Saturday, 31 January 2015

13. I remained for one crore eon

Verse 13
செப்பும் சிவாகமம் என்னுமப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பில்ஒரு கோடி யுகமிருந் தேனே.

Translation:
Uttering that with the name, sivagama
Getting the sacred feet of gracious Nandi who grants it
 After witnessing the singular/lonely dance in the faultless arena
I remained for an incomparable eon.

Commentary: Tirumular says he remained for a very long time uttering the Siva agama with  Nandi’s sacred feet in his mind, witnessing the dance of the divine in the arena of consciousness. Day/night, month, year and such divisions of time are calculated based on the number of breath.  Hence, when the yogin remains in samadhi with the breath stopped in kumbaka time also stops.  That is why Tirumular is saying that he remained in the state of higher consciousness for a crore eon. 

திருமூலர் தான்  இந்த உயர் உணர்வு நிலையில் நந்தியின் திருவடியைப் பெற்று சிவ ஆகமம் என்னும் பெயர் பெற்ற திருமந்திரத்தை உரைத்தபடி இறைவனின் தனிக்கூத்தை சித் அம்பரத்தில் பார்த்தபடி ஒரு கோடி யுகம் இருந்ததாகக் கூறுகிறார். 

பகல் இரவு, மாதம் ஆண்டு என்பது போன்ற காலத்தின் பாகுபாடுகள் நமது சுவாசத்தின் கணக்கினால் ஏற்படுகின்றன.  சமாதிநிலையில் மூச்சற்று இருக்கும்போது காலமும் நின்றுவிடுகிறது.  இதனால்தான் திருமூலர் தான் ஒரு கோடி யுகம் உயருணர்வு நிலையில் இருந்தேன் என்று கூறுகிறார். 

12. Tirumandiram is an agama

Verse 12
நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு
புத்தியி னுள்ளே புகப்பெய்து போற்றிசெய்
நந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ்
சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே.

Translation:
I adorned Nandi’s feet over my head
Made it enter my buddhi, praised it
The sacred feet of Hara that Nandi adorns in his mind
Contemplating up on it, I started my exposition.

Commentary: Tirumular is saying that with the knowledge that the state of supreme consciousness imparted and with devotion, he is compositing Tirumandiram in a state of contemplation.  Tirumular says that the Tirumandiram is an agama.  Some claim that the nine tantra correspond to the nine agama but there is no basis for this claim. Tirumandiram has sections that describe charya, kriya, yoga and jnana a characteristic of agama.


திருமூலர் தான் நந்தி நிலையை, உயருணர்வு நிலையைத் தனது புத்தியில் புகச் செய்து அந்த நிலையை அருளிய அரனடியைத் தொழுதபடி திருமந்திரம் என்னும் இந்த ஆகமத்தை இயற்றச் தொடங்கினேன் என்கிறார்.  திருமந்திரத்தில் சரியை கிரியை யோகம் ஞானம் என்ற நான்கு பகுதிகள் இருப்பது அது ஆகமம் என்பதை உறுதி செய்கிறது.   

11. "Do not leave your austerities"

Verse 11
எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்
செழுந்தண் நியமங்கள் செய்மின் என் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.

Translation:
Even if the great waters rise and shower, in the eight directions
The lord who said “do your niyama”
With the verdant, cool, coral-like hair
He blessed the four who were immersed.

Commentary: The Lord, Isa, who imparted the knowledge, told the four to not leave their practices even when the great deluge occurs.  This means the occurrence of the pralaya.  Among the souls the pralayakala lose their limited existence when pralaya occurs.  One wonders if the four Nathas were pralayakalas.


பிரளயம் வந்தபோதும் அவர்களது நியமங்களை விடவேண்டாம் என்று இறைவன் நான்கு நாதாக்களிடம் கூறினார்.  ஆத்மாக்களில் பிரளயகலர் என்பவர் பிரளயம் வரும்போது தமது அளவுக்குட்பட்ட நிலையை விடுகின்றனர்.  திருமூலர் கூறும் நாதாக்கள் பிரளயகலரோ என்று இதன்மூலம் தோன்றுகிறது. 

