Thursday 4 June 2015

1.2.51 There is no difference between Brahma, Vishnu and us

Verse 51
பயன்அறிந் தவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால்நமக் கன்னியம் இல்லை
நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்
வயனம் பெறுவீர்அவ் வானவ ராலே.

Translation:
Knowing the effect and contemplating on that path
In this respect we are not different from Brahma and Vishnu
The beloved is Nandi with three eyes
You will get liberation due to that one belonging to the sky.

Commentary:
Tirumular describes an important concept here.  In the first two lines he says that when we know the philosophy, the effect and we try to remain in that path of contemplation we are not different from Brahma and Vishnu.  We have already seen that Brahma represents the state of the soul with the five innate impurities- aanava, karma, maya, mayeya and tirodhana, while Vishnu represents a soul with four of these impurities.  They are the deities of muladhara and svadishtana cakra.  These two cakras constitute a human being.  All his karma stored at the muladhara are brought to effect through the svadishtana.  Thus, we understand what these two deities represent then we realize that we are not different from them, we are also a product of the muladhara and svadishtana cakra.  Nandi with three eyes represents the state of universal perception, where distinctions are lost and singularity ensues.  Only that state confers us true knowledge and liberation. 

இப்பாடலின் முதல் இரண்டு வரிகளில் திருமூலர் ஒரு முக்கியமான கருத்தைக் கூறுகிறார்.  சித்த மார்க்கத்தின் தத்துவத்தையும் அது குறிக்கும் பயனையும் அறிந்து அதனைத் தியானம் செய்யும் ஒருவன் பிரம்மா விஷ்ணு என்ற தெய்வங்களுக்கு ஒப்பாவான் என்கிறார் திருமூலர்.  இது எவ்வாறு என்று பார்க்கலாம்.  பிரம்மா என்பவர் ஐந்து மலங்களைப் பெற்ற ஒரு ஆத்மாவையும் விஷ்ணு என்னும் நிலை நான்கு மலங்கள் பெற்றிருக்கும் ஒரு ஆத்மாவையும் குறிக்கின்றன என்று முன்னமே பார்த்தோம்.  ஒரு மனிதப் பிறவி என்பது மூலாதாரத்தில் சேர்த்துவைக்கப்பட்ட கர்மாக்கள் சுவாதிஷ்டானத்தின் மூலம் பயனளிக்கத் தொடக்கி அதனால் தோன்றுவது.  இவ்வாறு மனிதன் என்பவன் பிரம்மாவின் இடமான மூலாதாரம் விஷ்ணுவின் இடமான சுவாதிஷ்டானம் என்ற இரண்டு சக்கரங்களையும் குறிப்பவன்.  இவ்வாறு நாமும் அயனும் மாலும் ஒன்று என்றாகிறது. 


முக்கண்ணனான நந்தி என்பது இருமை நிலையைத் தொலைத்து ஒருமையான பார்வையைப் பெற்ற ஆத்மாவைக் குறிக்கிறது.  இந்த நிலை ஒருவருக்கு ஞானத்தையும் சம்சாரத்திலிருந்து விடுதலையையும் அளிக்கிறது.  இதையே கடைசி இருவரிகள் குறிப்பிடுகின்றன. 

No comments:

Post a Comment