Wednesday, 27 May 2015

1.2.48. The Adhi Piran, the one in the hue of a jewel and the one on the lotus..

Verse 48
ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத் தலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றுந் தொடர்ச்சியில் ஒன்றெனார்
பேதித் துலகம் பிணங்குகின் றார்களே. 

Translation:
The Origin, Lord, the One with the hue like that of the gem (Vishnu)
The One who remains on the lotus flower (Brahma)
When examined, are the same in a continuum
Oh!  The world is talking as if they are distinct.

Commentary:
Tirumular has sung this verse either as a lament or a verse of wonderment.  Here he talks about Brahma, Vishnu and Siva.  He calls Vishnu as Manivannan, one in the hue of the jewel or gemstone.  This also refers to the form of the Divine experienced at the ajna as the mani.  Brahma is referred to as the one who resides on the lotus.  This would also refer to the Supreme Divine, the Super consciousness that is experienced at the cakras.  This verse may also be referring to the state of consciousness at ajna, at sahasrara and the all pervasive state.  At ajna the Divine is experience with a form, that of a jewel (uruva).  At sahasrara it is experience in its formless form, as pure consciousness (aruva uruvu).  In the all pervasive state the nature of the Divine as the origin, original cause, is experienced.  This is the formless state of the Lord (aruvam).  In the later sections Tirumular will explain these states as that of Param, Paraparam and Paramam.  Thus, Tirumular may also be expressing his wonder about how people can talk of these states as distinct states.  Another interesting word here is “thodarcchiyil”  which means “in its continuity”.  These states are experienced as a continuum and thus are not distinct entities.  Tirumular may alse be surprised as people miss the point that they are one after another and not entirely different entities.

முதலில் பார்க்கும்போது இப்பாடலில் திருமூலர் மக்கள் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோரை வேறு வேறு என்று கருதுகிறார்களே என்று தனது வருத்தத்தை, ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார் என்பது போலத் தோன்றுகிறது.  திருமூலர் பிரம்மா, விஷ்ணு சிவன் என்று கூறாமல் பிரம்மாவை தாமரை மேல் இருப்பவன் என்றும் விஷ்ணுவை மணிவண்ணன் என்றும் சிவனை ஆதிபிரான் என்றும் அழைக்கிறார்.  மணிவண்ணன் என்பது மணியின் நிறத்தவன் என்று பொருள்படும்.  இது ஆக்னையில் பெறும் இறையனுபவத்தையும் குறிக்கும்.  இங்கு பரம்பொருள் ஒரு மணியைப் போல மனக்கண்ணால் பார்க்கப்படுகிறது.  தாமரைமேல் இருப்பவன் என்பது தாமரையாகிய சக்கரங்களின் மேல் இருப்பவன் என்றும் குறிப்பாகஆயிரம் இதழ் தாமரையான சகஸ்ராரத்தில் இருப்பவன் என்றும் பொருள்படுகிறது.  மணிவண்ணன் என்பது இறைவனை ஒரு உருவில் காண்பதைக் குறிக்கிறது.  தாமரை மலரோன் என்பது இறைவனை அருவுருவாகக் காண்பதைக் குறிக்கிறது.  ஆதிபிரான் என்பது இறைவன் அருவமாக எங்கும் பரந்தவனாக இருக்கும் நிலையைக் குறிக்கிறது.  இந்த நிலைகள் ஒன்றை அடுத்து ஒன்று உணரப்படுகிறது.  இதைத்தான் திருமூலர் “தொடர்ச்சியில் ஒருவர்” என்று குறிப்பிடுகிறார்.


இது இவ்வாறிருக்க மக்கள் எவ்வாறு இவர்கள் வெவ்வேறு என்று கூறுகிறார்கள், அவர்கள் எவ்வித தொடர்பும் இல்லாத தனித்தனி நிலைகள்  என்று கூறுகிறார்கள் அவர் ஆச்சரியப்படுவதாக, வருந்துவதாகவும் இப்பாடலுக்குப் பொருள் கூறலாம்.

Monday, 25 May 2015

1.2.47 The devotees of Sankara who know the nature of time...

Verse 47
அளவில் இளமையும் அந்தமும் ஈறும்
அளவியல் காலமும் நாலும் உணரில்
தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்
அளவில் பெருமை அரிஅயற் காமே.

Translation:
Unlimited youth, the end and the final end
The time- if all these four are realized
One will be fatigue-free. The greatness of the devotees of Sankaran
Can be said to be equal to Hari and Brahma.

