Monday, 2 March 2015

1.2.6 He is near and far. He is the effort, its terminus and the rain cloud

Verse 6
அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை
முயலும் முயலின் முடிவும்மற் றாங்கே
பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே.

Translation:
Seeing near and far, is possible if my Origin is perceived.
There no other greater god
The effort, its end and also
The cloud that rains, its name is verily Nandi.

Commentary:  Thirumular says that Siva is closer as well as far.  He is immanent and transcendent.  He is within us and so close, he is all pervading.  He remains even the farthest universe and hence far from us.  He is easy to reach through the right means and hence is close.  He is impossible to reach if we choose the wrong path and is hence very far.  He is close if we have good qualities.  He is far away from those with evil qualities. 

There is no other god greater than him.  He is the supreme.  He is the means, the goal and the one who grants the ultimate state.  Tirumular calls the ultimate state as the cloud that rains. Just as how the cloud rains for everyone without any discrimination the Lord showers his grace when he thinks that a soul is worthy of it.  It is his decision and not the prequalifications present in the soul that warrants the descent of grace.  This supreme god is Nandhi.

The rain cloud also signifies the descent of amrit from lalata that occurs by the grace of supreme consciousness, Nandhi.

இறைவன் மிக அருகில் இருப்பவன் மிகவும் தூரத்தில் இருப்பவன் என்கிறார் திருமூலர். அவன் நமக்குள் இருப்பவன் அதனால் மிகவும் அருகில் உள்ளான்.  அவன் அண்டங்கள் அனைத்துமாக இருப்பவன் அதனால் தூரத்தில் உள்ளான்.  அவனை சரியான வழியில் முயன்றால் அடைவது எளிது அதனால் அருகில் உள்ளான்.  தவறான வழியில் முயன்றால் அவனை அடைவது இயலாது.  அதனால் தூரத்தில் உள்ளான்.  அவன் நற்குணங்கள் உள்ளவருக்கு அருகில் இருக்கிறான், தீயவர்களிடமிருந்து வெகு தூரத்தில் உள்ளான். 
இந்த இறைவனே முயற்சியாகவும், அதன் முடிவாகவும் மழைமேகமாகவும் இருக்கிறான் என்கிறார் திருமூலர்.

மழை மேகம் எவ்வாறு வேண்டுதல் வேண்டாமை இல்லாமல் அனைவருக்கும் நீரைப் பொழிகிறதோ அதைப் போல இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைவருக்கும் தனது அருளைப் பொழிகிறான்.    அவனது அருள் அவனது சங்கல்பத்தால் ஏற்படுகிறது, ஆன்மாக்களின் தகுதியினால் அல்ல.  மழை மேகம் என்பது உயருணர்வு நிலையில் லலாடத்திலிருந்து பொழியும் அமிர்தத்தையும் குறிக்கிறது.  இவ்வாறு குண்டலினி யோகம் என்ற முயற்சியாகவும் அதன் முடிவான துரியாதீதமாகவும் அதனால் கீழே இறங்கும் அமிர்தமாகவும் இறைவனே விளங்குகிறான்.  அவன் பேர் நந்தி, பரவுணர்வு என்கிறார் திருமூலர். 

3 comments:

  1. அம்மா,


    உண்மையில் இறைவன் என்பது நம் முன் இருக்கும் வெற்றிடமா? அல்லது கண்களுக்கு தெரியாமல் வேறு சக்தி எதாவது உண்டா? வள்ளளார் பெருமான் இறைவன் ஒளி வடிவானவன் என்று கூறியுள்ளரே?

    ReplyDelete
  2. இறைவன் வெற்றிடம் அல்லது வெட்டவெளி என்று கூறுவது ஒன்றும் இல்லாத சூனியம் என்று பொருளல்ல. வெட்டவெளி என்பது அனைத்தையும் தன்னுள் அடக்கியது. உபநிடதங்கள் குறிப்பிடும் ஆகாசம் என்னும் வஸ்துவாகும். இது பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசம் அல்ல. இது அனைத்தையும் தன்னிடமிருந்து உருவாக்குவது அனைத்தையும் தாங்குவது (பிற பூதங்கள் இல்லாத இடத்திலும் ஆகாசம் இருக்கிறது) அனைத்தையும் முடிவில் தன்னில் லயிக்கச் செய்வது. வள்ளலார் பெருமான் கூறிய ஒளி வடிவம் என்பதைத் திருமூலர் தனது ஒன்பதாம் தந்திரத்தில் விளங்கு ஒளி என்று குறிப்பிடுகிறார். அந்த ஒளி ஞான ஒளி, அனைத்து அறிவுக்கும் அறிவாக இருப்பது.

    இறைவன் கண்ணுக்குத் தெரியாதவன் என்று குறிப்பிடுவது அவன் இவ்வாறு இருப்பான் என்று நாம் எண்ணும் உருவில் கண்ணுக்குத் தென்படாதவன் என்ற பொருளில் சொல்லப்படுவது. அண்ட சராசரங்கள் அனைத்தும் அவனது உருவமே. ஏனெனில் அவற்றின் இருப்பு அவனால்தான் ஏற்படுகிறது. பஞ்ச பூதங்கள், குணங்கள், அவற்றைப் பார்க்கும் நமது புலன்கள் அப்பொருட்களின் குணங்கள் அவற்றை அனுபவிக்கும் நமது மனதின் மாறுபாடுகள் என்று அனைத்தும் அவனிடமிருந்து தோன்றுபவையே. அதனால் நாம் காணும் பொருட்கள் அனைத்தும் அவனே. அவன் யாரோ வெளியில் இருக்கும் பொருள் அல்ல. நமக்குள் இருக்கும் உணர்வின் உச்ச நிலையான பரவுணர்வு. அதன் இருப்பை உணராமல் நாம் அளவுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறோம்.

    ReplyDelete
  3. நன்றி அம்மா

    ReplyDelete