Friday, 30 January 2015

10. Triple fires

Verse 10
மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டகி லானே.

Translation:
The Isa told the triad and foursome
The glory. Birth and death destroyed
The flame, the Deva who became the three lights
He does not reveal the famous way in which it was removed.

Verse 10
மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டகி லானே.

Translation:
The Isa told the triad and foursome
The glory. Birth and death destroyed
The flame, the Deva who became the three lights
He does not reveal the famous way in which it was removed.

Commentary: The triad may be the three in the list, Sivayogi and  Patanjali and Vyagramar as Tirumular has already mentioned that he received the knowledge. The foursome may be the Nathas.  The three lights may be the sun, the moon and the fire or the flame of atma- atma jyoti, the flame of siva-siva jyoti and the supreme effulgence- paramjyoti.  Tirumular classifies souls as four types of vijnanakala, three types of pralayakala and three types of sakala.  Among these the Vijnanakala and pralayakala are close to attaining realization than the sakala.  As Tirumular has said three and four as two categories he may be meaning these two types of souls or the above mentioned seven may belong to these two categories.

இப்பாடலில் திருமூலர் மூவரும் நால்வரும் உபதேசம் பெற்றனர் என்கிறார்.  இந்த மூவர் என்பது சிவயோகி, பதஞ்சலி, வியாக்கிரமர் என்பவராக இருக்கலாம்.  திருமூலர் முன்னமே தான் உபதேசம் பெற்றேன் என்று கூறிவிட்டார்.  நால்வர் என்பது நான்கு நாதாக்களாக இருக்கலாம்.  மூவகை சோதிகள் என்பது ஆத்மசோதி, சிவஜோதி மற்றும் பரஞ்சோதியாக இருக்கலாம் அல்லது சூரியன் சந்திரன் அக்னி என்ற முத்தீக்களாக இருக்கலாம்.
திருமூலர் ஆத்மாக்களை நால்வகை விஞ்ஞானகலர் மூவகை பிரளயகலர் மூவகை சகலர் என்று பாகுபடுத்துகிறார்.  மேற்கூறிய பாடலில் அவர் மூவர் நாலவர் என்று கூறியது முன்பாடலில் கூறிய எழுவரில் இவ்வகை பாகுபாடு உள்ளதோ என்று எண்ணச் செய்கிறது

9. The four Nathas

Verse 9
நால்வரும் நாலு திசைக்கொன்றும் நாதர்கள்
நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதரா னார்களே.

Translation:
The four were the Natha/lords for the four directions
The four, with the help of several things
The four, saying “get all that I got”
The four became Deva and Natha.

Commentary:  Tirumular is talking about the four Nathas he mentioned in a previous verse.  He says that they travelled in all four directions with their knowledge and expertise and with everything within their means they imparted their knowledge and experience to others.  This turned them into deva and Natha.
 

மேற்கூறிய நான்கு நாதாக்களின் செய்கைகளை இப்பாடலில் திருமூலர் விவரிக்கிறார்.  நந்தியின் அருள் பெற்ற அவர்கள் நால்வரும் நான்கு திசைகளில் தமது அறிவு திறமை ஆகியவற்றைக் கொண்டு பல பொருட்களின் உதவியுடன் உலகுக்கு, தாம் பெற்ற நன்மையனைத்தையும் அவர்கள் பெறுமாறு உதவச் சென்றனர்.  அதனால் அவர்கள் நாதாக்கள், தேவர்கள் என்ற பெயரைப் பெற்றனர்.

8. Maalaangan, Indran who are they?

Verse 8
மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோ
டிந்த எழுவரும் என்வழி யாமே.

Translation:
The lineage of those who got the mantra, maalaangan
Indran, Soman, Brahman, Rudran
Kanduru Kaalaangi, Kanjamalayaan
These seven come in my way.

Commentary: This verse may be listing those who followed Tirumular’s lineage, the moola varga, or it may mean others who were in a similar state, guided by Nandi. Tirumular describes the mantra in a later verse as that “unarvu”-realization that occurs about the soul and the body.  This may be the reason for him naming his work as Tirumandiram or the sacred mantra as it describes the relationship between the body, the soul and the divine and the way to cross the distinctions and reach the supreme state.  It also describes the souls who have reached that state and the nature of that state in the coming tantirams.


