Verse 2
வேதம் உரைத்தானும் வேதிய னாகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்கா
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்கா
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.
Translation:
The one who uttered Veda did not become a
vediyan
The one uttered Veda so that Veda
(transformation, knowledge) becomes clear
The one uttered Veda for the austerities
of the vediyar (those who perform Veda)
The one uttered Vedam to reveal the true
meaning/entity.
Commentary:
In the Tamil Siddha system all the
external rituals have an internal component.
Thus a “velvi” or yaga performed outside to produce an effect also has a
corresponding effect within. Hence the
term Veda has at least two meanings that are relevant here. It refers to the ancient knowledge system as
well as alchemy or transmutation, (vedai in Tamil). Thus, a vedhiyan is one who performs external
ritual as well as internal transmutation.
The one referred to in the first line as
one who uttered Veda is Brahma as well as the Supreme Being. All knowledge emerges from the Supreme
Being. When it is said that the one who
uttered the Veda did not become vedhiyan, it means Brahma is the Supreme
Divine. It also means that the Supreme
Being does not undergo any transformation himself; he is not the vediyan who
performs the transformation on himself.
He is the changeless entity. Then
why did he utter the Veda? Tirumular
says that it was done to explain the concept of veda. Here the Veda is both, the four knowledge
systems as well as the procedure for transformation. This procedure for transformation is the ‘velvi’
and the effect of this austerity is seeing the “mei porul” or true entity, the
Divine.
தமிழ் சித்த மார்க்கத்தில் வெளியில்
செய்யப்படும் ஒரு சடங்குக்குத் தொடர்புடைய உள் மாற்றம் ஒன்று உள்ளது. இவ்வாறு வேள்வி
அல்லது வெளியில் செய்யப்படும் யாகத்துக்கு ஒரு அந்தர்யாகம் அல்லது உள்ளே ஒரு வேள்வி
உள்ளது. அது உடலிலும் மனத்திலும் ஒரு மாற்றத்தை
ஏற்படுத்துகிறது. இதனால் வேதம் என்பதற்கு நான்கு
ஞான நூல்கள் என்றும் உள்ளே நடைபெறும் மாற்றம் (வேதை) என்று இரு பொருள்களைக் கூறலாம். அதேபோல் வேதியன் என்பவன் ஹோமம் வளர்த்து வேதத்தை
ஓதுபவன் என்றும் உள்ளே ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்பவன் என்று இரு பொருள்கள் உள்ளன.
முதல் வரியில் வேதத்தை உரைத்தவன் என்பது
பிரம்மாவையும் இறைவனையும் குறிக்கும்.
எல்லா ஞானங்களும் இறைவனிடமிருந்து தோன்றின. அதனால் அவனே வேதத்தை உரைத்தவன். அவன் பிரம்மாவின் மூலமாக உலகில் வேதத்தை
உரைத்தான். இந்த வேதத்தை உரைத்தவன்
வேதியன் அதாவது மாற்றமடைபவன் அல்லன். பிரம்மா
பரம்பொருள் அல்ல, ஏனெனில் அங்கு உரைப்பவன் கேட்பவன் என்ற இருநிலைகள் உள்ளன. இறைவனும் வேதியன் அல்லன், தன்னுள் ஒரு
மாற்றத்தை ஏற்படுத்துபவன் அல்லன், தான் தானாகவே இருப்பவன்.
அவன் எதற்காக வேதத்தை உரைத்தான்? வேதா விளங்கிட. வேதா அல்லது அறிவு விளங்கிட, மாற்றம்
விளங்கிட. இந்த மாற்றம் நடைபெறுவதே
வேள்வி. அதற்காகவே வேதத்தை அவன் உரைத்தான். இந்த வேள்வியினால் பெறப்படுவது மெய்ப்பொருள்
தரிசனம்.
No comments:
Post a Comment