Tuesday, 7 April 2015

1.2.31 When performed it becomes...

Verse 31
ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக் குங்கிழக் குத்திசை எட்டொடும்
ஆற்றுவன் அப்படி ஆட்டலும் ஆமே.

Translation:
The Lord who is the incomparable way,
Praise him, Praise and eulogize him, if you do so
The directions-up and down and the eight
He will grant, you can rule them / he will become the movement also.

Commentary:
The word “aarruthal” has several meaning.  Performing as in “seyal aarruthal” and equivalent as in “vaiyagamum vaanagamum aarral arithu” are some of them. 
Thus, the term “aarrukillaa vazhiyaagum” can be interpreted as “that path which cannot be performed”- because the Divine is attained by its grace and not by any means. All the efforts of the soul are only to prepare itself to receive it but when it occurs is up to the Divine will.
“the path when performed becomes the path of the aa or pasu, the Jiva” and “the incomparable path”. In the previous verse Tirumular mentioned that the path of the Lord is the supreme, true path or meineri.  Hence, it is the path that the soul, the pasu must follow.  When taken together with the term “iraivanai”, the expression means, the Lord who is the means”.  The Lord is the goal and the means.  Then, this expression refers to the pasu becoming pati or the Lord.

Tirumular urges us to praise that Lord.  Then the “lord will grant the ten directions”. That is, one can become the ruler of the world.  It also means the Lord who cannot be perceived will become equivalent to the world, as the manifested world that we can perceive.  Then “aattu” also means dance or movement.  Thus, when praised one can perceive the Lord as the one who causes the movement, action in the world.  One will see him as the Siva who animates the world and as Sakthi who makes it function.

இப்பாடலின் முதல் வரிக்குப் பல பொருள்கள் கூறலாம்.  ஆற்றுதல் என்றால் ஒன்றைச் செய்தல்- செயலாற்றுதல். ஆற்றல் என்றால் ஒத்திருத்தல்- “வையகமும் வானகமும் ஆற்றல் அரிது”- திருக்குறள்.
“ஆற்றுகிலா வழியாகும்” என்பதற்கு செய்வதற்கு அறிய என்ற பொருளை முதலில் பார்ப்போம்.   இறையுணர்வு என்பது இறைவனின் அருளால் ஏற்படுவது, மனித யத்தனம் அதைப் பெறுவதற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள மட்டுமே முடியும்.  அது ஏற்படுவது மனித செயல்பாட்டுக்கு அப்பாற்பட்டது. 
இந்தத் தொடரை “ஆற்றுகில் ஆ வழியாகும்” என்று பிரித்தால், “செய்தால் பசுவின், ஜீவாத்மாவின், வழியாகும்” என்ற பொருள் தோன்றுகிறது.  முந்தைய பாடலில் சிவயோகமே நன்னெறி என்று திருமூலர் கூறியதன் தொடர்ச்சியாக இது விளங்குகிறது.  இத்தொடரை “ஆற்றுகிலா வழியாகும் இறைவனை” என்று கொண்டால் இறைவனே செய்வதற்கு அரிய சிவநெறி, அவனே இலக்கும் வழியுமாகிறான் என்ற பொருள் தோன்றுகிறது.  அல்லது “செய்தால் பசு அடையும் இலக்காகும், பசு செல்லும் வழியாகும் இறைவன்” என்று இதற்குப் பொருள் கூறலாம். இவ்வாறு இது பசு பதி நிலையை அடைவதைக் குறிக்கிறது.


அத்தகைய இறைவனைப் போற்றுமாறு திருமூலர் கூறுகிறார்.  அவ்வாறு போற்றினால் அவன் பத்து திசைகளும் ஆற்றுவான், அப்படியும் ஆட்டலாம் என்கிறார்.  அவ்வாறு போற்றுபவர்க்கு இறைவன் உலகை ஆளக்கூடிய பேற்றை அளிப்பான் (ஆட்டல் என்றால் ஆளுதல்) என்று இதற்குப் பொருள் கூறலாம்.  அல்லது கண்ணால் காண முடியாத இறைவன் பத்து திசைகளுக்கு ஒப்பாவான்,  கண்ணால் காணும் உலகமாகக் காட்சியளிப்பான். அதன் ஆட்டமாகவும் செயல்பாடாகவும் இருப்பான் என்றும் பொருள் கொள்ளலாம்.  இறைவனின் செயல்படும் நிலையை கம்பம் என்று அகத்தியர் தனது பாடல்களில் கூறியுள்ளார்.  கம்பம் என்றால் அசைவு என்று பொருள்.  இவ்வாறு இறைவன் திசைபத்தாக, சிவனாகவும், அவற்றின் செயல்பாடாக, சக்தியாகவும் காட்சியளிக்கிறான் என்று இப்பாடலுக்குப் பொருள் கூறலாம்.

No comments:

Post a Comment