பொதுவாக இப்பாடல் திருமூலரின் சீடர்களைக் குறிக்கும் என்று உரையாசிரியர்கள் கூறியுள்ளனர்.  இது திருமூலரை எவ்வாறு நந்தி வழிநடத்தினாரோ அதேபோல் இந்த எழுவரையும் நடத்தினார் என்றும் பொருள்படுகிறது.  திருமூலர் பின்னால் வரும் பாடலில் மந்திரம் என்றால் உணர்வு அதாவது உடலில் இருக்கும்போது ஆத்மா என்றால் என்ன என்ற உணர்வு என்று கூறுகிறார்.  அவர் தனது நூலுக்கு திருமந்திரம் என்ற பெயரை இட்டது அது உடலுக்கும் ஆத்மாவுக்கும் உணர்வு நிலைகளுக்கும் உள்ள உறவையும் அந்த நிலைகளை எவ்வாறு கடந்து பாகுபாடுகள் அற்ற நிலையை அடைவது என்று கூறுவதனாலோ என்று தோன்றுகிறது. இந்த நூல் அத்தகைய நிலையை அடைந்த ஆத்மாக்களைப் பற்றியும் அந்த உயருணர்வு நிலைகளைப் பற்றியும் பின்வரும் தந்திரங்களில் கூறுகிறது. 

Thursday, 29 January 2015

7. Moolan, who is he?

Verse 7
நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றேன்
நந்தி அருளாலே மூலனை நாடினேன்
நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நான்இருந் தேனே. 

Translation:
By Nandi’s grace I got the name Nathan
By Nandi’s grace I sought moolan
Nandi’s grace what all can it do in the land!
I remained, with Nandi showing me the way.

Commentary: Generally authors quote this verse to justify the story that Tirumular adorned the body of the cowherd moolan and composed Thirumandiram.  While Moolan is generally referred to as the cowherd it may also mean the lord of muladhara, the pasupati, the one who herds the souls, the pasu.  Thus, Thirumular composing Thirumandiram while remaining in Moolan’s body may actually mean that he remained in the state of Pasupati, the state of the one who has the pasu state under his control when he composed this work.  When he says he sought moolan by Nandi's grace it means only the grace of the Lord will help one pursue kundalini yogam.

Tirumular says that he remained guided by Nandi, the supreme consciousness that arises when kundalini ascends from muladhara.   


பொதுவாக உரையாசிரியர்கள் திருமூலர் மூலன் என்ற இடையனின் உடலில் புகுந்தார் என்ற கருத்துக்கு இப்பாடலைச் சான்றாகக் கூறுவர்.  மூலன் என்பவன் பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்த இடையன் என்று நூல்கள் கூறினாலும் அது மூலாதாரத்தில் உள்ள இறைவனையும் குறிக்கும்.  மூலனான இறைவனே பசுபதியே, ஜீவன்கள் என்ற பசுக்களை மேய்ப்பவன். அதனால் திருமூலர் மூலனின் உடலில் புகுந்து திருமந்திரத்தை இயற்றினார் என்பது அவர் பசுபதி என்ற  பரவுணர்வு நிலையில் இருந்துகொண்டு இந்த நூலை இயற்றினார் என்ற கருத்தை அளிக்கிறது.  நந்தியின் அருளால் மூலனை நாடினேன் என்பது இறைவனின் அருளால் இருந்தால்தான் ஒருவரால் குண்டலினி யோகத்தை முயற்சிக்க வேண்டும் என்ற உந்துதல் பெற்று அதைத் தொடங்க முடியும் என்பதைக் காட்டுகிறது.

6. The eight who have received Nandi's grace- experienced supreme consciousness

Verse 6
நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரமர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே.

Translation:
If the natha who had obtained the grace of Nandi are sought,
The Nandis are four, sivayogi, the great muni
Patanjali the one who worshipped/was worshipped by the arena, Vyagramar
Are the eight along with me.