Commentary:
Tirumular lists the four factors that mark time and says that one should realize their nature to become fatigue-free.  They are youth, its end, the final end and the nature of time.  Youth make one feel invincible.  One feels as if he is the lord of everything and that his youth and the associated physical capacities will remain forever.  One forgets that youth will come to an end in the middle part of life when time starts to control the person and not the other way around.  The final end is also under time’s control.  Hence, one should understand the nature of time and remember that one’s life ephemeral.  Tirumular says that the glory of souls, the devotees of Sankara, who have realized this, is equivalent to that of Hari and Brahma.  Sankara means one who performs “samhara” or destruction, the destruction being the influence of time and the delusion of limitedness it causes.  Thus, these realized souls have gone beyond time and hence their glory is like that of Hari and Brahma.  These are deities who have understood the concept of time. 
Time, space and causation are the three limiting factors.  Among these our concept of time such as day and night, hours, minutes, seconds etc are all based on number of breaths.  The Siddhas have an elaborate system that defines these time elements based on the number of breaths.  Even the full moon and new moon days are measured by the nature of breath. 

இப்பாடலில் திருமூலர் காலத்தைக் குறிக்கும் நான்கு விஷயங்களைக் கூறி அவற்றின் தன்மையை உணர்ந்த ஒருவர் தளர்வில்லா நிலையை அடைவார் என்கிறார்.  அவை இளமை, அதன் முடிவு, ஒருவரது வாழ்க்கையின் முடிவு, காலத்தின் தன்மை என்பவை. இளமைக்காலத்தில் இருக்கும் ஒருவர் எல்லாம் தனது கட்டுப்பாட்டில் உள்ளது, தனது சக்தி அளப்பரியது என்று எண்ணுவார்.  தனது இளமை ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பதை உணரமாட்டார்.  இளமை மட்டுமல்ல தனது வாழ்வும் ஒருநாள் முடிவுக்கு வரும் என்பதை எண்ணிப்பார்க்க மாட்டார்.  இவ்வாறான காலத்தின் தன்மையை உணர்ந்த, சங்கரரின் பக்தரது பெருமை வார்த்தைகளில் விளக்கவேண்டுமானால் ஹரி, பிரம்மா ஆகியோரது பெருமையை ஒத்தது என்கிறார் திருமூலர். 


சங்கரன் என்றால் சம்ஹாரம் செய்பவன் என்று பொருள்.  இங்கு அழிக்கப்படுவது காலத்தின் கட்டுப்பாடு.  காலம், இடம், செயல்பாடு ஆகிய மூன்றும் ஒருவரை அளவுக்குட்பட்டவராக எண்ணவைக்கும் தத்துவங்கள்.  இவற்றில் பகல், இரவு, மணி, நிமிடங்கள், நொடிகள் என்று நாம் காலத்தைப் பகுப்பது நமது சுவாசத்தின் எண்ணிக்கையை வைத்துத்தான் என்று சித்தர்கள் காட்டியுள்ளனர்.  அமாவாசை பௌர்ணமிகூட நமது சுவாசத்தை வைத்துத்தான் என்று சித்தர்கள் கூறுகின்றனர்.  இதனால் சுவாசத்தின் தன்மையை உணர்ந்த ஒருவர் தன் மீது காலம் கொண்டுள்ள கட்டுப்பாட்டைத் தகர்க்கிறார். இதைத்தான் திருமூலர் இப்பாடலில் கூறியுள்ளார்.

Sunday, 24 May 2015

1.2.46 How a sincere seeker will seek God

Verse 46
Translation:
He will hold it in the heart as the Lord
He will sing, offering several flowers and standing reverentially
He will dance, praising, “the lord of the liberated souls!”
He will seek, that which I know today/that which I know by remaining so.

Commentary:
Trimular describes how a person would seek divine experience. He will praise the Lord as the lord of everyone and everything. He will offer flowers and dance in bliss singing the Lord’s praise, hold the experience and the thought about it at all time. Tirumular adds that the entity that such a person is seeking is that which he has attained today.  The term ‘naaninru arinthathu’ can be interpreted as ‘naan inru arinthathu’ and also as ‘naan ninru arinthu’.  Thus, it also means ‘that which I knew by remaining like the person described above’.


இறையனுபவத்தைப் பெற்ற விழையும் ஒருவர் எவ்வாறு நடந்துகொள்வார் என்று திருமூலர் இப்பாடலில் கூறுகிறார்.  அந்த மனிதர் இறைவனை அனைவருக்கும் பிரானே என்று போற்றி மலர் தூவி வழிபடுவார், இறைவனின் புகழைப் பாடி ஆடுவார், மனத்துள் எப்போதும் வைத்து நாடுவார் என்று கூறும் திருமூலர் அந்த மனிதர் பெற விரும்புவது தான் “நின்றறிவது” என்கிறார்.     இந்தச் சொல்லை “நான் இன்று அறிவது” என்று பிரித்தால் திருமூலர் தான் இப்போது அறியும் இறைவனே என்று கூறுவதாகவும் “நான் நின்று அறிவது” என்று பிரித்தால் தான் அவ்வாறு நின்று அறியும் இறைவன் என்று கூறுவதாகவும் பொருள் கொள்ளலாம்.  

Saturday, 23 May 2015

1.2.45 How to cross Pasu and pasa


Verse 45
பரைபசு பாசத்து நாதனை உள்ளி
உரைபசு பாசத் தொருங்கவல் லார்க்குத்
திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்
கரைபசு பாசங் கடந்தெய்த லாமே.
Translation:
Contemplating on the Lord of Parai (Sakthi), pasu (soul/Jiva) and pasa (attachment)
Those who are capable of abiding Pasu and Pasa
Will swim across the great ocean of pasu and pasa
And cross the banks of pasu and pasa.
Commentary:
The concept of pati, pasu and pasa is the core of Saiva philosophy. Pati refers to the Lord, pasu to Jiva and pasa their relationship or the attachment. Pasa also refers to sll principles other than the Pati and pasu that maintain the state of distinction. Parai refers to Sakthi, the consort of Paran who makes all these principles function, keep them in their active state.
Tirumular says that by contemplating and realizing the nature of Parai, pasu and pasa one can cross the ocean of distinctions and attain the state of Paran. From this we realize that all the practices that the Siddhas recommend are towards this goal only.
பதி, பசு பாசம் என்ற மூன்று தத்துவங்கள் சைவ சித்தாந்தத்தின் முக்கியமான கோட்பாடுகள். பதி என்பது பரமாத்மாவையும் பசு என்பது ஜீவாத்மாவையும் பாசம் என்பது இவற்றுக்கிடையே உள்ள தொடர்பையும் குறிக்கும். பரை என்பது பதியின் சக்தி. இவையனைத்தையும் செயல்படச் செய்வது. இந்தத் தத்துவங்களைப் பற்றி சிந்தித்து உணர்ந்துகொள்பவர்கள் பாகுபாடுகள் என்ற கடலைக் கடக்கலாம், ஒருமை நிலையை, பதி நிலையை அடையலாம் என்கிறார் திருமூலர். சித்தர்கள் பரிந்துரைக்கும் எல்லாப் பயிற்சிகளும் இந்த குறிக்கோளைக் குறித்துதான் என்பது இதனால் புரிகிறது.

Friday, 22 May 2015

44. I practice what I preach

Verse 44 
அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியார் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கென்று மேவிநின் றேனே.

Translation:
The Lord of the liberated souls, the one whom devotees eulogize
Saluting him by bowing down, seeking the Supreme One
The Paraparan who grants everything, my father
I remain associated with him considering him as the eternal lamp that is never put out.

Commentary:
Tirumular explained in the previous verse that there is no point in performing austerities or rituals if one does not keep the Lord in his mind, contemplate on him.  In this verse he tells us that he is practicing what he is preaching.  He remains associated with the Lord whom he calls his father, the one who is eulogized by the liberated souls, the one who grants all wishes and the eternal lamp that is never put out.  The lamp mentioned here is the lamp of consciousness.


ஒருவர் இல்லத்தாராக இருக்கிறாரா துறவியா என்பது முக்கியமில்லை, அவர் மனத்தில் இறைவனை எப்போதும் வைத்திருக்கிறாரா என்பதுதான் முக்கியம் என்று திருமூலர் கூறினார்.  இப்பாடலில் தான் உபதேசித்ததை தானே கடைப்பிடிக்கிறேன் என்று கூறுகிறார்.  தான் இறைவனை மேவி நின்றேன். அந்த இறைவன் அமரருக்கு அதிபதி, அடியார்களால் வழிபடப்படுபவன், முதல்வன், எல்லாவற்றையும் அருளுபவன், தனது தந்தை, அணையா விளக்கு என்று அவர் கூறுகிறார்.

