Thursday, 29 January 2015

5. The Deer, the bull and the axe that never leave Siva

Verse 5
பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற
தற்பரன் கற்பனை யாகும் சராசரத்
தற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பத மும்அளித் தான்எங்கள் நந்தியே.

Translation:
The bull, the deer and the axe, without separating from them
The tharparam who remains so, in the world which becomes an imagination
Offering destruction, on my head
Granted me good status/locus also, our Nandi.

Commentary: Tirumular uses the word “pettram” to refer to the bull, the lord’s mount.  This term also means “pasu” the jiva.  The deer is referred to by the term “maan” which also means “mahat” the precursor for this manifested world Thus mahat indicates birth and death cycle of the souls.  The “mazhu” indicates that the lord cuts away the births and deaths of Jiva.  Hence, Tirumular says that he is eternally associated with these three entities. Tharparam is a state that Tirumular will describe later as that beyond the manifested world, beyond distinctions, beyond the effects of maya.  Hence Tirumular states that Tharparam remains with the world becoming an imagination.  The lord offered destruction of Tirumular’s birth and death cycle. This happened at the sahasrara in the head, that is, when consciousness reached this locus. This supreme state where the soul  transcends the body and remains as pure consciousness is the state of Nandi, the state of Self.

சிவனின் வாகனமான நந்தியைக் குறிக்க திருமூலர் பெற்றம் என்கிறார்.  இந்தச் சொல் பொதுவாக ஆநிரைகளைக் குறிக்கும், அதாவது, பசுவைக் குறிக்கும்.  நந்தியின் மீது அமர்ந்திருக்கும் சிவபெருமான் பசு நிலையைக் கடந்த பதி நிலையைக் காட்டும்.  அதனால்தான் இறைவனை பசுபதி அதாவது பசுக்களாகிய ஆத்மாக்களின் பதி என்கிறோம்.  

மான் என்று இப்பாடல் குறிப்பிடும் சொல்லுக்கு மகத் என்று பொருள் கொண்டால் அது உலகம் தோன்றுவதற்குக் காரணமான பிரகிருதிக்கு முற்பட்ட நிலையைக் குறிக்கும்.  

சிவனின் கையில் இருக்கும் மழு இவ்வாறு ஏற்படும் பிறவியை இறைவன் அறுத்தெறிவான் என்பதைக் குறிக்கும்.  இவ்வாறு சிவன் பெற்றம் என்னும் ஜீவன் அதன் அகங்காரத்தைக் குறிக்கும் மான் அதை அறுக்கும் மழு என்ற மூன்றோடு இறைவன் என்றும் பிரிவற்று இருப்பான் என்கிறார் திருமூலர். 

தற்பரம் என்ற நிலையைத் திருமூலர் பின் வரும் பகுதிகளில் மாயையைக் கடந்த நிலை, இருமைகளைக் கடந்த நிலை என்று விளக்குவார்.  அதனால் இந்த தற்பரம் உலகம் ஒரு கனவு என்ற நிலையில் நிற்கும் என்கிறார் அவர்.  இறைவன் திருமூலருக்கு பிறப்பு இறப்பிலிருந்து விடுதலை அளித்தான்.  அதை அவன் சஹாஸ்ராரத்தில் அதாவது சிரசில் அளித்தான்.  விழிப்புணர்வு சஹஸ்ராரத்தை அடையும்போது இந்த விடுதலை கிட்டுகிறது.  இந்த உயருணர்வு நிலையே நந்தி நிலை.   

No comments:

Post a Comment