Commentary: Tirumular is listing the great souls who received the teachings along with him.  They are eight in number- the four Nandis, Sivayogi, Patanjali, Vyagramar and Tirumular.  By placing Patanjali and Vyagramar next to each other Tirumular reminds us of the story where both Patanjali and Vyagrapadar were blessed with witnessing Siva’s dance at Chidambaram- chith amabaram or the arena of chith.


இப்பாடலில் திருமூலர் நந்தியின் அருளைப் பெற்றவர்களைக் கூறுகிறார்.  இது சிவபெருமானின் அருளைப் பெற்றவர்கள் அல்லது பரவுணர்வு நிலையைப் பெற்றவர்கள் என்று பொருள்படும்.  இவ்வாறு நந்தியின் அருளைப் பெற்றவர்கள் நான்கு நாதர்கள், சிவயோகி, பதஞ்சலி, வியாக்ரமர் என்ற எழுவரும் திருமூலரும் ஆவார்கள். பதஞ்சலியையும் வியாக்கிரமரையும் அடுத்தடுத்துச் சொல்வதன்மூலம் திருமூலர் அவர்கள் இருவரும் சித் அம்பரத்தில்- சிதம்பரத்தில், இறைவனின் நடனத்தை ஒன்றாகக் கண்டனர், அதாவது ஒரே சமயத்தில் பரவுணர்வு நிலையை உணர்ந்தனர், என்று நமக்குக் காட்டுகிறார்.  இதனால் இவர்கள் எண்மரும் உச்ச பரவுணர்வு நிலையைப் பெற்றவர்கள் என்பது புரிகிறது.    

5. The Deer, the bull and the axe that never leave Siva

Verse 5
பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற
தற்பரன் கற்பனை யாகும் சராசரத்
தற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பத மும்அளித் தான்எங்கள் நந்தியே.

Translation:
The bull, the deer and the axe, without separating from them
The tharparam who remains so, in the world which becomes an imagination
Offering destruction, on my head
Granted me good status/locus also, our Nandi.

Commentary: Tirumular uses the word “pettram” to refer to the bull, the lord’s mount.  This term also means “pasu” the jiva.  The deer is referred to by the term “maan” which also means “mahat” the precursor for this manifested world Thus mahat indicates birth and death cycle of the souls.  The “mazhu” indicates that the lord cuts away the births and deaths of Jiva.  Hence, Tirumular says that he is eternally associated with these three entities. Tharparam is a state that Tirumular will describe later as that beyond the manifested world, beyond distinctions, beyond the effects of maya.  Hence Tirumular states that Tharparam remains with the world becoming an imagination.  The lord offered destruction of Tirumular’s birth and death cycle. This happened at the sahasrara in the head, that is, when consciousness reached this locus. This supreme state where the soul  transcends the body and remains as pure consciousness is the state of Nandi, the state of Self.

சிவனின் வாகனமான நந்தியைக் குறிக்க திருமூலர் பெற்றம் என்கிறார்.  இந்தச் சொல் பொதுவாக ஆநிரைகளைக் குறிக்கும், அதாவது, பசுவைக் குறிக்கும்.  நந்தியின் மீது அமர்ந்திருக்கும் சிவபெருமான் பசு நிலையைக் கடந்த பதி நிலையைக் காட்டும்.  அதனால்தான் இறைவனை பசுபதி அதாவது பசுக்களாகிய ஆத்மாக்களின் பதி என்கிறோம்.  

மான் என்று இப்பாடல் குறிப்பிடும் சொல்லுக்கு மகத் என்று பொருள் கொண்டால் அது உலகம் தோன்றுவதற்குக் காரணமான பிரகிருதிக்கு முற்பட்ட நிலையைக் குறிக்கும்.  

சிவனின் கையில் இருக்கும் மழு இவ்வாறு ஏற்படும் பிறவியை இறைவன் அறுத்தெறிவான் என்பதைக் குறிக்கும்.  இவ்வாறு சிவன் பெற்றம் என்னும் ஜீவன் அதன் அகங்காரத்தைக் குறிக்கும் மான் அதை அறுக்கும் மழு என்ற மூன்றோடு இறைவன் என்றும் பிரிவற்று இருப்பான் என்கிறார் திருமூலர். 

