Monday, 16 March 2015

1.2.18 The Lord of fire, do not say that he does not exist

Verse 18
வல்லவன் வன்னிக் கிறையிடை வாரணம்
நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை
இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின் றானே. 

Translation;
The capable, the lord of the fire with the elephant (skin) on his waist
The Isa who established the rules to stay,
Do not say that he does not exist. He, the first of the gods
Is blessing night and day.

Commentary:  The lord is omnipotent.  All the fires in the world, the kundalini agni, digestive fire-jataragni, the fire that keeps the waters of the ocean in check- padabaagni, the three types of house fires- aahavaneeyam gaarhapatyam and daakshinaagni, the fire under the earth the effect of which is seen as the temperature of world, the fire of volcanos, are all under his control.  While no one can see him it is not correct to say that he does not exist because he, being the first of the gods, is constantly blessing the world. 


இறைவன் சர்வ வல்லமை படைத்தவர்.  அவர் எல்லா நெருப்புக்களுக்கும் அதிபதியாவார்.  அந்த நெருப்புக்கள் யாதெனில், குண்டலினி அக்னி, உணவை செரிக்கச் செய்யும் ஜாடராக்னி,  கடல் நீரை கரைதாண்டிவிடாமல் வைக்கும் படபாக்னி, மனையில் வணங்கப்படும் ஆஹவநீயம், கார்ஹபத்யம், தாக்ஷிணாக்னி, உலகின் தட்பவெப்பத்தைக் கட்டுப்படுத்தும் பூமியினுள் இருக்கும் அக்னி, எரிமலை வெடிக்கும்போது வெளிப்படும் அக்னி என்பவை.  இவையனைத்திலும் திருமூலர் இங்கு குறிப்பாகச் சொல்வது குண்டலினி அக்னியையே. அந்த அக்னி இருக்கும் மூலாதாரத்தில்தான் நமது பழவினைகள் உள்ளன.  அவை யானையைப் போல் எளிதில் அசைக்க முடியாதவை.  அந்த யானையைத்தான் சிவபெருமான் கொன்று இடையில் தரிக்கிறார், நம்மை நமது கர்மங்களிலிருந்து விடுவிக்கிறார்.  அந்த கர்மங்கள் நம்மைக் கட்டுப்படுத்துவதிலிருந்து நாம் அவற்றைக் கட்டுப்படுத்துவதாக மாற்றுகிறார். இதற்கு அவர் பல விதிகளை ஏற்படுத்தியுள்ளார்.  அத்தகைய இறைவனை இல்லை என்று கூறக்கூடாது ஏனெனில் அவர் பகலும் இரவும் நமக்குத் தமது அருளைத் தந்த வண்ணம் இருக்கிறார் என்கிறார் திருமூலர்.

No comments:

Post a Comment