Verse
3
ஒக்கநின் றானை உலப்பிலி
தேவர்கள்
நக்கன்என் றேத்திடும் நம்பனை நாள்தொறும்
பக்கம்நின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின் றுன்னியான் போற்றுகின் றேனே.
நக்கன்என் றேத்திடும் நம்பனை நாள்தொறும்
பக்கம்நின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின் றுன்னியான் போற்றுகின் றேனே.
Translation:
The
one who stood as equivalent, the countless devas
Praise
daily as the one who laughed/is naked,
The
paraman whom even those who stand near do not know
Entering,
standing, contemplating, I am praising.
Commentary:
After describing the supreme divinity which is beyond verbal description, now Thirumular
is referring to the form of divinity that is available for prayer. This is the stage where “aham” and “idam”
occurs. Hence, there is the distinction as the soul and the divine- the supreme
mala free state and the one mired in mala.
Thirumular says that the Devas praise this state and call him “nakkan”. This term means one who is naked and also one
who laughed. Puranas says that when the
triple cities, Tiripuram, had to be burnt Siva alighted the chariot with
weapons constituted by various deities.
When the devas thought that he is able to burn the cities only with
their help Siva laughed and burned the cities with his laughter. This episode is referred to here. The Lord is Dikambara, one who has the space
as his costume. This means he pervades all directions. He destroyed the Tripura with his loud laugh.
Laughing
produces a sound “ha”- this is the last word in the Sanskrit alphabet. The lord is the first letter “a” and the last
letter “ha”. Nandikesvara kashika (www.scribd.com)
says that the fifty one letters forms a garland and becomes aham or the self.
The lord is hid so well within the soul that
even those who remain near him do not know of his presence. The last line means that Thirumular entered
into the right state of mind, remained in that state and contemplated on the
divine and began this composition of praise.
வார்த்தைகளால் விளக்க முடியாத இறைவனின் வணங்கக் கூடிய உருவை
திருமூலர் இப்பாடலில் ஏத்துகிறார். இந்த நிலை அகம் இதம் அல்லது தான் அது என்ற
வேறுபாட்டை உடையது. நிர்மலமான இறைவன் மலத்தில் தோய்ந்த ஜீவன் என்ற பாகுபாட்டைக்
கொண்ட நிலை. அத்தகு இறைவனை தேவர்கள்
நக்கன் என்று ஏத்துகின்றனர் என்கிறார் திருமூலர்.
சிவபெருமானை “சிரித்துப் புரமெரித்த பெருமான்” என்று அழைப்பர். திரிபுர தகனத்தின்போது தேவர்கள் தமது
உதவியால்தான் சிவபெருமான் திரிபுரத்தை எரிக்கிறார் என்று எண்ணியபோது சிவபெருமான்
சிரித்தார். அதனால் இந்த முப்புரம்
எரிந்தது என்று புராணங்கள் கூறுகின்றன. நக்கன் என்றால் திக்குகளையே ஆடையாக உடையவன்
என்றும் பொருள்.
மேற்கூறிய புராண கதையின் ஒரு முக்கியமான கருத்து
உள்ளது. ஒருவர் சிரிக்கும்போது எழும்
சத்தம் ஹ என்பது. அகாரமான சிவன் ஹ என்று
சிரிக்கும்போது ஐம்பத்தொரு அட்சரங்களால் ஆன மாத்ருகா மாலையின் முதலெழுத்தும்
கடைஎழுத்துமாக அஹம் என்று இருக்கிறான். இந்த
அஹம் என்ற நிலையே சுத்த நிலை. இந்த அஹம்
என்ற நிலையை அடையும்போது மாயையால் ஏற்பட்ட ஆணவம், கர்மம், மாயை அல்லது சத்துவம்,
ரஜஸ் தமஸ் என்ற முக்குணங்களால் தோற்றுவிக்கப்பட்ட உலகம் என்ற முப்புரம்
எரிக்கப்படுகிறது. இதைத்தான் திரிபுர
தகனம் காட்டுகிறது.
இதனை பெருமை வாய்ந்த இறைவன் உயிருக்கு உயிராக இருந்தாலும்
அந்த உயிர் அவனை அறிவதில்லை என்கிறார் திருமூலர்.
அதைப் பற்றிய உணர்வு நிலையில் தான் இருந்து அவனை எண்ணியபடி பாடுகிறேன்
என்கிறார் அவர்.
No comments:
Post a Comment