தற்பரம் என்ற நிலையைத் திருமூலர் பின் வரும் பகுதிகளில் மாயையைக் கடந்த நிலை, இருமைகளைக் கடந்த நிலை என்று விளக்குவார்.  அதனால் இந்த தற்பரம் உலகம் ஒரு கனவு என்ற நிலையில் நிற்கும் என்கிறார் அவர்.  இறைவன் திருமூலருக்கு பிறப்பு இறப்பிலிருந்து விடுதலை அளித்தான்.  அதை அவன் சஹாஸ்ராரத்தில் அதாவது சிரசில் அளித்தான்.  விழிப்புணர்வு சஹஸ்ராரத்தை அடையும்போது இந்த விடுதலை கிட்டுகிறது.  இந்த உயருணர்வு நிலையே நந்தி நிலை.   

Monday, 26 January 2015

4. Paayiram -4 The seed of the universe

Verse 4
அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத் தென்மெய்யைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.

Translation:
The body of those who remain in the place away (from this world), the seed of the universe
The one who allowed my body into the space it should enter
Saluting and praising, day and night
I stood in a different place with the darkness removed.

Commentary: In the later sections while explaining the nature of souls that have attained liberation from this manifested world Tirumular says that such souls have Siva thanu or body of consciousness.  He begins this verse with that concept when he says the Lord is the body of those who remain in a locus separated from this manifested universe.  
Tirumular calls the Divine as the seed of the universe. Just as how a huge tree emerges from a small seed the manifested universes emerge from the Divine.  In the fourth section in this Tantiram section upadesam Tirumular says that a soul takes a body commensurating with its karma.  He hints at this concept when he says the Lord let his body enter the space fit for it.  Some evolved souls are granted stay in the heaven while some souls that performed evil action are made to stay in hells.  Those that need to perform their actions are allowed to remain in this world.  Thus, the Lord decides the space where the soul should remain with its appropriate body.
Tirumular adds further that he stood in a space that is not dark due to ignorance.  It is a place where the light of awareness shines thus dispelling the darkness.


பின் வரும் பகுதிகளில் ஆத்மாக்களைப் பற்றி விளக்கும்போது திருமூலர் முக்தி பெற்ற ஆத்மாக்களின் உடல் அல்லது தனு சிவ தனு என்கிறார்.  அதனையே இப்பாடலில் முதலில் "அகலிடத்தார் மெய்" அதாவது இவுலகை விட்டு அகன்றவரது உடல் என்று கூறுகிறார்.  
இறைவனே இவ்வுலகின் வித்து.  எவ்வாறு ஒரு ஆலவிதையிலிருந்து ஒரு மிகப்பெரிய ஆலமரம் தோன்றுகிறதோ அதேபோல் சூட்சுமமான இறைவனிடமிருந்து இவ்வுலகம் தோன்றுகிறது.  அவன் இவ்வுலக வாழ்வைவிட்டு அகலுபவர்க்கு அவர் உணர்ந்த உண்மையாய் இருப்பவன்.  
ஓர் ஆத்மாவின் கர்மத்துக்கு ஏற்ற உடலை அளித்து அதற்கு ஏற உலகினுள் அதை இருக்கச் செய்கிறான் இறைவன்.  புண்யாத்மாக்கள் சொர்கத்துக்கும் பாபாத்மாக்கள் நரகங்களுக்கும் கர்மம் புரியவேண்டியவை இவ்வுலகிலும் பிறவி எடுக்கின்றன.  இவ்வாறு இறைவன் தனக்கும் தகுந்த இடத்தில் இருக்க அனுமதியளித்தான் என்கிறார் திருமூலர்.ஆனால் அவர் இருக்கும் இடம் அறியாமை என்ற இருள் சூழ்ந்த இடமல்ல.  அறிவு என்னும் விளக்கினால் ஒளியூட்டப்பட்ட இடம் என்கிறார் அவர். 

