பாடல் எண் : 3
பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணு காபசு பாசம்
பதியணு கிற்பசு பாசம்நில் லாவே.
பதியினைப் போற்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணு காபசு பாசம்
பதியணு கிற்பசு பாசம்நில் லாவே.
Translation:
Among the three mentioned- pati, pasu and pasam
Pasu and pasa are beginning-less, like Pati,
Pasu and pasa do not approach pati
When pati approaches pasu and pasa will not remain.
Commentary:
Pati, pasu and pasa are the three entities that form the
core of Saiva siddhantha. Pati is the
Lord, pasu is the limited soul and pasa is the attachment. Tirumular explains these three succinctly in
this verse. He says that like pati, the
pasu and pasa are also eternal. This is
against the maya vada that nothing exists other than the lord or pati. However, the pasu and pasa exist only as long
as they stay away from pati. Once the
pati approaches these two cease to exist.
Pati is a state.
It is not a separate entity. It
is the absolutely pure state, free of any limiting factors or mala. As long as the soul remains away from this
state it continues to remain as the limited soul or pasu buffeted by pasa or
worldly attachments that maintain its limited state. When the pati state approaches, that is, when
the pasu loses its limiting factors, then the pasu state or the pasa do not
exist. The soul remains exclusively in
the pati state.
பதி, பசு, பாசம் என்று மூன்று வஸ்துக்களே சைவ
சித்தாந்தத்தின் முக்கிய வஸ்துக்கள்.
இவற்றுள் பதி என்பது இறைவனையும் பசு என்பது ஜீவனையும் பாசம் என்பது
பற்றுக்களையும் குறிக்கும். இந்த மூன்றின்
தன்மையையும் இப்பாடலில் திருமூலர் விளக்குகிறார்.
மாயா வாதத்தைப்போல பசு பாசம் என்ற வஸ்துக்கள் இல்லை, பத்தி ஒன்றே உள்ளது
என்று திருமூலர் கூறவில்லை. பதியைப் போல
பசுவும் பாசமும் காலகாலமாக இருக்கின்றன.
பதியை அணுகும்வரை இருக்கும் அவை பதி அணுகும்போது நில்லாமல் ஓடிவிடுகின்றன
என்கிறார்.
பதி என்பது ஒரு நிலை.
அது மலமற்ற தூய நிலை. பசு என்பதும்
ஒரு நிலை அது அளவுக்குட்பட்ட நிலை. இந்த
அளவுக்குட்பட்டமையை ஏற்படுத்துவது பாசமே.
இந்த பாசத்தை பசு வைத்திருக்கும்வரை பதி நிலை கிட்டாது. ஆனால் பத்தி நிலையை அடைந்தபோது பசு நிலையும்
பாசமும் இருக்காது என்கிறார் திருமூலர்.
No comments:
Post a Comment