பாடல் எண் : 4
வேயின் எழுங்கனல்
போலேஇம் மெய்யெனுங்
கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயம தாய்எழுஞ் சூரிய னாமே.
கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயம தாய்எழுஞ் சூரிய னாமே.
Translation:
Like the hot
fire that rises up,
The king
Nandhi, who lives in this temple, the body
Transforms the
triple impurities with mercy, more than a mother
Is the sun
that rises as the waters.
Commentary:
Tirumular is equating the Lord, Nandhi, the supreme
consciousness, to Sun. In tantiram 7
section 22, anda aathitthan, he describes this sun. Besides the physical entity that we see in
the sky it is also consciousness. In
tantiram 7 he mentions that the sun rises between water and fire thus
indicating that the locus of the power that rises during kundalini yoga. It is region between the svadishtana cakra
and manipuraka cakra in the body. By referring to fire in the first line and
water in the last line he is indicating this same idea.
Tirumular calls the body as the temple where Nandi, the
one who is more merciful than one’s own birth mother, lives.
In the first verse of this section Tirumular said that
Nandi cut the mala, the verdigris away. Here
he says that the mala were transformed.
This is an interesting concept.
As the soul progresses in its spiritual pursuit, the impurities, mala,
that were impediments so far are transformed into beneficial qualities. For example the aanava or ego becomes arul or
grace. Hence, Tirumular is saying that consciousness
transforms the mala with his daya.
இப்பாடலில் திருமூலர், நந்தி அல்லது இறைவனை சூரியன்
என்கிறார். தந்திரம் ஒன்பதில் அவர் அண்ட ஆதித்தன்
என்ற ஒரு தத்துவத்தை விளக்கும்போது சூரியன் என்பது நாம் வானின் காணும்
நட்சத்திரத்தைத் தவிர உயருணர்வு என்றும் இந்த சூரியன் உடலில் தீக்கும் நீருக்கும் இடையே
தோன்றுகிறது என்றும் கூறுகிறார். இதனால்
குண்டலினி யோகத்தின்போது எழும் உணர்வு நிலையை அவர் குறிப்பிடுவதாகத் தோன்றுகிறது
ஏனெனில் நீரும் தீயும் முறையே சுவாதிஷ்டான சக்கரத்தையும் மணிபூரக சக்கரத்தையும்
குறிக்கின்றன. இப்பாடலின் முதல் வரியில்
தீயையும் கடைசி வரியில் சூரியனை நீர் என்றும் குறிப்பிடுவதால் அவர் இந்தக்
கருத்தைக் கோடிகாட்டுவதாகத் தோன்றுகிறது.
இவ்வுடலை நந்தி வாழும் கோயில் என்று குறிப்பிடும் திருமூலர்
நந்தி தாயினும் தயை உடையவர் என்கிறார்.
அத்தகைய நந்தி தனது மலத்தை மாற்றுவதாகவும் இப்பாடலில் திருமூலர் கூறுகிறார். இப்பகுதியின் முதல் பாடலில் அவர் இறைவன் தனது
களிம்பருத்தான் என்று கூறிவிட்டு இங்கே மலத்தை மாற்றினான் என்று கூறுவது ஒரு
முக்கியமான விஷயத்தைக் காட்டுகிறது. ஆன்மா
தனது ஆன்மீகத் தேடலில் முன்னேறும்போது தடைகளாக இருந்த அதே மலங்கள் உதவும்
உபகரணங்களாக மாற்றப்படுகின்றன. உதாரணமாக ஆணவம்
அருள்சக்தியாக மாறுகிறது என்று திருமூலர் பின்வரும் பகுதிகளில்
குறிப்பிடுகிறார். இவ்வாறு உயருணர்வு
கீழ்க்குணங்களை உயர்குணங்களாக மாற்றுகிறது என்பதை இப்பாடலிலிருந்து
புரிந்துகொள்கிறோம்.