Sunday, 25 January 2015

3. Paayiram-3. Nakkan

Verse 3
ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கன்என் றேத்திடும் நம்பனை நாள்தொறும்
பக்கம்நின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின் றுன்னியான் போற்றுகின் றேனே.

Translation:
The one who stood as equivalent, the countless devas
Praise daily as the one who laughed/is naked,
The paraman whom even those who stand near do not know
Entering, standing, contemplating, I am praising.

Commentary: After describing the supreme divinity which is beyond verbal description, now Thirumular is referring to the form of divinity that is available for prayer.  This is the stage where “aham” and “idam” occurs. Hence, there is the distinction as the soul and the divine- the supreme mala free state and the one mired in mala.  Thirumular says that the Devas praise this state and call him “nakkan”.  This term means one who is naked and also one who laughed.  Puranas says that when the triple cities, Tiripuram, had to be burnt Siva alighted the chariot with weapons constituted by various deities.   When the devas thought that he is able to burn the cities only with their help Siva laughed and burned the cities with his laughter.  This episode is referred to here.  The Lord is Dikambara, one who has the space as his costume. This means he pervades all directions.  He destroyed the Tripura with his loud laugh. 

Laughing produces a sound “ha”- this is the last word in the Sanskrit alphabet.  The lord is the first letter “a” and the last letter “ha”. Nandikesvara kashika (www.scribd.com) says that the fifty one letters forms a garland and becomes aham or the self.
 The lord is hid so well within the soul that even those who remain near him do not know of his presence.  The last line means that Thirumular entered into the right state of mind, remained in that state and contemplated on the divine and began this composition of praise. 

வார்த்தைகளால் விளக்க முடியாத இறைவனின் வணங்கக் கூடிய உருவை திருமூலர் இப்பாடலில் ஏத்துகிறார். இந்த நிலை அகம் இதம் அல்லது தான் அது என்ற வேறுபாட்டை உடையது. நிர்மலமான இறைவன் மலத்தில் தோய்ந்த ஜீவன் என்ற பாகுபாட்டைக் கொண்ட நிலை.  அத்தகு இறைவனை தேவர்கள் நக்கன் என்று ஏத்துகின்றனர் என்கிறார் திருமூலர்.  சிவபெருமானை “சிரித்துப் புரமெரித்த பெருமான்” என்று அழைப்பர்.  திரிபுர தகனத்தின்போது தேவர்கள் தமது உதவியால்தான் சிவபெருமான் திரிபுரத்தை எரிக்கிறார் என்று எண்ணியபோது சிவபெருமான் சிரித்தார்.  அதனால் இந்த முப்புரம் எரிந்தது என்று புராணங்கள் கூறுகின்றன. நக்கன் என்றால் திக்குகளையே ஆடையாக உடையவன் என்றும் பொருள்.   

மேற்கூறிய புராண கதையின் ஒரு முக்கியமான கருத்து உள்ளது.  ஒருவர் சிரிக்கும்போது எழும் சத்தம் ஹ என்பது.  அகாரமான சிவன் ஹ என்று சிரிக்கும்போது ஐம்பத்தொரு அட்சரங்களால் ஆன மாத்ருகா மாலையின் முதலெழுத்தும் கடைஎழுத்துமாக அஹம் என்று இருக்கிறான்.  இந்த அஹம் என்ற நிலையே சுத்த நிலை.  இந்த அஹம் என்ற நிலையை அடையும்போது மாயையால் ஏற்பட்ட ஆணவம், கர்மம், மாயை அல்லது சத்துவம், ரஜஸ் தமஸ் என்ற முக்குணங்களால் தோற்றுவிக்கப்பட்ட உலகம் என்ற முப்புரம் எரிக்கப்படுகிறது.  இதைத்தான் திரிபுர தகனம் காட்டுகிறது.

இதனை பெருமை வாய்ந்த இறைவன் உயிருக்கு உயிராக இருந்தாலும் அந்த உயிர் அவனை அறிவதில்லை என்கிறார் திருமூலர்.  அதைப் பற்றிய உணர்வு நிலையில் தான் இருந்து அவனை எண்ணியபடி பாடுகிறேன் என்கிறார் அவர்.  

