம்.  இந்தப் பாகங்கள் அனைத்தும் இறைவனின் பல்வேறு குணங்களைக் குறிக்கின்றன.  ஓதி என்பது ஓதுபவன் என்றும் ஓதப்படுபவன் என்றும் பொருள்படும்.  இது எவ்வாறு என்று பார்ப்போம்.  சிக்ஷை என்பது எவ்வாறு ஒலியும் சந்தி எனப்படும் சேர்த்தியும் ஏற்படுகின்றன என்று விளக்குகிறது.  ஒலிக்கு ஆதாரம் நாதம்.  இது இறைவனின் ஒரு அம்சம்.  அதேபோல் சந்தஸ் என்பதும் நாதத்தை அடிப்படையாகக் கொண்டது.  வியாகரணம் என்பது இலக்கணம்.  சிவ பெருமான் நடனமாடியபோது அவரது கையில் இருந்த உடுக்கையின் ஒலியே அஷ்ட த்யாயி என்ற பாணினியின் இலக்கணத்துக்கு அடிப்படையானது என்று நூல்கள் கூறுகின்றன.  இதேபோல் நிருக்தம் என்பது சொற்களும் அவற்றின் பொருளும் எவ்வாறு தோன்றின என்பதை விளக்குவது. சொல்லும் பொருளும் இறைவனிடமிருந்தே தோன்றின.  சோதிடம் என்பது சூரியனும் பிற கோள்களும் எவ்வாறு நகருகின்றன என்றும் யோகம் மற்றும் சடங்குகளை எப்போது செய்தால் பரவுணர்வு பெறலாம் என்றும் கூறுகிறது.  இவ்வாறு வேதத்தின் ஆறு அங்கங்களும் இறைவனைப் பற்றியும் அவனை எவ்வாறு அடைவது என்பதைப் பற்றியும்தான் கூறுகின்றன.  இதுவே அவற்றின் இலக்கு.  இதைவிடுத்து மக்கள் வேத சடங்குகளுக்கு வேறு பயன்களைக் கூறி அவற்றைப் பெறுவதற்கே வேதம் ஓதவேண்டும் என்று கூறுகின்றனர்.  அத்தோடல்லாமல் அவற்றையும் விரிவாகப் பெருக்குகின்றனர்.  இதைத்தான் திருமூலர் சாடுகிறார்.

No comments:

Post a Comment