Tirumandiram
Paayiram
Verse 1.
ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தான்இருந் தான்உணர்ந் தெட்டே.
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தான்இருந் தான்உணர்ந் தெட்டே.
Translation:
He is the only one/self, his grace
two,
He stood within three, he realized
four,
He won five, he spread six, he went
to the celestials seven,
He/Self remained with after
realization eight/you reach.
Commentary: This verse is open to a
variety of commentary as Tirumular has intentionally made it general. Other than the gender he does not name the
divinity here. The divinity is the singularity. The word “thaane” means only
and also “only the self”. Grace two
means blessing and punishment. It may
also mean that when he and his grace are mentioned there are two entities. The three may mean (1) the three nadi,
ida,pingala and sushumna, (2) past, present and future, (3) deva, asura and
nara, (4) agni, surya and Chandra mandala, (5) Rudra, Vishnu and Brahma, (6)
pooraka, rechaka and kumbaka-parts of pranayama to realize him, (6) iccha, kriya and jnana. Realized four may mean realized the nature of
jiva, siva, para and parapara or realized the four states of consciousness- the jagrit, svapna, sushupti and turiya. He won
five are (1)
the five senses, (2) the five mala-aanava, karma, maya, mayeya, tirodhaya. He spread six means he pervaded the (1) six
cakra, (2) the six vidya tattva, (3) the six siva tattva. He went to the seven- the seventh place, the
dvadasa antha which is the point of merging with the supreme space. It also means the seven worlds or seven states of consciousness are also the Lord. In that supreme state he remained as akaara
the tamil letter for number 8. “ettu”
also means try to reach him. The lord is
said to have 8 supreme qualities.
இப்பாடலுக்குப் பல பொருள்கள் கூறலாம். திருமூலர் இந்த கருத்திலேயே இப்பாடலைப் பொதுவாகப் புனைந்துள்ளாரோ என்று தோன்றுகிறது. இறைவனை ஆண்பால் என்று குறிப்பிடுவதைத் தவிர அவர் வேறு எந்தக் குறியீடையும் இப்பாடலில் கொடுக்கவில்லை. இறைமை என்பது ஒருமை நிலை. தனி நிலை. அதைக் குறிக்கவே அவர் "தானே" என்று கூறுகிறார். அது தானே என்பது தான் அல்லது ஆத்மா என்றும் பொருள்படும். இரண்டு அவன் அருள் என்பது மறக்கருணை அறக்கருணை அல்லது அருள், தண்டனை என்ற இரண்டு என்று பொருள் கூறலாம். அல்லது இறைவன் அவனது அருள் என்ற இரு வஸ்துக்கள் என்றும் பொருள் கூறலாம்.
நின்றான் மூன்றினுள் என்பது உணர்வு இடை பிங்கலை சுழுமுனை என்ற மூன்று நாடிகளில் பாய்கிறது என்றும் நேற்று இன்று நாளை என்ற முக்காலத்திலும் இருப்பவன் இறைவன் என்றும் இறைவன் தேவர்கள் அசுரர்கள் நரர்கள் என்ற மூவித மக்களுள் நிற்கின்றான் என்றும் இறையுணர்வு சூரிய சந்திர அக்னி மண்டலங்களில் பாய்கின்றது என்றும் பிரம்மா விஷ்ணு ருத்திரன் என்ற முக்கடவுள்களாக இருப்பவனும் அவனே என்றும் பூரகம் ரேசகம் கும்பகம் என்ற மூன்று மூச்சுப் பயிற்சிகளின் மூலம் பெறப்படுபவனாகவும் இருக்கிறான் என்றும் இச்சை கிரியை ஞானம் என்ற மூன்றாக இருப்பவன் என்றும் பொருள் கூறலாம்.
நான்கு உணர்ந்தான் என்பது ஜீவன், சிவன், பரன் பராபரன் என்ற நான்கு நிலைகளை உணர்ந்தவன் என்றும் நனவு, கனவு, ஆழ் உறக்கம் துரியம் என்ற நான்கு அவத்தைகளை உணர்ந்தான் என்றும் பொருள் கூறலாம்.
ஐந்து வென்றான் என்பது ஐந்து மலங்களான ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதானம் என்பவற்றை வென்றான் என்றும் ஐம்புலன்களை வென்றவன் என்றும் பொருள் கூறலாம். ஆறில் விரிந்தான் என்பது ஆறு சக்கரங்கள், ஆறு சிவ தத்துவங்கள், ஆறு வித்யா தத்துவங்களாக விரிந்தான் என்று பொருள் கொள்ளலாம்.
ஏழு என்பது ஏழு உலகங்கள் அல்லது ஏழு உணர்வு நிலைகள் என்று பொருள்படும். ஏழு என்பது ஆறு ஆதாரங்களைக் கடந்த துவாதசாந்தத்தையும் குறிக்கும். அவ்வாறு இருக்கும் இறைவன் எட்டு குணங்களைக் கொண்டவன் அல்லது எட்டு என்னும் எண்ணைக் குறிக்கும் அகாரமாக இருக்கிறான். அத்தகைய இறைவனை எட்டு என்று நமக்கு திருமூலர் அறிவுறுத்துகிறார்.
மிக்க நன்றி அம்மா
ReplyDeleteதிருமூலரின் அருள் நம்மை வழி நடத்த வேண்டுவோமாக
ReplyDelete