Paayiram 2

Verse 2
போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.

Translation:
The pure one who remains within the soul, praising him
The lord of the four directions and of the good lady
Within the top/west direction, the king of the south
I am talking about the one who kicked death.

Commentary: 
Thirumular starts to describe the circumstance under which he began composing Thirumandiram.  He refers to the Lord as the one who is the chief of the four directions and to the good lady, Sakthi.  He als calls the lord as the one who kicked death.  This may refer to the Markendeya Puranam where Siva kicked Yama the god of death.  It may also refer to the soul that, through the siddha marga, reached the supreme state, the one that became deathless.  We will see in the tantras to come where Thirumular emphasises that the Jiva and Isvara are one and the same, different states of consciousness.
 The term “mel tisai” means west as well as the top, the dvadasantha and the space beyond.  The south is the muladhara.  Thus, this expression may mean that the Dakshinamurthy is in the sahasrara.  It may also mean that the soul that has won the effects of karma stored in the muladhara has ascended to the sahasrara.   

திருமூலர் தான் இப்பாடலை ஆரம்பித்த சூழ்நிலையை இங்கு விளக்குகிறார்.  உயிருள் உயிராக இருக்கும் இறைவனை அவர் நான்கு திசைக்கும் நாதன் என்றும் நல்ல மாதுவுக்கும் நாதன் என்றும் கூறுகிறார்.  இங்கு மாது என்பது சக்தியைக் குறிக்கும்.  மேலும் இறைவனை கூற்றை உதைத்தவன் என்கிறார்.  இது மார்க்கண்டேய புராணத்தில் யமனை உதைத்த சிவ பெருமானைக் குறிப்பிட்டாலும் அது சித்த மார்க்கத்தின் மூலம் மரணத்தை வென்ற ஒரு ஆத்மாவையும் குறிக்கும்.  இனி வரும் தந்திரங்களில் திருமூலர் ஜீவனும் இறைவனும் வெவ்வேறானவர்கள் அல்லர்.  இவை இரண்டும் வேறுபட்ட உணர்வு நிலைகளே என்று கூறுவதைப் பார்ப்போம்.
மேல் திசை என்பது மேற்கு திசையைக் குறித்தாலும் அது மேல் திசையான துவாதசாந்தத்தையும் குறிக்கும். மேல்திசைக்குள் தென்திசை வேந்தன் என்பது சஹாஸ்ராரத்தில் தென்னாடுடைய சிவன் இருக்கின்றான் என்று கூறுகிறது. 

Monday, 19 January 2015

Payiram

Tirumandiram
Paayiram

Verse 1.
ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தான்இருந் தான்உணர்ந் தெட்டே.

Translation:
He is the only one/self, his grace two,
He stood within three, he realized four,
He won five, he spread six, he went to the celestials seven,
He/Self remained with after realization eight/you reach.

Commentary: This verse is open to a variety of commentary as Tirumular has intentionally made it general.  Other than the gender he does not name the divinity here. The divinity is the singularity. The word “thaane” means only and also “only the self”.  Grace two means blessing and punishment.  It may also mean that when he and his grace are mentioned there are two entities.  The three may mean (1) the three nadi, ida,pingala and sushumna, (2) past, present and future, (3) deva, asura and nara, (4) agni, surya and Chandra mandala, (5) Rudra, Vishnu and Brahma, (6) pooraka, rechaka and kumbaka-parts of pranayama to realize him, (6) iccha, kriya and jnana.  Realized four may mean realized the nature of jiva, siva, para and parapara or realized the four states of consciousness- the jagrit, svapna, sushupti and turiya. He won five are  (1) the five senses, (2) the five mala-aanava, karma, maya, mayeya, tirodhaya.  He spread six means he pervaded the (1) six cakra, (2) the six vidya tattva, (3) the six siva tattva.  He went to the seven- the seventh place, the dvadasa antha which is the point of merging with the supreme space. It also means the seven worlds or seven states of consciousness are also the Lord.  In that supreme state he remained as akaara the tamil letter for number 8.  “ettu” also means try to reach him.  The lord is said to have 8 supreme qualities. 