Wednesday, 20 May 2015

1.2.43 Like a kite in the palm tree


Verse 43
மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்தது போல
நினையாத வர்க்கில்லை நீள்இன்பந் தானே. 

Translation:
House holders are like those who perform great austerities
Those who hold within their thoughts will remain in love
Like the kite within the palm tree
The long bliss is not possible for those who do not contemplate
Commentary:
Tirumular dispels the misconception that one has to be a sanyasi to attain liberation. In the first line he says that a householder is equally qualified to receive the Lord’s grace as an austere person. This is similar to Sivavaakiyar’s idea that when one leads a proper householders’ life where he feeds others Siva will come and partake food at his place, visit him. The life stories of Nayanmars’ vouch for this. Whether it is a householder of a tapasvi, if he holds the Supreme in his mind he will remain immersed in love as God is love. However, this boon is not possible for those who perform mere rituals whether it is householders’ duties or an sanyasin’s austerities. Tirumular says that this is like a kite that remains on top of a palm tree. The bird is not benefitted by the fruits of the tree even when it is remaining with the tree. Thus, the mind and the attitude are two important components in Divine experience.
ஒருவர் மனையைத் துறந்து சந்நியாசியானால்தான் முக்தியடைய முடியும் என்ற கருத்தை மறுக்கிறார் திருமூலர். இல்லறத்தில் இருந்து தமது கடமைகளைச் செய்பவர்கள் தவசீலர்களை ஒத்தவர்கள் என்கிறார் அவர். சிவவாக்கியரும் இதே கருத்தைத் தனது பாடல்களில் கூறியுள்ளார். யார் இல்லறத்தில் இருந்துகொண்டு பிறருக்கு உணவளித்து வருகிறாரோ அவரது வீட்டுற்கு சிவனே வருவார் என்று சிவவாக்கியர் கூறுகிறார். நாயன்மார்களின் சரித்திரங்கள் இது உண்மை என்பதை நமக்குக் காட்டுகின்றன.
சந்தியாசியாக இருந்தாலும் சரி இல்லறத்தானாக இருந்தாலும் சரி, யார் இறைவனை மனதுள் வைத்திருக்கிறாரோ அவரே இறையுணர்வில், அன்பில், திளைத்திருப்பார் என்கிறார் திருமூலர். அதனால் ஒருவரது எண்ணம் ஏதுவாக இருக்கிறது என்பதுதான் முக்கியம். துறவறத்தில் இருந்துகொண்டு இறைவனை சிந்தையுனுள் வைக்காவிட்டால் எவ்வித பயனுமில்லை. இது பனைமரத்தில் இருக்கும் பருந்தை ஒத்தது. பனைமரத்தின் பொருட்களால் அந்தப் பருந்துக்கு ஒரு பயனும் ஏற்படுவது இல்லை.

Sunday, 17 May 2015

1.2.42 Worship with trikarana..

Verse 42
அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று
சிந்தைசெய் வண்ணந் திருந்தடி யார்தொழ
முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று
வந்திவ்வண் ணம்எம் மனம்புகுந் தானே. 

Translation:
“The twilight hued one! Hara!  Siva!”
Thinking so, the way the perfect devotees worship
“The one of all types, the Origin, Para” (I worshipped so)
He entered my heart in this fashion.

Commentary:
Tirumular explains how the Lord entered his heart.  He says that similar to the fashion in which true devotees eulogize him, as the one with the hue of twilight, as Hara the one who cuts away samsara, as Siva the auspicious one, he praised the Lord as the origin the one who includes everything and Para.  Hearing these words of worship the Lord entered his heart.  In the first two lines Tirumular explains that true devotees worship the Lord through mind (manas or chinthai), vak (words or praise) and kaayam (body, the action of worshipping).  By saying that he followed their method Tirumular indicates that he did not device a new method of worship but followed the prescribed worship with the three “karana” or instruments. This verse also shows that it is the sincere worship that brings the Lord to the soul, not any elaborate and showy worship ritual.

