Tuesday 3 February 2015

17. I remained in Avaduthanthurai under the grace of Niradhisaya aanandha nerizhaiyaal



Verse 17
நேரிழை யாவாள் நிரதி சயானந்தப்
பேருடை யாள்என் பிறப்பறுத் தாண்டவள்
சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை
சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே

Translation:
The lady, the one who has the name
Niradhisaya aanandham, the one who cut my birth and ruled me
The lady, who has the glory Sivan aavaduthan thurai
I remained associated with that glorious lady’s feet/locus.

Commentary:  Tirumular calls Sakthi as Niradhisaya aanandam- or supreme bliss.  It is through Sakti that one gets rid of one’s cycle of birth and death.  All the actions performed towards this goal are due to Sakthi’s grace. 

Sivan aavadu thanturai is an interesting word-  aa means cow or pasu, padu turai- means the way it abides.  Thus, this term means the way the pasu reaches siva or the way siva makes himself known to the pasu. This occurs only because of Sakti. Hence, Tirumular says that he remained in the sacred locus/feet, of the lady who has the glory , sivan aavadu thanthuraiaal.


திருமூலர் சக்தியை நிரதிசய ஆனந்த நேரிழையாள் என்கிறார்.  சிவ சக்திகளில் சிவம் இருப்பு அல்லது சத்தையும் சக்தி சித் அல்லது உணர்வையும் குறிக்கிறார்கள்.  இந்த சத்தும் சித்தும் சேரும்போது, இறைமை தன்னை உணரும்போது, ஏற்படுவது ஆனந்தம்.  இதைத்தான் காஷ்மீர சைவத்தில் ஸ்பந்தம் என்பார்கள்.  இந்த ஆனந்த்தின் வெளிப்பாடே உலகமாக விரிகிறது.

பரவுணர்வு நிலையை அடைவதற்கு ஐந்து கலைகள் உள்ளன என்று திருமூலர் மேல் வரும் தந்திரங்களில் கூறப்போகிறார்.  அதில் சிவநிலை என்பது சாந்தி அதீத கலை எனப்படும்.  அதுவே உச்ச நிலை.  அதற்கு முற்பட்டது சாந்தி கலை அதுவே சக்தி நிலை.  அதனால் இறைவனை அடைவதற்கு, பிறப்பிறப்பு அறுபடுவதற்கு, சக்தியே காரணமாகிறார்.  அவளது செயலால் உயிர்கள் சிவநிலையை அடைகின்றன. 

சிவன் ஆபடுதண்துறை என்னும் சொல் மிகவும் விசேஷமான ஒன்று.  பொதுவாக இது திருமூலர் இருந்த தலம் என்று கருதப்பட்டாலும் இதற்கு மற்றுமொரு விளக்கமும் உள்ளது.  ஆ என்றால் பசு. ஆபடுதுறை என்றால் பசு சேரும் வழி என்று பொருள்.  சிவன் ஆபடுதுறை என்றால் சிவன் உயிர்களை அடையும் வழி அல்லது உயிர்கள் சிவனை அடையும் வழி என்று பொருள் கூறலாம்.  அதனால் திருமூலர் சிவன் ஆவடுதுறையில் இருந்தேன் என்று கூறுவது  உயிரான அவர் சிவனை அடைவதான பரவுணர்வு நிலையில் இருந்ததைக் குறிக்கும்.  இது சக்தியினால்தான் ஏற்படுகிறது.  அதனால்தான் அவர் சீருடையாள் பதம் இருந்தேன், சக்தியின் அருளில் இருந்தேன் அல்லது சக்தி நிலையில் சாந்தி கலையில் இருந்தேன் என்று கூறுகிறார். 

No comments:

Post a Comment