இப்பாடலுக்குப் பல பொருள்கள் கூறலாம்.  திருமூலர் இந்த கருத்திலேயே இப்பாடலைப் பொதுவாகப் புனைந்துள்ளாரோ என்று தோன்றுகிறது.  இறைவனை ஆண்பால் என்று குறிப்பிடுவதைத் தவிர அவர் வேறு எந்தக் குறியீடையும் இப்பாடலில் கொடுக்கவில்லை.  இறைமை என்பது ஒருமை நிலை.  தனி நிலை.  அதைக் குறிக்கவே அவர் "தானே" என்று கூறுகிறார்.  அது தானே என்பது தான் அல்லது ஆத்மா என்றும் பொருள்படும்.  இரண்டு அவன் அருள் என்பது மறக்கருணை  அறக்கருணை அல்லது அருள், தண்டனை என்ற இரண்டு என்று பொருள் கூறலாம்.  அல்லது இறைவன் அவனது அருள் என்ற இரு வஸ்துக்கள் என்றும் பொருள் கூறலாம்.
நின்றான் மூன்றினுள் என்பது உணர்வு இடை பிங்கலை சுழுமுனை என்ற மூன்று நாடிகளில் பாய்கிறது என்றும் நேற்று இன்று நாளை என்ற முக்காலத்திலும் இருப்பவன் இறைவன் என்றும் இறைவன் தேவர்கள் அசுரர்கள் நரர்கள் என்ற மூவித மக்களுள் நிற்கின்றான் என்றும் இறையுணர்வு சூரிய சந்திர அக்னி மண்டலங்களில் பாய்கின்றது என்றும் பிரம்மா விஷ்ணு ருத்திரன் என்ற முக்கடவுள்களாக இருப்பவனும் அவனே என்றும் பூரகம் ரேசகம் கும்பகம் என்ற மூன்று மூச்சுப் பயிற்சிகளின் மூலம் பெறப்படுபவனாகவும் இருக்கிறான் என்றும் இச்சை கிரியை ஞானம் என்ற மூன்றாக இருப்பவன் என்றும் பொருள் கூறலாம்.
நான்கு உணர்ந்தான் என்பது ஜீவன், சிவன், பரன் பராபரன் என்ற நான்கு நிலைகளை உணர்ந்தவன் என்றும் நனவு, கனவு, ஆழ் உறக்கம் துரியம் என்ற நான்கு அவத்தைகளை உணர்ந்தான் என்றும் பொருள் கூறலாம்.
ஐந்து வென்றான் என்பது ஐந்து மலங்களான ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதானம் என்பவற்றை வென்றான் என்றும் ஐம்புலன்களை வென்றவன் என்றும் பொருள் கூறலாம். ஆறில் விரிந்தான் என்பது ஆறு சக்கரங்கள், ஆறு சிவ தத்துவங்கள், ஆறு வித்யா தத்துவங்களாக விரிந்தான் என்று பொருள் கொள்ளலாம்.
ஏழு என்பது ஏழு உலகங்கள் அல்லது ஏழு உணர்வு நிலைகள் என்று பொருள்படும். ஏழு என்பது ஆறு ஆதாரங்களைக் கடந்த துவாதசாந்தத்தையும் குறிக்கும்.  அவ்வாறு இருக்கும் இறைவன் எட்டு குணங்களைக் கொண்டவன் அல்லது எட்டு என்னும் எண்ணைக் குறிக்கும் அகாரமாக இருக்கிறான்.  அத்தகைய இறைவனை எட்டு என்று நமக்கு திருமூலர் அறிவுறுத்துகிறார்.


Thirumandiram

From Yogis to common men, Thirumandiram has something for everyone of us.  Several commentaries are available in Tamil and English from experts in the field.  This humble attempt is, by no stretch of imagination, an expert comment on Thirumandiram.  It is a heartfelt attempt to "Let the world enjoy the bliss that I enjoyed"  With a sincere prayer to Paraparam and Thirumular let us begin this journey.