இப்பாடலில் திருமூலர் எவ்வாறு இறைவன் தனது இதயத்துள் புகுந்தான் என்று கூறுகிறார்.  திருந்திய பக்தர்கள் இறைவனை, “அந்தி நிறத்தில் இருப்பவனே, சம்சாரத்தை அறுக்கும் அரனே, மங்களகரமான சிவனே” என்று சிந்தையில் எண்ணி வாக்கில் கூறி உடலால் தொழுவர் என்றும் தானும் அவ்வாறே இறைவனை, “எல்லாமாக இருப்பவனே, முதல்வனே பரனே” என்று முக்கரணங்களாலும் வழிபட்டேன் என்றும் அதனால் இறைவன் தனது மனத்தினுள் புகுந்தான் என்றும் திருமூலர் கூறுகிறார். 

இப்பாடலின் மூலம் திருமூலர் தான் புதிய வழிபாட்டு முறை எதையும் தோற்றுவிக்கவில்லை, காலம் காலமாக திருத் தொண்டர்கள் கடைப்பிடித்த முறையையே தொடர்ந்தேன் என்று கூறுகிறார்.  மேலும், மிகப் படாடோபமான சடங்குகள் இறைவனை மனதுள் கொண்டுவரா, உண்மையான வேண்டுதலே இறைஞ்சுதலே இறைவனை ஆத்மாவிடம் கொண்டுவரும் என்றும் இப்பாடல் நமக்குக் காட்டுகிறது. 

1.2.41 He is the Sun who reveals the path

Verse 41
This world surrounded by ocean will not be due to fate
No pleasure or its termination due to fate
Praise daily, the path. The Lord, the effulgence
Is the sun that reveals the path to the locus.

Commentary:
Tirumular says that if one praises the Lord daily, the Supreme the luminosity will reveal the path to our final destination.  One will not be born in this world due to karma.  Nor will one face pleasure or pain due to karma.  He calls the Supreme as the Sun.  In the later section Tirumular talks about anda aadhitthan, pinda aadhitthan etc.  This verse seems to be leading to it.

இறைவனை நாளும் துதித்தால் சூரியனைப் போன்ற ஒளிவடிவான அவன் நமது பதி அல்லது சேர வேண்டிய இடத்துக்கு வழி காட்டுவான் என்கிறார் திருமூலர்.  அவ்வாறு இறைவனைத் துதிப்பவர்க்கு கடல் சூழ்ந்த இவ்வுலகில் கர்மத்தினால் ஏற்படும் பிறவியில்லை.  இன்பதுன்பமில்லை என்றும் கூறுகிறார் அவர்.

பின்வரும் தந்திரத்தில் திருமூலர் அண்ட ஆதித்தன், பிண்ட ஆதித்தன் என்ற விஷயங்களை விளக்கியுள்ளார்.  இப்பாடல் அஅவற்றிற்கு முன்னுரைபோல் உள்ளது.

Friday, 15 May 2015

1.2.40 I made the Pure One glow in my love

Verse 40
போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி
போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே. 

Translation:
The supreme souls will say, “Praise to the Pure One’s feet”
The asura will say, “Praise to the Pure One’s feet”
The humans will say, “Praise to the Pure One’s feet”
Praising it I made it glow within my love.

Commentary:
The concept of love has an important place in Tirumandiram.  This is not love towards a particular entity.  It is not an emotional response born as a result of a particular experience.  It is universal love.  Tirumular defines this love as Sivam. According to him the state at the pinnacle of Supreme consciousness is love. Hence, he says that he made the Supreme One glow within love.  He is describing the state of Sivam here.


அன்பு என்னும் தத்துவம் திருமந்திரத்தில் முக்கியமான இடத்தை வகிக்கிறது.  இது ஒரு பொருளைக் குறித்தோ ஒரு செயலுக்கு எதிர்விளைவாகவோ எனப்படும் உணர்ச்சியல்ல.  இது எல்லையற்ற தூய உணர்வு.  இதைத்தான் திருமூலர் அன்பே சிவம் என்கிறார். இது பரவுணர்வு நிலையின் உச்சத்தில் ஏற்படுவது.  அதனால் திருமூலர் புனிதனான இறைவனைப் போற்றித் தனது அன்பில் பொலிய வைத்தேன் என்கிறார். 

Thursday, 14 May 2015

1.2.39 Devotion

Verse 39
அரனடி சொல்லி அரற்றி அழுது
பரனடி நாடியே பாவிப்ப நாளும்
உரனடி செய்தங் கொதுங்கவல் லார்க்கு
நிரனடி செய்து நிறைந்துநின் றானே.

