Verse 27
மண்ணகத் தான்ஒக்கும் வானகத்தான் ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத் தின்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே.
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத் தின்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே.
Translation:
Equivalent to the one of the
earth, equivalent to the one of sky
Equivalent to the one of
space, equivalent to the one of Veda,
The one who is praised by
sweet music and meter
I remained at the locus of the
eye and loved him.
Commentary:
The terms mannagatthaan,
vaanagatthaan and vinnagatthaan usually refer to humans, celestials and
liberated souls. It also refers to a
woman who contributes the womb, the earth, the man who contributes the semen
which has the sky element and the Divine who is all pervading space who makes
these two come together. In this verse,
Tirumular refers to another concept.
Here mannagatthaan means one who is of earth. This term refers to Brahma who remains in the
muladhara cakra, the locus of the earth principle. Vaanagatthan then refers to Sadasiva the lord of space principle. Vinnagatthan refers to Siva, the pure
principle. Tirumular says that the
Supreme remains as the above three. Thus,
the Supreme performs the five functions- creation, sustenance, dissolution, concealment
and bestowal of grace as the various deities responsible for the same.
The one of Veda refers to the one who performs
the transformation. Veda refers to both,
scriptures and alchemy. It is the
Supreme who transforms the souls that remain the above mentioned three states
so that it becomes all pervasive. Thus,
Vedagatthaan is none other than Supreme consciousness. This Supreme manifests as the above four
through nadha whose gross form is music. Paadal also means red. There is Narasimha temple near Chennai where
the hill is called Paadalaadri which means red hill. Interestingly the Narasimha image has three
eyes, like Siva. The next line fits with
this when Tirumular says I remained in the locus of the eye and loved him. The eye referred to here is the third eye,
the eye of discrimination. Some people
opine that our two eyes are the gateway to the Divine. This is not very convincing as they are
material in nature and hence limited by maya.
The third eye, the eye of discrimination is attained when the soul
reaches a specific spiritual state. It feels more convincing to call this eye
as the gateway to the Divine. Hence,
Tirumular should be referring to this third eye and not the material eye we are
all familiar with.
மண்ணகத்தான் என்பது பொதுவாக மானிடர்களையும் வானக்கத்தான் என்பது
தேவர்களையும் விண்ணகத்தான் என்பது அமரர்களையும் குறிக்கும். இச்சொற்கள் மண் அல்லது கருப்பையைக் கொண்ட பெண்ணையும்
ஆகாச தத்துவத்தைக் கொண்ட விந்துவையுடைய ஆணையும் இவர்கள் இருவரையும் இணைக்கும்
இறைவனையும் கூட குறிக்கும். இப்பாடலில்
திருமூலர் இந்தச் சொற்களை வேறொரு பொருளில் பயன்படுத்தியுள்ளார். மண்ணகத்தான் என்பது மண் தத்துவத்தின் இடமான
மூலாதாரத்தின் அதிபதியான பிரம்மனையும் வானகத்தான் என்பது ஆகாய தத்துவத்தின்
அதிபதியான சதாசிவனையும் விண்ணகத்தான் என்பது பர நிலையையும் குறிக்கும். பரம்பொருள் அல்லது பரசிவன் எனப்படும் பரவுணர்வு
இவையனைத்தையும், பரநிளையைக்கூட கடந்தது.
சர்வ சிருஷ்டி என்று இரண்டாம் தந்திரத்தில் திருமூலர் இவற்றை
விளக்கப்போகிறார். பரம்பொருள் இவர்களுக்கு
ஒத்ததாக இருந்து ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் அருளால்
என்பவற்றை நிகழ்த்துகிறது.
வேதகத்தான் என்பது வேதத்தின் அதிபதி என்று
பொருள்படுகிறது. வேதம் என்ற சொல் பொதுவாக
மறை என்று பொருள் தந்தாலும் சித்தர்கள் பரிபாஷையில் அது ரசவாதத்தைக்
குறிக்கும். இங்கு குறிப்பிடப்படும்
ரசவாதம் ஆத்மாக்களின் அளவுக்கு உட்பட்டமையை மாற்றி அவற்றை சர்வவியாபியாக்குவது. இதைச் செய்வதும் பரம்பொருளே.
இத்தகைய பரம்பொருள் “பண்ணாகத்தில் நின்று பாடலுற்றான்”
என்கிறார் திருமூலர். இறைவனின் செயல்கள்
அனைத்தும் நாதத்தின் மூலமே நடைபெறுகின்றன.
நாதத்தின் வெளிப்பாடு பாடல். இந்த இடத்தில்
நாம் பாடல் என்ற சொல்லைக் கவனிக்கவேண்டும்.
சென்னைக்கருகே பாடலாத்ரி என்றொரு குன்றில் ஒரு நரசிம்மர் கோயில்
உள்ளது. இங்கு பாடலத்ரி என்பது சிவந்த
குன்று என்ற பொருளில் தோன்றுகிறது.
பாடலுற்றான் என்ற சொல்லை இப்பொருளில் பார்த்தால் குண்டலினி யோகத்தில் ஒரு
யோகியின் உடல் சிவந்த நிறத்தைப் பெறுவதைக் குறிக்கிறது. இந்த கோயிலில் உள்ள நரசிம்மர் உருவம் சிவனைப்
போல மூன்று கண்களைப் பெற்றுள்ளது. இந்த
வரியை அடுத்து திருமூலர் அத்தகைய மேன்மையான இறைவனைத் தான் கண்ணகத்தில் நின்று
காதலிக்கிறேன் என்கிறார். இங்கு அவர்
குறிப்பிடும் கண் மூன்றாம் கண்ணான விழிப்புணர்வு.
சிலர் நமது பருப்பொருளான கண்ணே இறைவனை அடைவதற்கு வழி அதுவே இறைவனின் பாதம்
என்று குறிப்பிடுகின்றனர். நமது ஊனக்கண்
பிரக்கிருதியால் ஆனது, அழிவுக்கு உட்பட்டது.
மனதின் காட்டுப்பாட்டில் இருப்பது.
அதனால் அது இறைவனின் பாதமாக இருக்க முடியாது. நமது மூன்றாவது கண் ஆக்ஞையில் இருப்பதாகக்
காட்டப்படுகிறது. அதுவே நமது ஞானக்
கண். அக்கண்ணே இறைவனின் பாதம் அவனை
அடையும் வழி. இதைத்தான் திருமூலர் இந்த
ஞானக்கண்ணால் அனைத்தையும் சரியாக உணர்ந்து அன்பெனும் நெறியில் தான் நிற்பதாகக்
கூறுகிறார்.
நன்றி அம்மா
ReplyDeleteஓம் அகத்தீசாய நமஹ
ReplyDelete