Verse
5
பொன்னாற் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே.
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே.
Translation:
As
the golden dreadlocks
In
the back, the one who remained so was called Nandi
He
is the one worshipped by me, however,
There
is none worshipped by him.
Commentary: The dreadlocks of Siva indicate his supreme
power. It also represents the network of
nadi that pass through the back of the head and reach the front. These subtle nadi confer a state of supreme
consciousness, the state called Nandi. After saying that he is worshipped by
celestials and great souls Thirumular makes it more personal by saying that it
is Siva whom he worships. Thereis no one superior to Siva, no one whom Siva worships.
He is the supreme, the ultimate.
இறைவனை பொன்போன்ற சடைமுடியை உடையவன் என்கிறார்
திருமூலர். இறைவனின் சடைமுடி அவரது
சக்தியைக் குறிக்கிறது. அது நமது உடலில்
உள்ள நாடிகளையும் குறிக்கிறது என்பதைக் காட்ட இறைவனை அவர் நந்தி என்று அழைக்கிறார். நந்தி நிலை பரவுணர்வு நிலை நாடிகளின் மூலம்
குண்டலினி யோகத்தில் பெறப்படும் நிலை. சடை
முடி தலையின் பின் உள்ளது என்று அவர்
கூறுவதற்குக் காரணம் இந்த நாடிகள் தலையின் பின்னாலிலிருந்து நம் நெற்றியை நோக்கி
வருகின்றன. இதைத்தான் இறைவனின் தலைக்குப்
பின் ஐந்தலை நாகம் இருப்பதைப் போல பல படங்கள் சித்தரிக்கின்றன. இறைவனின் உருவத்தை விவரித்த பிறகு அவருக்கும்
தனக்கும் உள்ள உறவை திருமூலர் கூறுகிறார்.
உலகின் அதிபதியாக அனைத்துக்கும் தலைவராக இருக்கும் அந்த இறைவனே தன்னால்
வழிபடப்படுபவன் என்கிறார் அவர். ஆனால்
அந்த இறைவனால் வழிபடப்படுபவர், அவரை விட உயர்ந்தவர் யாரும் இல்லை என்று கூறி
திருமூலர் இப்பாடலை முடிக்கிறார்.
No comments:
Post a Comment