Translation:
Crying in devotion praising the feet of Hara
Seek the feet of Paran daily
For those who have firm faith in the sacred feet and seek refuge there
He remained there as fully complete.

Commentary:
There is a conjecture that the Siddhas are against bhakti or devotion.  This verse dispels that misconception.  The first line of the verse says how one should pray to the Lord.  One should cry copiously with devotion, seek only the sacred feet and no other benefit, one should seek them daily at all times, they should hold the feet as their sole refuge with fortitude.  For such souls the Supreme will fill them and remain.


சித்த மார்க்கத்தில் பக்திக்கு இடமில்லை என்ற தவறான கருத்தை இப்பாடல் பொய் என்று காட்டுகிறது.  இப்பாடலின் முதல் வரியில் திருமூலர் ஒருவர் அரனது அடியைப் போற்றி பிரிவாற்றாமையால் அழுது அரற்றி நாளும் அதையே நாடவேண்டும் என்றும் மன உரத்துடன் அந்தத் திருவடிகளே தனக்குப் புகழ் என்று இருக்கவேண்டும், அந்த அடிகளைத் தவிர பிற பலன்களை வேண்டக்கூடாது என்றும் அவ்வாறு இருப்பவரை இறைவன் நிறைத்து அங்கு நிற்பான் என்கிறார்.

Wednesday, 13 May 2015

1.2.38 He decides the benefit that should be granted

Verse 38
போயரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயக னான்முடி செய்தது வேநல்கும்
மாயகஞ் சூழ்ந்து வரவல்ல ராகிலும்
வேயன தோளிக்கு வேந்தொன்றுந் தானே. 

Translation:
The benefit that those who praise Hara receive,
The Lord will grant what he has decided,
Even if he can grant the whole world created by maya
For the one with bamboo-like shoulders, a king is all the same

Commentary:
In this verse Tirumular dispels a misunderstanding.  People may think that just by being humble and sincere one can pray for anything and the Lord would grant it.  Tirumular says it is not so.  The Lord grants what he decides to give.  Sometimes what he grants may not be what the devotee requested for but the Lord knows what is good for the devotee.  Even though the Lord can grant the whole world to the devotee he does not consider anything worldly as a supreme benefit.  For him a king and a pauper are the same. 


இப்பாடலில் திருமூலர் ஒரு முக்கியமான கருத்தை விளக்குகிறார்.  அடக்கத்துடனும் பக்தியுடனும் இருந்து இறைவனை வேண்டினால் எதை வேண்டுமானாலும் பெறலாம் என்று ஒருவர் எண்ணலாம்.  இந்த எண்ணம் சரியன்று.  இறைவன் பக்தனுக்கு எது நல்லது என்று நினைக்கிறாரோ அதைத்தான் அவனுக்குக் கொடுக்கிறார்.  மாயையால் உருவாக்கப்பட்ட இவ்வுலகில் அவர் கருத்தில் பெரிய பதவி என்று ஒன்றோ பெரும் பயன் என்ற ஒன்றோ இல்லை.  அவருக்கு ஏழையும் ஒன்றுதான் அரசனும் ஒன்றுதான் என்கிறார் திருமூலர்

Monday, 11 May 2015

1.2.37 For those who are capable of praising him-2

Verse 37
சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்
புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக்
கனஞ்செய்த வார்குழல் பாகனும் அங்கே
இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே.

Translation:
The angry Lord, the Deva who consumed poison,
Those who are capable of praising him in their hearts making him the upland
The herder with fragrant hair
Will remain in harmony like a deer.

Commentary:
Sinam refers to the poison that emerged from the milky ocean with great vigor.  Siva consumed the poison to save the world.  Punam means upland that is used for cultivation.  A punam is created by clearing the forest in the hills and making it fit for cultivation. Here it refers to the devotee clearing his heart from all evil qualities and making it fit for cultivating devotion. The term "vaar kuzhal paagan" means Ardha nareesvara who has Sakthi with fragrant hair as a part.  This term may also refer to the Lord who has fragrant hair and who is our paagan or herder, Pati.  The Lord will remain, like a deer, in the hearts of those who are capable of praising him. 


சினம் என்ற சொல் சீறி எழுந்த ஆலகால விஷத்தைக் குறிக்கிறது.  இந்த விஷத்தைச் சிவபெருமான் உலகைக் காக்க தான் அருந்தினார்.  புனம் என்பது மலையில் உள்ள காட்டைச் செப்பனிட்டு விளைநிலமாக மாற்றிய இடத்தைக் குறிக்கிறது.  இங்கே அது தீயவற்றை அழித்து பக்தியைப் பயிர் செய்யக் கூடிய மனத்தைக் குறிக்கிறது.  வார் குழல் பாகன் என்பது மாதொரு பாகனான இறைவனைக் குறிக்கிறது.  அது மணம் பொருந்திய குழலையுடைய, நம்மை மேய்ப்பவனான, பதியான இறைவனைக் குறிக்கிறது என்றும் கூறலாம்.  அத்தகைய இறைவன், அவனைப் போற்ற வல்லார் மனதில் மான் போல் இணங்கி இருப்பான் என்கிறார் திருமூலர்.

1.2.36 For those are capable of praising him-1

Verse 36
குறைந்தடைந் தீசன் குரைகழல் நாடும்
நிறைந்தடை செம்பொனின் நேரொளி ஒக்கும்
மறைஞ்சடஞ் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்
புறஞ்சடஞ் செய்யான் புகுந்துநின் றானே. 

Translation:
Seek the sacred feet of Isa by reducing and reaching him
It will like the luminosity of pure gold, it is fully complete
For those who are not adamant and hide
The exterior will not delude. He entered and remained there.

Commentary:
The term reducing in the first line means reducing the ego, reducing the karma and reducing the sense of I-ness.  This reduction with lead the Jiva to Isa’s sacred feet.  Tirumular is playing with the word “kurai”.  In the beginning of the line kurai means decreasing, in the end it means beautiful.  The sacred feet of Isa is luminous like gold.  For such souls that have reached the sacred feet of Isa the external world will not delude. 
Sadam is said to be a vayu that conceals the truth.  When a baby is born this vayu conceals its true nature, details about its previous birth and its connection with the Divine.  It is this vayu that pushes the child out of the womb into this world. The one who has won the influence of this sadam is “sadagopan”.  He is pushed into this world, into samsara again.

குறைந்து என்று முதல் வரியில் உள்ள சொல் அகங்காரம் குறைந்து, தான் என்ற அகந்தை குறைந்து அதனால் கர்மாவின் தாக்குதல் குறைந்து இறைவனின் திருவடியை அடைவதைக் குறிக்கும்.  குறை என்ற சொல்லை திருமூலர் இருவிதங்களில் இந்த வரியில் பயன்படுத்தியுள்ளார். முதலில் அது குறைத்தல் என்ற பொருளில் வருகிறது.  அதே வரியின் கடைசியில் அது அழகு என்ற பொருளில் வருகிறது.  ஈசனின் திருவடி செம்பொன் நிறத்தைக் கொண்ட ஒளியை ஒக்கும் என்கிறார் திருமூலர்.  அவ்வாறு இறைவனை அடைந்தவர்களை புறம் எனப்படும் வெளியுலகம் மயக்கமுறச் செய்யாது என்றும் அவர் கூறுகிறார்.


சடம் என்பது ஒரு வாயு.  குழந்தை பிறக்கும்போது அந்த வாயு அவ்வுயிரின் உண்மை நிலையை, இறைவனுடன் அதனது சம்மந்தத்தை அதன் முற்பிறவிகளைப் பற்றிய நினைவுகளை மறக்கச் செய்கிறது.  இந்த வாயு குழந்தையைக் கருவரையிலிருந்து குழந்தையை வெளியுலத்தில் தள்ளுகிறது. சடத்தின் தாக்கத்தை வென்றவரே “சடகோபன்”. அவரை சடம் புறம் செய்வதில்லை, மீண்டும் பிறக்கச் செய்வதில்லை. 

Saturday, 9 May 2015

1.2.35 How to obtain theerthan's grace

Verse 35
வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெரு மான்என் றிறைஞ்சியும்
ஆத்தஞ்செய் தீசன் அருள்பெற லாமே.

Translation:
The flame that occurs within the hearts of those who are capable of praising
The theertha, the Deva who engages there
Praising and beseeching as “My Lord”
Pleasing him so, the grace of Isa can be obtained.

Commentary:
Even though the Lord remains in everyone’s heart only those capable of realizing his presence and praising him are able to experience it.  Tirumular calls the Lord as theerthan.  The Lord satisfies the pangs of his devotees like the water.  He is sweet as the water.  He is pure and he makes everyone associated with him pure. Tirumular gives a practical method to obtain the grace of such a Lord.  He says one should praise him and beseech him.   The sincere call should be conveyed to the Lord 
Tirumular does not stop with mere philosophy.  He prescribes a method for the results.


