Verse 47
அளவில் இளமையும் அந்தமும் ஈறும்
அளவியல் காலமும் நாலும் உணரில்
தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்
அளவில் பெருமை அரிஅயற் காமே.
அளவியல் காலமும் நாலும் உணரில்
தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்
அளவில் பெருமை அரிஅயற் காமே.
Translation:
Unlimited youth, the end and the final end
The time- if all these four are realized
One will be fatigue-free. The greatness of the devotees of Sankaran
Can be said to be equal to Hari and Brahma.
Commentary:
Tirumular lists the four factors that mark time and says that one should
realize their nature to become fatigue-free.
They are youth, its end, the final end and the nature of time. Youth make one feel invincible. One feels as if he is the lord of everything
and that his youth and the associated physical capacities will remain
forever. One forgets that youth will
come to an end in the middle part of life when time starts to control the
person and not the other way around. The
final end is also under time’s control.
Hence, one should understand the nature of time and remember that one’s
life ephemeral. Tirumular says that the
glory of souls, the devotees of Sankara, who have realized this, is equivalent
to that of Hari and Brahma. Sankara
means one who performs “samhara” or destruction, the destruction being the
influence of time and the delusion of limitedness it causes. Thus, these realized souls have gone beyond
time and hence their glory is like that of Hari and Brahma. These are deities who have understood the
concept of time.
Time, space and causation are the three limiting factors. Among these our concept of time such as day
and night, hours, minutes, seconds etc are all based on number of breaths. The Siddhas have an elaborate system that
defines these time elements based on the number of breaths. Even the full moon and new moon days are
measured by the nature of breath.
இப்பாடலில் திருமூலர் காலத்தைக்
குறிக்கும் நான்கு விஷயங்களைக் கூறி அவற்றின் தன்மையை உணர்ந்த ஒருவர் தளர்வில்லா
நிலையை அடைவார் என்கிறார். அவை இளமை, அதன்
முடிவு, ஒருவரது வாழ்க்கையின் முடிவு, காலத்தின் தன்மை என்பவை. இளமைக்காலத்தில்
இருக்கும் ஒருவர் எல்லாம் தனது கட்டுப்பாட்டில் உள்ளது, தனது சக்தி அளப்பரியது
என்று எண்ணுவார். தனது இளமை ஒரு நாள்
முடிவுக்கு வரும் என்பதை உணரமாட்டார்.
இளமை மட்டுமல்ல தனது வாழ்வும் ஒருநாள் முடிவுக்கு வரும் என்பதை எண்ணிப்பார்க்க
மாட்டார். இவ்வாறான காலத்தின் தன்மையை
உணர்ந்த, சங்கரரின் பக்தரது பெருமை வார்த்தைகளில் விளக்கவேண்டுமானால் ஹரி, பிரம்மா
ஆகியோரது பெருமையை ஒத்தது என்கிறார் திருமூலர்.
சங்கரன் என்றால் சம்ஹாரம் செய்பவன் என்று
பொருள். இங்கு அழிக்கப்படுவது காலத்தின்
கட்டுப்பாடு. காலம், இடம், செயல்பாடு ஆகிய
மூன்றும் ஒருவரை அளவுக்குட்பட்டவராக எண்ணவைக்கும் தத்துவங்கள். இவற்றில் பகல், இரவு, மணி, நிமிடங்கள், நொடிகள்
என்று நாம் காலத்தைப் பகுப்பது நமது சுவாசத்தின் எண்ணிக்கையை வைத்துத்தான் என்று
சித்தர்கள் காட்டியுள்ளனர். அமாவாசை
பௌர்ணமிகூட நமது சுவாசத்தை வைத்துத்தான் என்று சித்தர்கள் கூறுகின்றனர். இதனால் சுவாசத்தின் தன்மையை உணர்ந்த ஒருவர் தன்
மீது காலம் கொண்டுள்ள கட்டுப்பாட்டைத் தகர்க்கிறார். இதைத்தான் திருமூலர்
இப்பாடலில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment