Verse 53
வானவர் என்றும் மனிதர்இவர் என்றுந்
தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது
தானமர்ந் தோருந் தனித்தெய்வம் மற்றில்லை
ஊனமர்ந் தோரை உணர்வது தானே.
தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது
தானமர்ந் தோருந் தனித்தெய்வம் மற்றில்லை
ஊனமர்ந் தோரை உணர்வது தானே.
Translation:
As celestials and human
Are due to the grace of Sivan who adorns the “konrai” flower with honey
The singular deity that sits and decides, there is none other
The one who sits within the flesh, realize him/what is realized is self/
what realizes this is self.
Commentary:
Classifications such as celestials, humans and other life forms are all due
to Siva’s grace. Celestials are those
who have crossed all the limitations, humans are those who are confined by self
imposed limitations. It is Siva’s grace
that helps souls transition from one state to the other. He is the one and only, singular God, there
is no other deity. He remains within the
body.
The term “unarvathu thane” at the outset appears as if Tirumular is saying “why
not realize him”. It can also be
interested in two other ways. It means
the one who realizes Siva is the thaan or Self.
If the Siva is realized he will be found to be the Self.
Thus, Tirumular has packed three different meanings within the two words “unarvathu
thane”.
உயிர்கள் வானவர் என்றும் மண்ணவர் என்றும்
பல நிலைகளைப் பெறுவது சிவனின் அருளால் என்கிறார் திருமூலர். வானவர் என்பவர் மலங்களைக் கடந்தவர். மண்ணவர் அல்லது மனிதர் மலத்தால் மூடப்பட்டு
தன்னிலையை உணராதவர். இத்தகைய நிலைகளில் ஒன்றில்
இருப்பதும் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குச் செல்வதும் சிவனருளால்தான். அத்தகைய அருள் பெற்ற சிவன் தனியொரு தெய்வம்,
மற்றைத் தெய்வம் வேறில்லை என்னும் திருமூலர் அவன் உடலுள் உறைகிறான்
என்கிறார். இதனை அடுத்து வரும் உணர்வது
தானே என்ற இரு சொற்களுக்குள் அவர் மூன்று பொருள்களை ஒளித்துவைத்துள்ளார்.
மேலோட்டமாகப் பார்க்கும்போது இத்தகைய சிவனை உணர்வது தானே, அதைத் தவிர
பிறவியெடுத்ததற்கு வேறு பயன் இருக்கிறதா என்று கேட்பதைப் போல உள்ளது. இத்தகைய பெருமை வாய்ந்த சிவனை உணர்வது தான்
என்னும் ஆத்மாதான் என்றும் இத்தகைய சிவனை உணர்ந்தால் அவன் தானே அதாவது ஆத்மாவே
என்றும் இச்சொற்களுக்குப் பொருள் கூறலாம்.
No comments:
Post a Comment