இறைவன் எல்லோர் மனதிலும் குடிகொண்டிருந்தாலும் அவனது பெருமையை உணர்ந்து வாழ்த்த வல்லவர்களே அவனது இருப்பை உணருகின்றனர்.  அத்தகையோரின் இதயத்தில் இறைவன் ஜோதி உருவில் இருக்கிறான்.  அந்த இறைவன் தீர்த்தன் என்கிறார் திருமூலர்.  நீரைப் போல இறைவன் பக்தர்களின் தாகத்தைத் தீர்ப்பவன்,  இனிமையானவன்.  தன்னைப் போல தனது அடியவரையும் தூயவராக்குபவன்.  அந்தத் தேவனைப் போற்றி இறைஞ்சுபவர்கள் அவனது அருளைப் பெறலாம் என்கிறார் திருமூலர்.

Friday, 8 May 2015

1.2.34 I cannot stop blabbering about..

.2.34 I cannot stop blabbering about...
Verse 34
பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்
பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்
பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்
பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் நானே.
Translation:
I cannot stop blabbering about the great rare one
I cannot stop blabbering about the one with the form that has no birth
I cannot stop blabbering about the one who is named Nandhi
I cannot stop blabbering about the one who is glorious.
Commentary:
This is an interesting verse which at the first glace appears to be talking about the Supreme, Nandhi who is the greatest, rarest birth-less, glorious one. Upon careful examination the last line seems to have two interpretations. It seems to mean “I cannot stop blabbering about that glorious one” and also “the glorious one is naan or self”. Nandhi, as we have seen before, represents an exalted state of the soul. Thus, in the state of Nandhi the Self has all the qualities that Thirumular seems to be ascribing to another entity that is distinct from him.
முதல் பார்வையில் இப்பாடல் நந்தி எனப்படும் இறைவனை திருமூலர் புகழ்வதாகத் தெரிகிறது. அந்த இறைவன் பெரியவன், அரியவன், பிறப்பிலி, பெருமையை உடையவன் தவசீலன் என்று அவர் கூறுவதாகப் படுகிறது. ஆனால் கூர்ந்து பார்க்கும்போது இந்த குணங்கள் அனைத்தையும் பெற்ற நந்தி நானே என்று அவர் கூறுவதைப் போலவும் தோன்றுகிறது. நந்தி என்பது ஆன்மாவின் மிக உயர்ந்த நிலை, பரநிலை என்று முன்னமே பார்த்தோம். இந்த நிலையில் இருக்கும் ஆத்மா பெரியது, அரியது, பிறப்பிலி, பெருமையுடையது, தவசிரேஷ்டன். அந்த நந்தி வேறு யாருமில்லை “அஹம்” எனப்படும் ஜீவாத்மா என்று திருமூலர் கூறுவதாகவும் இப்பாடலுக்குப் பொருளுரைக்கலாம்.

1.2.33 I praise the Nandi who animates the body


Verse 33
நானும்நின் றேத்துவன் நாடொறும் நந்தியைத்
தானும்நின் றான்தழல் தானொக்கு மேனியன்
வானில் நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்
தூனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே.
Translation:
Daily, I will remain praising Nandhi,
He remained, the one with a body like the fire
Like the moon that remains in the sky, coming within the body
Remain in the body and animate it.
Commentary:
Tirumular says that he is praising Nandhi whose body is like the fire. Nandhi represents pure consciousness. The fire also represents the fire of kundalini. The third line is interesting. “vaanil ninraar madhi pol” means like the moon that remains in the sky. It also means wisdom of those who remain in the supreme space, realized souls. The Lord remains within the body and animates it.
திருமூலர் தான் தீயைப் போன்ற நிறமுள்ள நந்தியைப் போற்றுகிறேன் என்கிறார். தீ என்பது தூய அறிவுணர்வு. குண்டலினி அக்னி. மூன்றாவது வரியில் அவர் வானில் நின்றார் மதிபோல் என்கிறார். இது வானில் உள்ள நிலவு என்றும் வான்வெளியில் உள்ள அமரர்களின் ஞானம் என்றும் பொருள்படும். நந்தி உடலினுள் வந்து அதை உயிர்ப்பிப்பதைக் கடைசி வரி கூறுகிறது.