Thursday, 9 April 2015

1.2.32 Praise Isa in any way

Verse 32
அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே. 

Translation:
Father, Nandhi, the unsatiating nectar
The incomparable philanthropist, the first one in the eons
Praise him in any which way.  If you praise him
You can get the gift, the grace of Isa.

Commentary:
After mentioning that the path of the Lord is the right one and to travel in that path one must recite Lord’s thousand names and that he is following this method Tirumular provides solace to those who regret that they do not know Lord’s thousand names.  He says praise the Lord in any fashion.  It is not a particular method that counts.  It is the attitude which matters.  If one does so, one will receive the grace of the Supreme Being.

இறைவன் காட்டிய வழிய மெய்ந்நெறி என்றும் அதனால் அவனை ஆயிரம் நாமம் சொல்லிப் போற்றுங்கள் என்றும் தானும் அதைத்தான் செய்கிறேன் என்றும் கூறிய திருமூலர் இப்பாடலில் “ஐயோ! எனக்கு இறைவனது ஆயிரம் நாமங்கள் தெரியாதே!  நான் என்ன செய்வது?” என்று வருந்தும் மக்களின் துயரைப் போக்குகிறார்.  ஒப்பிலா ஈசனை அவ்வாரேனும் போற்றுங்கள்.  உங்களது மனப்பாங்குதான் முக்கியம், எவ்வாறு அவனை வழிபடுகிறீர்கள் என்ற முறை முக்கியமல்ல.  அவ்வாறு சரியான எண்ணத்தோடு அவனை வணங்கினால் அவனது அருள் என்ற பரிசைப் பெறலாம் என்கிறார் திருமூலர்.

Tuesday, 7 April 2015

1.2.31 When performed it becomes...

Verse 31
ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக் குங்கிழக் குத்திசை எட்டொடும்
ஆற்றுவன் அப்படி ஆட்டலும் ஆமே.

Translation:
The Lord who is the incomparable way,
Praise him, Praise and eulogize him, if you do so
The directions-up and down and the eight
He will grant, you can rule them / he will become the movement also.

Commentary:
The word “aarruthal” has several meaning.  Performing as in “seyal aarruthal” and equivalent as in “vaiyagamum vaanagamum aarral arithu” are some of them. 
Thus, the term “aarrukillaa vazhiyaagum” can be interpreted as “that path which cannot be performed”- because the Divine is attained by its grace and not by any means. All the efforts of the soul are only to prepare itself to receive it but when it occurs is up to the Divine will.
“the path when performed becomes the path of the aa or pasu, the Jiva” and “the incomparable path”. In the previous verse Tirumular mentioned that the path of the Lord is the supreme, true path or meineri.  Hence, it is the path that the soul, the pasu must follow.  When taken together with the term “iraivanai”, the expression means, the Lord who is the means”.  The Lord is the goal and the means.  Then, this expression refers to the pasu becoming pati or the Lord.

Tirumular urges us to praise that Lord.  Then the “lord will grant the ten directions”. That is, one can become the ruler of the world.  It also means the Lord who cannot be perceived will become equivalent to the world, as the manifested world that we can perceive.  Then “aattu” also means dance or movement.  Thus, when praised one can perceive the Lord as the one who causes the movement, action in the world.  One will see him as the Siva who animates the world and as Sakthi who makes it function.

இப்பாடலின் முதல் வரிக்குப் பல பொருள்கள் கூறலாம்.  ஆற்றுதல் என்றால் ஒன்றைச் செய்தல்- செயலாற்றுதல். ஆற்றல் என்றால் ஒத்திருத்தல்- “வையகமும் வானகமும் ஆற்றல் அரிது”- திருக்குறள்.
“ஆற்றுகிலா வழியாகும்” என்பதற்கு செய்வதற்கு அறிய என்ற பொருளை முதலில் பார்ப்போம்.   இறையுணர்வு என்பது இறைவனின் அருளால் ஏற்படுவது, மனித யத்தனம் அதைப் பெறுவதற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள மட்டுமே முடியும்.  அது ஏற்படுவது மனித செயல்பாட்டுக்கு அப்பாற்பட்டது. 
இந்தத் தொடரை “ஆற்றுகில் ஆ வழியாகும்” என்று பிரித்தால், “செய்தால் பசுவின், ஜீவாத்மாவின், வழியாகும்” என்ற பொருள் தோன்றுகிறது.  முந்தைய பாடலில் சிவயோகமே நன்னெறி என்று திருமூலர் கூறியதன் தொடர்ச்சியாக இது விளங்குகிறது.  இத்தொடரை “ஆற்றுகிலா வழியாகும் இறைவனை” என்று கொண்டால் இறைவனே செய்வதற்கு அரிய சிவநெறி, அவனே இலக்கும் வழியுமாகிறான் என்ற பொருள் தோன்றுகிறது.  அல்லது “செய்தால் பசு அடையும் இலக்காகும், பசு செல்லும் வழியாகும் இறைவன்” என்று இதற்குப் பொருள் கூறலாம். இவ்வாறு இது பசு பதி நிலையை அடைவதைக் குறிக்கிறது.


அத்தகைய இறைவனைப் போற்றுமாறு திருமூலர் கூறுகிறார்.  அவ்வாறு போற்றினால் அவன் பத்து திசைகளும் ஆற்றுவான், அப்படியும் ஆட்டலாம் என்கிறார்.  அவ்வாறு போற்றுபவர்க்கு இறைவன் உலகை ஆளக்கூடிய பேற்றை அளிப்பான் (ஆட்டல் என்றால் ஆளுதல்) என்று இதற்குப் பொருள் கூறலாம்.  அல்லது கண்ணால் காண முடியாத இறைவன் பத்து திசைகளுக்கு ஒப்பாவான்,  கண்ணால் காணும் உலகமாகக் காட்சியளிப்பான். அதன் ஆட்டமாகவும் செயல்பாடாகவும் இருப்பான் என்றும் பொருள் கொள்ளலாம்.  இறைவனின் செயல்படும் நிலையை கம்பம் என்று அகத்தியர் தனது பாடல்களில் கூறியுள்ளார்.  கம்பம் என்றால் அசைவு என்று பொருள்.  இவ்வாறு இறைவன் திசைபத்தாக, சிவனாகவும், அவற்றின் செயல்பாடாக, சக்தியாகவும் காட்சியளிக்கிறான் என்று இப்பாடலுக்குப் பொருள் கூறலாம்.

Monday, 6 April 2015

1.2.30 The true path is...

Verse 30
சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்
வேந்தன் அமரர்க் கருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே. 

Translation:
Like the fragrance of the musk deer
The path offered by the King, for the liberated souls, is the true path
The thousand names that glow like the flame
I am praising while walking and remaining.

Commentary: After saying in the previous verse that people do not know the right path that would lead them to Siva Tirumular affirms that the path shown by the Lord, the King to the liberated souls is the true path.  He adds that, hence, he is reciting the thousand names of the Lord at all times- while walking and remaining, that is while being active as well as while being inactive.


முந்தைய பாடலில் மக்கள் இறைவனை அடைய சரியான வழி எது என்று தெரியாமல் மனம் வாடுகின்றனர் என்று கூறிய திருமூலர் இப்பாடலில் அரசனான இறைவன் அமரர்கள் எனப்படும் முக்தி பெற்றவர்களுக்கு அருளிய பாதையே மெய்ந்நெறி என்கிறார்.  அதனால்தான் தான் இருக்கும்போதும் நகரும்போதும் அவனது ஆயிரம் நாமங்களைப் பாடியபடி உள்ளேன், அதாவது செயல்புரியும்போதும் செயலற்று இருக்கும்போதும் அவனது நாமத்தைக் கூறியபடி உள்ளேன் என்கிறார் அவர்.

1.2.29 They do not know the path, they remain sad


Verse 29
பதிபல வாயது பண்டிவ் வுலகம்
விதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார்
துதிபல தோத்திரஞ் சொல்லவல் லாரும்
மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே.
Translation:
This ancient world has several loci/leaders
Creating several rules they do not know the truth
Even those who are capable of singing several praises
Are stupid, they feel sad in their hearts.
Commentary: Tirumular says that there are several who claim that they are the lords of this world. People also claim that there are several gods who are the supreme. Such people stipulate several rules for living, for rituals, for worship and for liberation. However, none of them know the truth. They do not know the true nature of the Lord, the true worship, or what liberation really means. Hence, they are sad in their hearts.
இவ்வுலகில் பலர் தாம்தான் எஜமான் என்று கூறுகின்றன. மேலும் பலர் பல தெய்வங்களைக் காட்டி யார் உயர்ந்தவர் என்று சண்டை போட்டுக்கொள்கின்றனர். இந்த மக்கள் சடங்குகள், வழிபாடு முக்தி ஆகியவற்றைப் பற்றித் தான்தோன்றித் தனமான விதிகளை ஏற்படுத்துகின்றனர். இவர்களில் ஒருவருக்கும் உண்மை தெரியவில்லை, யார் இறைவன், எவ்வாறு அவரை வழிபடுவது, முக்தி என்றால் உண்மையில் என்ன என்பது இவர்களுக்குத் தெரிவதில்லை. அதனால் அவர்கள் மனநிம்மதியற்று மனம்வாடுகின்றனர்.